Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஐரோப்பியர்கள் (Europeans)  வருகை Test Yourself Page: 2
55493.கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. 1700 களில் தமிழகம் உணவு தானியங்களை ஆந்திரப் பிரதேசத்தில் இருந்தும் வங்காளத்தில் இருந்தும் இறக்குமதி செய்தது.
II. குஜராத் மேற்கு கடற்கரை பகுதிகளில் மிளகு, லவங்கம், இஞ்சி ஆகியவற்றுக்குப் பதிலாக உணவு தானியங்களை மலபார் பகுதிக்கு ஏற்றுமதி செய்தது.
III. இலங்கையிலும், பட்டாவியாவிலும்(இந்தோனேஷியா திரும்ப டச்சு குடியேற்றங்களுக்கும் உணவு தானியங்கள் அனுப்பப்பட்டன.
I, II மட்டும் சரி
II, III மட்டும் சரி
I, III மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

1700 களில் உணவு தானிய பயிர்களுடன், கூடுதலாக கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி, அவுரி முதலிட்ட வணிகப் பயிர்களும் பயிர் செய்யப்பட்டன. இந்தியாவிற்குள் உபரியான பகுதிகளிலிருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு உணவு தானியங்கள், நெய், சர்க்கரை முதலான உணவுப் பண்டங்களை கொண்டு சென்றதன் மூலம் விறுவிறுப்பாக வணிகம் நடந்தது
55494.கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
I. நெசவுத்தொழில் பெரும்பாலும் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது.
II. படிகாரம் போன்ற வேதியல் பொருட்களைப் பயன்படுத்தி நிரந்தர வண்ணங்களை தயாரித்து துணிகளுக்கு சாயமிடுவதில் இந்திய கைவினை சமூகங்கள் சிறப்பான அறிவையும், நிபுணத்துவத்தையும் பெற்று இருந்தன.
III. நெசவுத்தொழில் நாட்டின் இரண்டாவது முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்தது.
I, II மட்டும் சரி
II, III மட்டும் சரி
I, III மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

நூல் நூற்றலும், சாயத் தொழிலும் நெசவுத் தொழிலின் ஆதாரத்துறை நடவடிக்கைகளாக இருந்தன. கைவினை பொருள் உற்பத்தி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டிலும் நடைபெற்றது.
55495.பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுள் மிக முக்கியமானவை கீழ்க்கண்டவற்றுள் எது?
துணி
சணல்
பருத்தி
சாயம்
Explanation:

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் மிக முக்கியமானவை துணிகளேஆகும். சோழ மண்டலப் பகுதி வண்ணம் பூசப்பட்ட கலம்காரி எனப்படும் துணி வகைகள் பெயர் பெற்றதாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் மிகவும் விரும்பி வாங்கும் நுகர்வு பொருளாக விளங்கியது.
55496.மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த____________ என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார்.
பிரான்சிஸ் மார்டின்
பிரான்சிஸ் வில்லியம்
பிரான்சிஸ் சேவியர்
பிரான்சிஸ் டேவிட்
Explanation:

1673இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது. மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ் மார்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். இந்தியாவில் பிரஞ்சு குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்
55497.கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 - பல்வேறு நிலைகளில் செயல்பட்ட பல்வகைப்பட்ட சந்தைகளை போலவே வணிகர்களும் ஒரே வகைப்பட்ட குழுவை சார்ந்தவர்கள் அல்ல.
கூற்று 2 - சிறிய இடங்களில் இருந்த சந்தைகளுக்கு சேவை செய்ய வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் இருந்தனர்.
கூற்று 3 - வணிக நடவடிக்கைகளை ஒரு பிரமிடாக நாம் கற்பனை செய்துகொண்டால், பிரமிடின் உச்சத்தில் பெரும் வணிகர்கள் இருந்தனர்.
கூற்று 1, 2 மட்டும் சரி
கூற்று 2, 3 மட்டும் சரி
கூற்று 1, 3 மட்டும் சரி
எல்லா கூற்றுகளும் சரி
Explanation:

பெரும் வர்த்தகர்கள் பெருமளவிலான மூலதனத்தை கையிருப்பாக கொண்ட இவர்களே கடல் வணிகத்தை முன்நின்று இயக்கியதோடு, துறைமுகங்களின் கடலோரப் பகுதியை சேர்ந்த உற்பத்தியாளர்களையும் கட்டுப்படுத்தினர். இவர்கள் தங்களின் கீழ் தரகர் களையும் துணைத் அரக்கர்களையும் பணியமர்த்தி உள்நாட்டுப் பகுதிகளிலும் துறைமுக நகரங்களில் உள் பகுதியிலோ உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்தனர்
Share with Friends