Easy Tutorial
For Competitive Exams

TNPSC Group-VIII இந்துமதம் உலகத் தோற்றம்

6. உலகத் தோற்றம்

* நாம் காணும் இந்த உலகம் தோன்றியழியுந் தன்மையுடையது. தற்காலத்தில் பூகம்பங்களாலும், புயல்களாலும், கடல் கொளல் முதலியவைகளாலும், உலகத்தில் சில பகுதிகள் அழிந்தும், தோன்றியும் வருவதை நாம் காண்கின்றோம். இவை சிறிய அளவில் அழிந்தும் தோன்றியும் வருகின்றன.

* எல்லா உலகங்களும் ஒரே காலத்தில் அழியும் என ஆன்றோர் கூறுவர். அது மகாசங்காரம் எனப்படும். மகாசங்காரத்தில் பஞ்சபூதங்களையும், மாயையில் இறைவன் ஒடுக்குகிறான். இறைவனும் அவனுடைய அருளும் எஞ்சி நிற்கும்.

"ஒடுக்குமம் மாசங்காரம் உஞற்றியோன் ஆண்டும் ஓய்ந்து படுக்கிலான் நடிப்பன்காணும் பரை அருளால் பூசிப்பாள் "

* மாசங்காரம் செய்தபிறகும் இறைவன் ஒய்வெடுப்பதில்லை . இறைவனுக்கு ஓய்வென்பதே கிடையாது. ஒரு நிமிடம் அவன் ஓய்வெடுத்தால் உலகம் நடவாதாகும். உயிர் வர்க்கங்கள் அனைத்தும் அப்போது கேவலம் எனும் நிலையை அடைந்து அடங்கிக் கிடக்கும். அப்போது ஆன்மாக்கள் எவ்வித உடம்புமின்றி ஆணவத்தோடு அத்துவிதமாய்க் கிடக்கும்.

* உயிர்களின் அழுக்கைப் போக்கி அவர்களை இறையருளுக்கு இலக்காக எண்ணிய அருளருக்கொண்ட பராசக்தி இறைவனை நோக்கித் தவமாற்றுகிறாள்.

* இறைவன் அவளது தவத்துக்கு இரங்கி அருள்புரிகின்றான். உயிர்களைப் பற்றிய அழுக்கைப் போக்க உலகத்தை உண்டு பண்ணுகிறான்.

* அழுக்கை அழுக்கால் அகற்றுவது போல உயிர் அழுக்கை உலக அழுக்குகளில் தோய்த்து விளக்கத் திருவுளங் கொள்கிறான்.

* பஞ்ச பூதங்களில் ஒடுங்கி மாயையில் மாய்ந்து கிடக்கும் உலகைத் திரும்பவும் படைக்கின்றான். இதுவே உலகத் தோற்றத்தின் தொடக்கமாகும்.

* கடவுள் ஏன் இந்த உலகைப் படைத்தாரெனின் நம்மைப் பற்றி நிற்கும் அழுக்கினை அகற்றி நம்மை ஆட்கொள்வதன் பொருட்டேயாம்.

* பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி சுவேதாசுவதர உபநிஷதம் கூறுவதாவது,

* எந்தக் கடவுள் அக்கினியுலும், ஜலத்திலும், மரம் செடிகளிலும், அனைத்து உலகங்களிலும் பிரவேசித்து இருக்கிறானோ அந்தக் கடவுளுக்கு வணக்கம்.

* உலகம் ஆதியில் அக்கினிஸ்வரூபமாயிறருந்த காலத்தில் அதனிடையே வாழ்ந்த அநேக்கோடி அக்கினிஜ்வலரூபமான ஜீவ ஐந்துக்களைக் கடவுள் சுகமாக வாழும்படிச் செய்தான்.

* அந்த உலகத்தைச் சில ஆயிரம் வருஷங்களுக்குப் பின்னர் ஜலமயமாக மாற்றினான். அதனிடையே எண்ணற்ற ஜலஜந்துக்களைப் படைத்து அதனைக் காத்தான்.

* பின்னும் அநேகமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த உலகத்தில் சமுத்திர ஜலத்தினிடையே ஓர் சிறு பகுதியில் தாவர வர்க்கங்களைப் படைத்து மழை முதலியவற்றால் அவற்றைப் போஷித்தான்.

* இவ்வாறே சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் விசித்திர ஜீவஜந்துக்களையும், பக்ஷிகளையும், விலங்குகளையும், மானிட ஜாதியினரையும் படைத்துச் சுகமாக வாழும்படிச் செய்தான்.

* நாம் வசிக்கும் இந்த உலகத்தைவிட அனேக மடங்கு பருமனுள்ள சூரிய சந்திரர்களால் சூழப்பட்டு, அந்தரத்தில் அநேகமாயிரம் அண்டங்களைச் சிருஷ்டித்து, அந்த அண்டங்களிலும் ஜீவ ஜந்துக்களைப் படைத்து அவைகள் சுகமாக வாழவும் வழிவகுத்தான்.

* அண்டங்கள் பல விண்ணில் சுழல்வனவற்றை மாணிக்கவாசகரும் திருவண்டப்பகுதியில்,
" அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட்ட விரிந்தன "

எனக் மாணிக்கவாசகர் கூறுகிறார்.

* இவ்வாறு இறைவன் இந்நிலவுலகங்களைப் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடி அருள்பரிகின்றான்.

பூமிக்கு மேலே உள்ள உலகங்கள் 6 வகை:
1. சத்தியலோகம் - பிரம்மா
2. தபோலோகம் - தேவதைகள்
3. ஜனோலோகம் - பித்ருக்கள்
4. மகர்லோகம் - முனிவர்கள்
5. சுவர்லோகம் - இந்திரன் மற்றும் தேவர்கள்
6. புவர்லோகம் - கிரகங்கள் மற்றும் நட்சத்திர தேவதைகள்
பூமிக்கு அடியில் உள்ள உலகங்கள் 7 வகை:
1. அதலலோகம்
2. விதலலோகம் - அரக்கர்கள்
3. சுதலலோகம் - மகாபலி
4. தலாதலலோகம்
5. மகாதலலோகம் - அசுரர்கள்
6. ரசாதலலோகம்
7. பாதாளலோகம் - வாசுகி முதலான பாம்புகள்

Share with Friends