ஐ.நா உறுப்புரிமை பெற்ற 235 நாடுகளில், ஏறத்தாழ 154 நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது. அவற்றுள் 20 நாடுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
அயல்நாடுகளுக்கு வணிகம், வேலைவாய்ப்பு தேடி தமிழர்கள் செல்வதை, அவ்வையார் "திரைகடலோடியும் திரவியம் தேடு” என்கிறார். சாதுவன் வணிகம் செய்யும்பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் தமிழர்கள் பெருமளவு பரவியுள்ளனர்.
சிறியதான 'ரியூனியன் தீவில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து குடியமர்த்தப்பட்டவர்கள். அத்தீவு பிரான்சு நாட்டின் ஒருபகுதியாகும்.
இலங்கைவாழ் தமிழர்கள் 95 விழுக்காட்டினர் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி பயில்கின்றனர்.
சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டுப் பேராசிரியர்கள், வி.எஸ்.இராஜன், ஜார்ஜ் எல். ஹார்ட், கெளசல்யா ஹார்ட், சிம். லின்ட் ஹோம்,
இந்திரா, நார்மன், ஹால் சிப்மேன், டபிள்யூ. குளோத்தி, ஜேம்ஸ் பிராங்கா, மறைந்த பேராசிரியர் ஏ.கே.இராமானுஜம் முதலியோர் தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றியுள்ளனர்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ், ஆட்சிமொழியாகத் திகழ்கிறது.
தமிழர், தம் தாய்மண்ணை விட்டு சென்றபோதும் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் உயர்நோக்கோடு வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்கள் இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளிலும், சிங்கப்பூர், மொரிசியசு ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் எந்த துறைகளில் காலூன்றிச் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர் - தொழில் துறை, கல்வித் துறை, கணினித் துறை
உலகில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற நாடுகளில் எத்தனை நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது - ஏறத்தாழ 154 நாடுகள்