பொதுத்தமிழ் - III
201. அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை - ஏழு
202. இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர் - வினைத் தொகை
203. குண்டலகேசி எந்த சமயக் காப்பியம் - பவுத்தம்
204. "குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார் - மாதவையா
205. "நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார் - சுந்தரம் பிள்ளை
206. கம்பராமாயணத்தின் முதல் பகுதி - பாலகாண்டம்
207. கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன - பரதன்
208. பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது - வள்ளைப்பாட்டு
209. 'தொப்பி' என்பது - இந்துஸ்தானிச் சொல்
210. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்
211. வீரமாமுனிவர் இயற்பெயர் - கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
212. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின் முல்லை
213. கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்
214. முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி
215. 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்
216. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11
217. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்
218. உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்
219. திருக்குறளில் தனிமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்
220. தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை
221. தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்
222. பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்
223. நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்
224. சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்
225. வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்
226. தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்
227. புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை
228. ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா
229. சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து
230. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் - தேவநேயப் பாவாணர்
231. இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்
232. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை - சமதக்கினி
233. தொல்காப்பியரைவைதிக முனிவர் என்று சுட்டுபவர் - தெய்வச்சிலையார்
234. தொல்காபிய உரைவளத் தொகுப்பு - ஆசிவலிங்கனார்
235. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் - வீரமாமுனிவர்
236. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
237. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே எனும் நூல் - தொல்காப்பியம்
238. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு
239. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் - கோபால கிருஷ்ணபாரதியார்
240. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு - கிபி1880
241. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அருஇராம நாதன்
242. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் - நந்திக்கலம்பகம்
243. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
244. நம்மாழ்வார் (மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
245. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்
246. நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது - இரண்டு
247. தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
248. இலைமறை காய் போல் - மறைபொருள்
249. மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
250. விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
251. சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
252. உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
253. மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
254. இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
255. குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
256. வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
257. வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
258. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
259. சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
260. அனலில் விழுந்த புழுப்போல - தவிப்பு
261. கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
262. அமக்களம் என்பதின் பிழைத்திருத்தம் - அமர்க்களம்
263. நோம்பு என்பதின் பிழைத்திருத்தம் - நோன்பு
264. பண்டகசாலை என்பதின் பிழைத்திருத்தம் - பண்டசாலை
265. பேரன் என்பதின் பிழைத்திருத்தம் - பெயரன்
266. முழுங்கு என்பதின் பிழைத்திருத்தம் - விழுங்கு
267. மோர்ந்து என்பதின் பிழைத்திருத்தம் - மோந்து
268. வெங்கலம் என்பதின் பிழைத்திருத்தம் - வெண்கலம்
269. ஒத்தடம் என்பதின் பிழைத்திருத்தம் - ஒற்றடம்
270. கடப்பாறை என்பதின் பிழைத்திருத்தம் - கடப்பாரை
271. கட்டிடம் என்பதின் பிழைத்திருத்தம் - கட்டடம்
272. குடும்பி என்பதின் பிழைத்திருத்தம் - குடுமி
273. துளிர் என்பதின் பிழைத்திருத்தம் - தளிர்
274. நாத்தம் என்பதின் பிழைத்திருத்தம் - நாற்றம்
275. பெறகு என்பதின் பிழைத்திருத்தம் - பிறகு
276. முகந்து என்பதின் பிழைத்திருத்தம் - முகர்ந்து
277. அது அல்ல என்பதின் பிழைத்திருத்தம் - அது அன்று
278. 421 அடமழை என்பதின் பிழைத்திருத்தம் - அடைமழை
279. அகண்ட என்பதின் பிழைத்திருத்தம் - அகன்ற
280. அதுகள் என்பதின் பிழைத்திருத்தம் - அவை
281. ஆத்துக்கு என்பதின் பிழைத்திருத்தம் - அகத்துக்கு
282. இன்னிக்கி என்பதின் பிழைத்திருத்தம் - இன்றைக்கு
283. வெண்ணை என்பதின் பிழைத்திருத்தம் - வெண்ணெய்
284. இத்தினி என்பதின் பிழைத்திருத்தம் - இத்தனை
285. உருச்சி என்பதின் பிழைத்திருத்தம் - உரித்து
286. உந்தன் என்பதின் பிழைத்திருத்தம் - உன்றன்
287. கடக்கால் என்பதின் பிழைத்திருத்தம் - கடைக்கால்
288. வென்னீர் என்பதின் பிழைத்திருத்தம் - வெந்நீர்
289. கோடாலி என்பதின் பிழைத்திருத்தம் - கோடரி
290. சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்
291. தமிழின் முதல் உலா நூல் எது - திருக்கயிலாய ஞான உலா
292. திருமுறைகளுள் பழமையானது எது - திருமந்திரம்
293. பதினோறாம் திருமுறையின் வேறு பெயர் - பிரபந்தமாலை
294. கோவைக் கலித்துறை என்பது - கட்டளைக் கலித்துறை
295. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் - நன்னூல்
296. வேளாண் வேதம் எனப்படும் நூல் - நாலடியார்
297. பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் - பரிபாடல்
298. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு
299. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் - திருமூலர்
300. ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல் - தக்கயாகப் பரணி