Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2017 Page: 4
34820.Refrigerator - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க
குளிர் பதனப் பெட்டி
குளிரூட்டும் பெட்டி
குளிர்சாதனப் பெட்டி
குளிர் காக்கும் பெட்டி
34821.காமராசரின் அரசியல் குரு
காந்தியடிகள்
பேரறிஞர் அண்ணா
நேரு
சத்தியமூர்த்தி
34822."உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்
கம்பர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
வள்ளலார்
34823.தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?
கதரின் வெற்றி
தேசியக் கொடி
தேசபக்தி
தமிழ்தேசியம்
34824.பொருத்துக:
(a) திருவரங்கம்1. சிதம்பரம்
(b) திருச்சிற்றம்பலம்2. ஸ்ரீரங்கம்
(c) திருமறைக்காடு3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி4. வேதாரணியம்
1 3 4 2
2 1 4 3
3 2 4 1
1 4 2 3
34825."உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்
மதுரைக் கணக்காயனார் மகனர் நக்கீரனார்
கணியன் பூங்குன்றனார்
நரிவெரூஉத்தலையார்
ஒளவையார்
34826."சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்
காந்தியடிகள்
பாரதியார்
பசும்பொன் முத்துராமலிங்கர்
பாரதிதாசன்
34827.சொல்லை பொருளோடு பொருத்துக:
(a) வனப்பு1. வலிமை
(b) அடவி2. அழகு
(c) வீறு3. இனிமை
(d) மதுரம்4. காடு
2 4 1 3
2 3 1 4
3 2 4 1
1 3 2 4
34828.உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல4. அரிய செயல்
3 1 4 2
2 3 4 1
4 1 2 3
4 2 1 3
34829.அகத்திணையின் வகைகள்
ஐந்து
ஆறு
மூன்று
ஏழு
34830.கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்
பெரியாழ்வார்
அப்பூதியடிகள்
மாணிக்கவாசகர்
அப்பர்
34831.சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?
1990
1991
1993
1994
34832."அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்”
- இவ்வரிகள் இடம்பெற்ற நூலின் பெயர்.
தேவாரம்
திருவாசகம்
ஏர் எழுபது
திருக்கோவை
34833."கேழல்" என்பதன் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக
எருமை
புலி
கரடி
பன்றி
34834."கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
நற்றிணை
கலித்தொகை
குறுந்தொகை
புறநானூறு
34835.பொருந்தாத இணையைக் கண்டறிக
மேதி - எருமை
சந்தம் - அழகு
கோதில் - பசு
அங்கணர் - சிவன்
34836.நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
பன்னாடு தந்த மாறன் வழுதி
இளம் பெருவழுதி
உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் மாறன் வழுதி
34837.உரிய பொருளைத் தேர்ந்தெழுதுக.
புரிசை
வேகம்
வளம்
மதில்
மேகம்
34838.தமிழர் புலம் பெயரக் காரணங்கள்
பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
வறுமை, மேலைநாட்டின் மோகம்
வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
வாணிகம், வேலை வாய்ப்பு
34839.நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
- எனக் கவிதை பாடியவர்.
சுரதா
கணணதாசன்
பாரதிதாசன்
மு. மேத்தா
Share with Friends