Easy Tutorial
For Competitive Exams

TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2017

34760.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?
நிரல்நிறைப் பொருள்கோள்
ஆற்றுநீர் பொருள்கோள்
மொழிமாற்றுப் பொருள்கோள்
விற்பூட்டுப் பொருள்கோள்
34761.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.
இணை மோனை
பொழிப்பு மோனை
ஒரூஉ மோனை
கூழை மோனை
34762."அரியவற்றுள்" இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக
நிரை நேர் நேர்
நிரை நிரை நேர்
நிரை நேர் நிரை
நேர் நேர் நிரை
34763.சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்
ஒன்றே கால் மாத்திரை
ஒன்றரை மாத்திரை
ஒன்றே முக்கால் மாத்திரை
ஒரு மாத்திரை
34764."இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" என்க் குறிப்பிடும் நூல்
தொல்காப்பியம்
நன்னூல்
அகப்பொருள்
அகத்தியம்
34765."மாகதம்" எனப்படுவது
மதுரகவி
சித்திரகவி
வித்தாரகவி
ஆசுகவி
34766.பொருந்தாததை எடுத்து எழுதுக.
அரசன் வந்தது-திணை வழு
கபிலன் பேசினாள் -பால் வழு
குயில்கள் கூவியது -எண் வழு
கமலாசிரித்தாய் -கால வழு
34767.பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.
ஐந்து கிலோ - எடுத்தல் அளவை ஆகுபெயர்
நாலு லிட்டர் - முகத்தல் அளவை ஆகுபெயர்
மூன்று மீட்டர் - நீட்டல் அளவை ஆகுபெயர்
இந்தியா வென்றது - உவமையாகுபெயர்
34768."இனிய நண்ப" - இலக்கணக் குறிப்பு தருக
குறிப்புப் பெயரெச்சம்
தெரிநிலை பெயரெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சம்
குறிப்பு வினையெச்சம்
34769."எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-இதில் நொச்சி என்பது
மதில் காத்தல்
மதில் வளைத்தல்
மதில் பூச்சூடல்
மதில்வாகைசூடல்
34770.தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்?
கபிலர்
நரிவெரூஉத்தலையார்
அறியப்படவில்லை
ஓதலாந்தையார்
34771.ஐஞ்சிறு காப்பியங்கள்- என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?
நாக குமார காவியம்
நீலகேசி
குண்டலகேசி
சூளாமணி
34772."இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
திருவள்ளுவர்
34773."ரூபாயத்" என்பதன் பொருள்
மூன்றடிச் செய்யுள்
நான்கடிச் செய்யுள்
இரண்டடிச் செய்யுள்
ஐந்தடிச் செய்யுள்
34774.அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
இங்கிலாந்து
சீனா
உருசிய நாடு
அமெரிக்கா
34775.வைதோரைக் கூட வையாதே-இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
-இவ்வரியை பாடியவர்
குடும்பைச் சித்தர்
கடுவெளிச்சித்தர்
திருமூலர்
கவிமணி
34776.அகரவரிசையில்அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி
கிளி, கைப்பிடி, காசு. கூறை, கேணி
கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
34777.பட்டியல் I ஐபட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.
பட்டியல் Iபட்டியல் II
(a) திருஞானசம்பந்தர்1. திருவாதவூர்
(b) திருநாவுக்கரசர்2. திருவெண்ணெய் நல்லூர்
(c) சுந்தரர்3. திருவாமூர்
(d) மாணிக்கவாசகர்4. சீர்காழி
4 3 2 1
4 2 3 1
2 4 1 3
2 3 4 1
34778.26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
மடந்தை
அரிவை
மங்கை
தெரிவை
34779.குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்
தமிழ், வடமொழி
தமிழ், வடமொழி இந்துத்தானி
தமிழ், மலையாளம்
தமிழ், ஆங்கிலம்
Share with Friends