Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group-VIII இந்துமதம் இந்து மத உட்பிரிவுகள்

4. இந்து மத உட்பிரிவுகள்

* நமது இந்தியாவில் இந்து மதம் ஒன்றே எனினும் அதில் பல கிளைகள் உள்ளன.
* இந்து மதத்தில் மாறுபட்ட சில கொள்கைகள் கொண்டவர்களும் உள்ள னர்.
* இந்து மதத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுகின்ற கொள்கையாளரும் உள்ளனர்.

இந்து மத சமயங்கள் நான்கு வகைப்படும்:
1. புறப்புறச் சமயங்கள்
2. புறச்சமயங்கள்
3. அகப்புறச்சமயங்கள்
4. அகச் சமயங்கள்

* இந்துமத ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் அடித்தளம் அமைப்பதாய் இருக்குமாதலின் இந்துமதக் கிளை மதங்கள் ஒவ்வொன்றினுடைய கொள்கைகளை எடுத்துக்கூறி நடுநிலையோடு ஆராய்ந்து ஒரு முடிவான கொள்கைகளை எடுத்துக்கூறி அமைப்பது இந்து சமய அறிஞரின் கட்டுப்பாடாகும்.

கடவுள் இல்லையெனக் கூறும் சமயங்கள் ஐந்து வகை
1. உலகாயதம்
2. பௌத்தம்
3. சமணம்
4. சாங்கியம்
5. மீமாம்ஸம்

(1) உலகாயத மதக் கொள்கைகள் :
* ஐம்பெரும் பூதங்களான நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கு பூதங்களே உள்ளன.

* நான்கு பூதங்களும் சேர்ந்தே உடம்பு உண்டாகி அவற்றிலிருந்து அறிவு உண்டாகும்.

* நல்ல பெண்களை மணந்து அவரோடு இன்பம் நுகர்வதே முத்தி என்பதே “சாருவாகம்" எனப்படும்.

* உலகாயத மதக்கொள்கை உடையவர்கள் கண்ணால் கண்டதையே நம்புவார்கள் என்பதற்கு "காட்சிவாதம்" அல்லது "நாஸ்திகவாதம்" எனவும் கூறுவர். இக்கொள்கையுடைய சிலர் உடம்பை ஆன்மா எனவும் கூறுவர்.

* வேறு சிலர் பிராண வாயுவே ஆன்மா என்றும், மனம், புத்தி, சித்தம், அகங்காரங்களாகிய அந்தக்கரணங்கள் அல்லது உட்கருவிகளே “ஆன்மா" எனவும் கூறுகின்றனர். இன்பம் என்பது தன்னிடத்திருந்தே எழுகின்ற உணர்வே ஓர் உணர்வாகும். ஒரு பொருளை கண்டறிவதற்கு மூன்று அளவைகள் உள்ளன. அவை காண்டல் அளவை, கருதல் அளவை, நூல் அளவை என்பதாகும்.

* மின்சாரத்தைக் கண்ணால் காண முடியாது. ஆனால் மின்சாரம் செய்யும் வேலையால் அது உண்டென உணர்கிறோம். அது போலவே கடவுளைக் கண்ணால் காணமுடியவில்லை எனவும் கூறுவர்.

* இந்திரியங்கள்(மெய், வாய், கண், மூக்கு, செவி ) ஆன்மாவாகும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

* ஐந்து இந்திரியங்கள் வேறாக ஒன்ற இருந்து அவற்றைச் செய்விப்பதே "ஆன்மா" என்பதாகும்.

(2) புத்த மதம் :
* கி.மு.6-ம் நூற்றாண்டில் புத்தர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதம் "புத்த மதம்" எனப்படும்

* புத்தர் என்ற சொல்லுக்கு அறிஞர் என்றுப் பொருள்

* ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதால் உலக மக்களின் துன்பத்தை நீக்க முயன்றார்.

* இவர் போதனை அடங்கிய நூலுக்கு "பீடக நூல்" என்று பெயர்.

* ஹீனயானம் என்பது பெளத்த சமயத்தின் பெரிய உட்பிரிவாகும். புத்த மதத்தின் இந்து சமய நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்டது.

* புத்தரின் நல்லொழுக்க நெறிகளை வலியுறுத்துவது ஹீனயான புத்த சமயமாகும்.

* ஹீனயான புத்த சமயம் அசோகர் காலத்தில் கிளைத்தது.

புத்தரின் வாழ்க்கை வரலாறு:
* புத்தரின் இயற்பெயர் - சித்தார்த்தர்
* புத்தர் பிறந்த இடம் - கபிலவஸ்து (லும்பினி வனம்)
* சாக்கிய முனி எனப்படுபவர் - புத்தர்
* புத்தர் பிறந்த ஆண்டு - கி.மு.567
* புத்தர் தந்தை பெயர் - சுத்தோதனார்
* புத்தரின் மரபு - சாக்கிய மரபு
* புத்தர் தாயார் பெயர் - மாயா தேவி
* புத்தரின் வளர்ப்புத்தாய் - மகா பிரஜாபதி கௌதமி
* புத்தரின் மனைவி பெயர் - யசோதரா
* புத்தரின் மகன் பெயர் - இராகுல்
* புத்தரின் முதல் குரு - அரதகலமா
* புத்தரின் இரண்டாவது குரு - ருத்ரகா
* புத்தர் துறவறம் பூண்டது - 29-ம் வயதில்
* புத்தர் உண்மைய தேடி அலைந்தது - 7 ஆண்டுகள்
* புத்தர் தியான நிலையில் இருந்தது - 12 ஆண்டுகள்
* புத்தர் இறந்த இடம் - குசிநகரம்
* புத்தர் இறந்த ஆண்டு - கி.மு.487
* புத்தர் இறக்கும் போது வயது - 80
* புத்தரின் சீடர்கள் - சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், கசபர், உபாலி
* புத்த மதத்தின் இரு பிரிவுகள் - ஹீனயாணம், மகாயாணம்
* புத்தரின் போதனைகள் - திரிபீடகங்கள் 1. சுத்த பீடகம் 2. வினய பீடகம் 3. அபிதம்ம பீடகம்
* புத்தரின் போதனைகளான திரிபீடகங்கள் எழுதப்பட்ட மொழி - பாலி
* புத்தரின் கோட்பாடுகளின் அகற்றுதல் முக்கிய கருத்து - அறியாமை
* துயரங்களிலிருந்து விடுபட பின் பற்றிய முறை - எண்வழிப்பாதை

புத்தரின் நான்கு சீரிய உண்மைகள்
* இவ்வுலகம் துன்பமயமானது, பிறப்பு, பிணி, சாக்காடு, பிரிவு அனைத்தும் நமக்குத் துன்பத்தையும் தொல்லையையும் கொடுக்கின்றன.

* எல்லா துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் காரணம் ஆசையே.

* ஆசையை அழித்துவிட்டால் துன்பங்கள் அறவே அகன்றுவிடும். துன்ப நீக்கத்திற்கு நான்காவது உண்மையில் புத்தர் எண்வகை வழிகளை மேற்கொள்ளக் கூறுகிறார். இந்நெறியைக் கடைப்பிடித்தால் ஆசைகளை ஒழித்து துன்பங்களினின்று விடுபட்டு நிர்வாண நிலையை அனைவரும் அடையலாம்.

புத்தரின் நெறிமுறைகள் எட்டு :
1. நன்னம்பிக்கை - Right View
2. நல்லெண்ணம் - Right Thought
3. நன்மொழி - Right Speech
4. நற்செய்கை - Right Conduct
5. நல்வாழ்க்கை - Right Livelihood
6. நன்முயற்சி - Right Effort
7. நற்கடைப்பிடி - Right Mindfulness
8. நற்தியானம் - Right Meditation

புத்த மதம் கூறு நற்குணங்கள் பத்து :
1. நல்ல வார்த்தை பேசுதல்
2. மெய் பேசுதல்
3. இனியன கூறல்
4. பயன்படுவன சொலல்
5. புள்ளிவலம் வருதல்
6. துவம்புரிதல்
7. துனாம் செய்தல்
8. அருள் நினைவு
9. ஆசை துறத்தல்
10. தவப்பற்று

புத்த மதம் கூறும் தீக்குணங்கள் பத்து :
1. பொய் சொல்லல்
2. கோள் சொல்லல்
3. கோபித்து பேசுதல்
4. பயனல்ல பேசுதல்
5. களவு
6. வீணான வேலை செய்தல்
7. காலை
8. தீயன நினைத்தல்
9. தீயன ஆசைப்படுதல்
10. காமப்பற்று
புத்தரின் சமய மாநாடுகள் :


புத்த மத பிரிவுகள் - மூன்று வகை:
ஹீனயானம்:
* புத்தரின் கொள்கையை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள்.
* உருவ வழிபாடு கிடையாது.

மகாயானம்:
* புத்தரையே கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள்

வஜ்ரயானம்:
* வஜ்ரயானம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு நீட்சியாக கருதப்படுகிறது.

(3) சமணம்:
* இந்தியாவில் உள்ள பழம்பெரும் சமயங்களுள் சமண சமயம் ஒன்றாகும்.

* பழமையான ரிக் வேத மந்திரங்களில் இரு சமண தீர்த்தங்கரர்களைப்பற்றி தெளிவான குறிப்புகள் உள்ளன.

* சமண மதத்தை “ஆறுகதம், ஜைனம்" எனவும் கூறுவர். சமண மதத்தில் கூறப்படும் பொருள் ஏழு வகைப்படும். (சீவன், அசீவன், ஆச்சிரவம், சமுவரம், நிர்ச்சரம், பந்தம் மற்றும் வீடு என்பனவாகும்)

* சீவன் அநாதி சித்தன், முத்தன், பெத்தன் என மூன்று வகை உண்டு . அநாதி சித்தனே அருகக் கடவுள் என்பதாகும் முத்தன் ஆசாபாசம் நீக்கிக் கட்டுறுத்தவன்

* பெத்தன் ஆசை முதலியவற்றால் கட்டுண்டவன் என்பதாகும். சீவன் ஆசாபாசம் விட்டு சுதந்திரம் அடைந்து அனந்தஞானம் முதலிய எட்டுக்குணங்களைப் பெற்று உலகம் கடந்து எல்லையில்லா ஆகாயத்தில் மேல்நோக்கிச் சென்று அம்மேலிடத்தில் இருப்பதுவே முத்தியாகும் என்பர். தீர்த்தம் என்பது ஆறு குளத்தின் துறை என்று பொருள்படும். கரையில் துறையில் மக்களை ஏற்றியவர்கள் தீர்த்தங்கரர் மயே லெ எனப்படுவார்கள்.

* சமண சமயத்தில் 24 தீர்த்தங்கரர்களின் போதனைகள் அடங்கியது "சமணம்" ஆகும்

* முதல் 22 தீர்த்தங்கரர்களைப்பற்றிய வரலாறு கிடைக்கப்பெறவில்லை.

23-வது தீர்த்தங்கரர் - பார்சவ நாதர்
24-வது தீர்த்தங்கரர் - மகா வீரர்

23-வது தீர்த்தங்கரர் - பார்சவ நாதர்:
* பார்வசநாதர் உயிர்க்கொலை கூடாது, பொய் பேசுதல் கூடாது, சொத்துக்கள் பெற்றிருத்தல் கூடாது. திருடுதல் கூடாது என்ற நான்கு உண்மைகளை உலகம் அறிந்து ஏற்று வாழும்படிச் செய்தார்.

* பக்தர்கள் வெண்ணிற ஆடை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

* மகாவீரரின் பெற்றோரும் பார்சவநாதரது போதனைகளைப் பின்பற்றியதாய்த் தெரிகிறது.

சமண சமயத்தின் சொல்விளக்கம்:
* ஜீனரின் வழிச் செல்பவர்கள் ஜெயினர் - சமணர் எனப்பட்டனர். ஜீன் என்பது ஜீத் என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது. ஜீத் என்பதற்கு ஜெயித்தல், வெற்றிப்பெறுதல் என்பது பொருள். ஜீனன் என்றால் வெற்றி கண்டவன் - அதாவது தனது மனதையும் பொறிகளையும் அடக்கி வெற்றி கண்டவர் என்பது பொருள். அத்தகைய ஜீனர்களைக் கொண்ட சமயமே சமண சமயம்.

தீர்த்தங்கரர்:
* தீர்த்தம் என்பது ஆறு - குளத்தின் துறை என்று பொருள். தெய்வத் தன்மையும், மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனதில் உள்ள அறியாமை மற்றும் அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீச கரையேற்றுபவர்கள் ஆவர்.

* தான் கண்ட நெறியைப் பிறருக்குப் பயன்பட உதவியவர்கள் என்று பொருள் கொள்ளலாம்.

சமண சமயப் இரண்டு பிரிவுகள் :
* திகம்பரர்கள்
* சுவேதம்பரர்கள்

திகம்பரர் :
* திகம்பரர் - திக் ஸ்ரீ அம்பரம் - திக் - திசை , அம்பரம் - ஆடை, ஆடை அணியாதோர்(ஆடை துறந்தோர்) என பொருள்படும்.

* எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான்.

சுவேதம்பரர்:
* வெண்ணிற ஆடை அணிவோர் சுவேதம்பரர் என்று அழைக்கப்பட்டனர்.

* சுவேதம் - தூய்மையான வெண்ணிறம் என்பது பொருள்.

24-வது தீர்த்தங்கரர்- வர்த்தமான மகாவீரர் வரலாறு:
* மகாவீரர் இயற்பெயர் - வர்த்தமானர்
* மகாவீரர் - 24வது தீர்த்தங்கர் (கடைசி துறவியும் ஆவர்)
* மகாவீரரின் வேறு பெயர் - வீரா, வீரப்பிரவு, சன்மதி,அதிவீரர் மற்றும் ஞானப்புதிரர்
* வரலாற்று நாள் - கி.மு.599 முதல் கி.மு.527 வரை(72 ஆண்டுகள்)
* தந்தை - சித்தார்த்தர்
* தாயார் - திரிசலா
* மனைவி - யசோதை
* மகள் - பிரியதர்சனா
* பிறந்த இடம் - குண்டாக் கிராமம் (வைசாலிக்கு அருகில் - இந்தியா)
* பிறந்த வருடம் - கி.மு. 546- ல் பிறந்ததாக கூறும் டாக்டர் இராதா குமுத் முகர்ஜி குறிப்பிடுகிறார்
* மகாவீரர் பரம்பரை - இச்வாகு

* துறவறம் மேற்கொண்டது - 30-வது வயதில் (மகள் பெற்ற பின்னர்) பன்னிரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்தார். பதின்மூன்றாம் ஆண்டில் இரிஜீபாலிகா என்னுமிடத்தில் சால் மரத்தினடியில் நிர்வாணம் எனப்படும் உயர் நிலையை அடைந்தார்.

* மகாவீரர் முக்தி அடைந்தது - கி.மு.468ல் 72 ஆம் வயதில் பாவபுரி (பீகார்) என்னுமிடத்தில் உயிர் நீத்தார்.
* மகாவீரர் சமண சமயத்தை கருத்தை போதித்த நாடுகள் - மகதம், கோசலம்

மகாவீரரின் சமணக் கொள்கைகள்;
* பார்சவநாதர் உலகிற்கு அளித்த அகிம்சை, சத்யம், அஸ்தேயம்,அபரிக்ருகம் என்ற நான்குடன் மகாவீரர் பிரம்மசரியம் எனப்படும்.

* தன்னடக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

* கடவுள் என்ற ஒருவர் இல்லை வெ உலகம் இயற்கையாக இயங்குகிறது என்பதை வலியறுத்தினார்.

சமணக் கோட்பாடுகள்:
* வினைப் பயனிலிருந்து விடுதலை பெற்று நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும்.

*மும்மணிகள் அல்லது மூன்று இரத்தினங்கள் என்னும் உயரிய நெறிகளை பின்பற்ற வேண்டும்.

* மும்மணிகளாவன நன்னம்பிக்கை, நல்லறிவு, நல்லொழுக்கம் என்பனவாகும்.

நன்னம்பிக்கை:
* வீடு பேற்றினை அடைய வர்த்தமான மகாவீரர் போதித்த ஏழு தத்துவங்களிலும் முழுமையான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

* இதுவே நல்ல நம்பிக்கை எனப்பட்டது. இதனை “சம்யக் தரிசனம்" எனவும் வழங்குவர்.

நல்லறிவு:
* இந்த உலகத்தை யாரும் படைக்கவில்லை, இது இயற்கையாகத் தோன்றியது என்றும், முழுமையான ஞானம் அல்லது சம்யக்ஞானம் பெற்று பொருள்களைப் புரிந்து கொள்வதே நல்லறிவாகும்.

நற்செயல்:
* கொல்லாமை, பொய்பேசாமை, திருடாமை, சொத்து சேர்க்காமை, கற்புடமை ஆகும். இதனை " சம்யக் சாரித்திரம்” எனப்படும்.

மகாவீரரின் ஐந்து நெறிகள் :
அகிம்சை:
* சமணர்களின் அடிப்படை கோட்பாடுகளான இன்னா செய்யாமை, அருளுடைமை, புலால் மறுத்தல் ஆகிய நான்கும் இணைந்த "அகிம்சையே" சமணம் என்பதாகும்.

* சமணர்களின் அறங்களுள் அகிம்சையே தலை சிறந்ததாகும்.

* சிந்தை, சொல், செயல் இவற்றால் பிற உயிர்க்கும் துன்பம் இழைக்காமல் அன்பையும் கருணையையும் காட்டுவதே அகிம்சை ஆகும்.

அகிம்சையின் ஐந்து பெரும் நோன்புகள் அல்லது பஞ்சமஹாவிரதம்:
* அகிம்சை அல்லது இன்னா செய்யாமை
* சத்யா அல்லது வாய்மை
* அஸ்தேய அல்லது பிறர் பொருளை கவராமை
* அப்பரிகிரஹா அல்லது பற்று பாசம் இவற்றிலிருந்து விடுபடுவது
* பிரம்மச்சரியம் அல்லது ஐம்புலன்களையும் அடக்கியாளுகின்ற தன்னடக்கம்.

(4) சாங்கியம்:
* இம்மதத்தை தோற்றுவித்தவர் கபிலர் ஆவார். இம்மதத்தில் இறைவன் ஒருவன் இல்லையெனவும் மூலப்பகுதியில் ஆன்மாவும் உண்டு என்றும் கூறப்படுகிறது. சாங்கியம் தத்துவத்தில் இருபத்து நான்காவதாகும் முக்குணங்களின் சேர்க்கையால் மட்டுமே இந்த உலகம் உருவானது என்பது இத்தத்துவத்தின் கொள்கையாகும். பிரகிருதி (இயற்கை ), புருடன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை . உலகத் தோற்றம் (படைப்பு) படைப்பு குறித்தான கருத்துக்களை மட்டும் அத்வைத வேதாந்திகள் ஏற்றுக் கொள்கின்றனர்.

சாங்கியம் கூறும் 28 (3+9+11+5) தத்துவங்கள்:
* சத்துவ குணம் , இராட்சத குணம் , தாமச குணம் எனும் முக்குணங்கள் சேர்ந்த மூன்று தத்துவங்கள்.

* புருஷன் ( அறிவுள்ள வஸ்து), பிரகிருதி (இயற்கை ), மஹத் தத்துவம், அகங்காரம் மற்றும் பஞ்சபூதங்கள் எனும் ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி எனும் ஒன்பது தத்துவங்கள்.

* ஐந்து ஞானேந்திரியங்களான, காது, தோல், கண், மூக்கு, நாக்கு, எனும் ஐந்துடன், ஐந்து கர்மேந்திரியங்களான, வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய் எனும் ஐந்து கர்மேந்திரியங்கள், இவற்றுடன் 'மனம்' (மனதை ஞானேந்திரியமாகவும் அல்லது கர்மேந்திரியமாகவும் கொள்ளலாம் ) சேர்த்தால் பதினொரு தத்துவங்கள். சப்தம் (கேட்கும் சக்தி ), ஸ்பர்சம் (தொடு உணர்வு ), ரூபம் (பார்க்கும் திறன்), இரஸம் (சுவைக்கும் உணர்வு), கந்தம் (வாசனை அறியும் சக்தி ) எனும் ஞானேந்திரியங்களின் ஐந்து விசேஷ சேர்க்கை சேர்த்தால் ஐந்து தத்துவங்கள்.

(5) மீமாம்சம்
* மீமாம்சம் என்பது "வேதம் அநாதி" ஆகும்
* மீமாம்சம் இயற்றியவர் "ஜைமினி" ஆவார்
* பிராமணம், வினை, மோட்சம் முதலியவற்றைத் தரும்
* கடவுள் உண்டென்பது பொய் உலகம் தோன்றி அழியும் என்பதும் பொய்யாகும்
* உலகம் நிலைபெற்று விளங்கும் எனக் கூறுவர்.

பிரிவுகள் :
1. பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம்)
2. உத்திர மீமாம்சம்( ஞான காண்டம்)

* பூர்வ மீமாம்சம் நான்கு வேதங்களுக்கும் பொருள் கூறுவதாக உள்ளது

* உத்திர மீமாம்சத்தை தொகுத்தவர் வியாசர். நான்கு வேதங்களுக்கு இறுதியிலுள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர்.

* பூர்வ மீமாம்சர்கள் ஞானகாண்டத்தை இகழ்ந்து கர்மகாண்டத்தைக் கைகொள்வர் பிரபாகர மதத்தினர் ஞானம் கெட்டபோது கல்போல் கிடப்பதே முத்தி" என்பர்

* பௌத்தம், சமணம் முதலிய மதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் இந்து மதத்தில் உள்ளனவாகும்.

* சைவப் பெரியார்கள், அத்வைதத்தினர், வைணவத்தினர் துவைதத்தினர் இம்மதத்தில் கடவுள் இல்லையென கண்டித்தார்கள்.

வைசேடிகம் :
* வைசேடிகம் என்பது இந்திய மெய்யியலில் வேதத்தை ஏற்கும் ஆறு முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.

* கணாதன் எனப்படும் கண்புஜா என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம்.

* ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர்.

* இந்திய தத்துவவியலில் தர்சனம் எனும் சொல் முதன் முதலில் வைசேடிக தத்துவ நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தத்துவ அறிஞர் தாஸ் குப்தா கூறுகிறார்.

கணபுஜா:
* கணபுஜா என்பதற்கு அணுக்களை உண்பவர் என்று பொருள்

* அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தானியங்களை பொறுக்கி அதனை சமைத்து உண்பவர்.

தத்துவம்:
* வைசேடிக தத்துவத்தில் ஒரு பொருளை நன்கு அறியும் அறிவுக்கு பிராமாணம் என்று பெயர்.
* வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது.
1. உணர்தல் (நேரில் பார்த்து உணர்தல்) (பிரத்தியட்சம்),
2. ஊகம் (அனுமானம்)
3. உவமை
4. வாய்சொல்
* வைசேடிக சூத்திரத்தின் தொகுப்பு கிடைக்கப் பெறவில்லை . இருப்பினும் பௌத்த சமயம் மற்றும் சமண சமய நூல்களிலிருந்து, வைசேடிக சூத்திரத்தின் சில விளக்கங்கள் அறிய இயலுகிறது.

வைசேடிகத்தின் உரைநூல்கள்:
* இராவண பாஷ்யம் ரசஸ்பாதர் என்பவர் எழுதிய பதார்த்த தர்ம - சங்கிரகம் என்ற நூல் வைசேடிக தத்துவத்தை விளக்குவதாக உள்ளது.

நியாயா - வைசேடிக கலப்புத் தத்துவம்:
* கி. பி., 200-ஆம் ஆண்டில் கௌதமர் (அக்கபாதர்) இயற்றிய நியாயம் (இந்து தத்துவம் ), கணாதரர் இயற்றிய வைசேடிகமும் இணைந்து நியாய - வைசேடிக தத்துவம் உருவானது.

* நியாய - வைசேசிகம் தத்துவத்தில் கிரேக்க தத்துவ அறிஞர்களின் தாக்கம் உள்ளதாக இந்திய தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

நியாயம் (இந்து தத்துவம்):
* இது ஏரணத்தையும் - (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் - (epistemology) முதன்மையாகக் கொள்கிறது.

* கௌதமர் (அக்கபாதர்) என்பவர் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூலை அடிப்படையாக கொண்டது. தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப் , பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின.

* நியாயத்தைப் பின்பற்றுபவர்கள் , ஏற்புடைய அறிவைப் ( valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள்.

* நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள்.
1. பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி
2. அனுமானம் - உய்த்துணர்வு
3. உபமானம் - ஒப்பீடு
4. சப்தம் - உரைச்சான்று என்பனவாகும்.

(7) அளவை :
* இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்தால் விளக்குபவர்கள் எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.

* வைதிக மார்க்கம் அளவை நெறியைப் பின்பற்றுவது. வேத வியாதன் கிருத கோடி சைமினி என்னும் ஆசிரியர்கள் அளவை நெறியைக் காட்டிய முன்னோர்.

10 அளவைகள்:
1. காண்டல் (காட்சி)
2. கருதல்
3. உவமம்
4. ஆகமம் (நூல்)
5. ஆண்டைய அருத்தாபத்தி (பொருட்பேறு)

1. இயல்பு
2. ஐதிகம் (உலகுரை)
3. அபாவம் (இன்மை )
4. மீட்சி -
5. ஒழிவறிவு எய்தி உண்டாம் அத நெறி (உள்ள நெறி)

அளவை பத்து விளக்கம்:
காட்சி:
* கண்ணால் வண்ணமும் , செவியால் ஓசையும் மூக்கால் நாற்றமும், நாவால் சுவையும், மெய்யால் ஊறும் காண்பது. * சுகம், துக்கம் காண்பது.

* உயிர், ஐம்பொறி வாயில், மனம் மூன்றைக் காண்பது. இவற்றிற்குப் பெயரிட்டு அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே அதன் குணத்தை உணர்ந்துகொள்வது.

கருத்து:
* கருத்து என்பது ஒருவனது குறிக்கோள இது 3 வகை.
* (பொது சாதனம்), சாத்தியம் முன்பு யானையைக் கண்டு அதன் - ஒலியைக் கேட்டவன் பின்பு யானை ஒலியை மட்டும் கேட்டபோது அங்கு யானை உண்டு என உணர்தல் அனுமான அனுமேயம்.

உவமம்:
* அவன் ஆடை பால் போல் வெள்ளை என்றவுடன் அவனது ஆடை நிறம் மனக்கண்ணில் தோன்றுதல்.

நூல்:
* அறிவன் செய்த நூல் 'மேலுலகம்' உண்டு என்பதை நம்புதல்.

பொருட்பேறு:
* 'ஆய்குடி கங்கை ' என்றவுடன் கங்கைக் கரையில் ஆய்குடி உள்ளது என உயர்தல்.

இயல்பு :
* யானைமேல் இருப்பவன் தன் தோட்டியை (அங்குசத்தை) அடுத்தவனுக்குத் தரமாட்டான்.

உலகுரை:
* ஊரார் சொல்வதை நம்புதல் இந்த மரத்தில் பேய் உண்டு எனச் சொல்வதை நம்புதல்

இன்மை :
* குதிரைக்குக் கொம்பு இல்லை என ஒப்பிட்டுத் தெளிதல்.

மீட்சி :
* இராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றான் என உணர்தல்.

உள்ளநெறி:
* 'நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்'.

அளவைக் குற்றம் எட்டு:
1. சுட்டுணர்வு
2. திரியக் கோடல்
3. ஐயம்
4. தேராது தெளிதல்
5. கண்டுணராமை
6. இல்வழக்கு
7. உணர்ந்ததை உணர்தல்
8. நினைப்பு

அளவைக் குற்றம் விளக்கம்:
1. சுட்டுணர்வு பழைய நிகழ்வை எண்ணிப் பார்த்துப் புதியதும் - அவ்வாறே நிகழும் எனக் கருதுதல்

2. திரியக் கோடல் (கிளிஞ்சிலைப்) வெயிலில் மின்னும் இப்பியைப் பார்த்து வெள்ளி எனல்

3. ஐயம் தொலைவில் தெரியும் - சோளக்கொல்லைப் பொம்மையைப் பார்த்து வைக்கோல் பொம்மையோ, மகனோ என ஐயுறல்

4. தேராது தெளிதல் - ஆராய்ந்து பார்க்காமல் வைக்கோல் - பொம்மையை மகன் எனல்

5. கண்டுணராமை புலியா -ஆண்டலையா ஆண்டுகொண்டு) ( அலையும் அரிமா) என்று கண்ணால் காணாமலேயே உண்ட விலங்கின் மிச்சிலைப் பார்த்து முடிவெடுத்தல்

6. இல்வழக்கு எங்குத் தேடினும் முயல் கொம்பு என்று சொல்லுத - அவன் பெறப்போவது முயற்கொம்பே.

7. உணர்ந்ததை உணர்தல் கடும்பனிக்கு மருந்து தீக்காய்தல் என - உணர்தல்

8. நினைப்பு இவர் தந்தை எனத் தாய் சொல்லக் கேட்டு - இஉணர்தல் கூறுதல்.

Share with Friends