Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் தமிழர் வணிகம், தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்

தொல்லியல் ஆய்வுகள்

  • "நல்லிசைக் கடாம்புனை" எனத்துவங்கும் பாடல் குறிப்பிடும் சங்ககால மன்னன் - நன்னன்
  • பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய நூல் - மலைபடுகடாம்
  • "நல்லிசைக் கடாம்புனை" எனத் துவங்கும் கல்வெட்டு எழுதப்பட்ட காலம் - கி.பி. 13-ம் நூற்றாண்டு; கண்டெடுக்கப்பட்ட இடம் - திருவண்ணாமலை.
  • தொல்லியலின் ஆங்கிலச் சொல் - ஆர்க்கியாலஜி
  • பூம்புகார் அருகே கடல் அகழ்வாய்வில் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்ட இடம் - கீழார்வெளி; ஆண்டு - 1963
  • இறந்தோரை அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியிலிட்டு புதைக்கும் வழக்கத்திற்கு “முதுமக்கள் தாழி" என்று பெயர்.
  • முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம் - தூத்துக்குடி மாவட்டம் , ஆதிச்சநல்லூர்; கண்டெடுக்கப்பட்ட ஆண்டுகள் - 1876, 2003.
  • தருமபுரி, கரூர், மதுரை -யில் கி.மு.3- ஆம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு காசுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் காலம் - கி.மு 300 முதல் கி.பி. 300 வரை.

கடற்பயணங்கள்

  • "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” எனும் ஒளவையார் கூற்றும், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனார் மொழியும் தமிழர்களின் பன்னாட்டுத் தொடர்புக்கு சான்றாகும்.
  • தொல்காப்பியத்தில் தமிழர் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்ட செய்தி "முந்நீர் வழக்கம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பழந்தமிழரின் பொருளீட்டும் கடமையை தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 'பொருள்வயிற் பிரிவு' விளக்குகிறது.
    • இப்பிரிவு காலில் பிரிவு (தரைவழிப் பிரிதல்), கலத்தில் பிரிவு (நீர்வழிப் பிரிதல்) என இருவகைப்படும்.
  • தமிழர் மேற்கில் கிரீசு, உரோம், எகிப்து முதல் கிழக்கில் சீனம் வரை கடல்வழி வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
    • கிரேக்கரையும் உரோமானியரையும் “யவனர்” என்று அழைத்தனர்.
  • கப்பல்களைக் கட்டுவதற்கு “கலம்செய் கம்மியர்” என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
  • நான்கு புறம் நீர் நிரம்பிய கழனிகளும், நடுவில் மதிலுடனும் கூடிய மருதநில அரசனது கோட்டை, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாக புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

கடல் - வேறுபெயர்கள்:

  • ஆழி
  • ஆர்கலி
  • முந்நீர்
  • வாரணம்
  • பெளவம்
  • பரவை
  • புணரி

மரக்கலம் - வேறுபெயர்கள்:

  • கப்பல்
  • கலம்
  • கட்டுமரம்
  • நாவாய்
  • படகு
  • பரிசில்
  • புணை
  • தோணி
  • தெப்பம்
  • திமில்
  • அம்பி
  • வங்கம்
  • மிதவை
  • பஃறி
  • ஓடம்
  • புகார் நகரில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைபுரண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைய, அவற்றின் உச்சியில் கொடிகள் ஆடின என்று பட்டினப்பாலை கூறுகின்றது. கரிகாலன் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்று புறநானூறு பாடுகிறது.
  • துறைமுகங்கள்:

    • காவிரிப்பூம்பட்டினம்
    • முசிறி
    • கொற்கை
      ஆகிய துறைமுகங்கள் கடற்கரைப் பட்டினங்களாகச் சிறந்து விளங்கின.
    • முசிறி - சேர மன்னர்க்குரிய துறைமுகம்

    • முசிறியில் உள்ள சுள்ளி ஆற்றில் மரக்கலங்களில் வந்த யவனர்கள் பொன்னைக் கொடுத்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர் என்கிறது அகநானூறு.

    கொற்கை - பாண்டியர் துறைமுகம்

    • இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்ததை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார்.
    • சிறுபாணாற்றுப்படையும், "விளைந்து முதிர்ந்த விழுமுத்து' என மதுரைக்காஞ்சியும் கொற்கை முத்தினை சிறப்பிக்கின்றன.

    • காவிரிப்பூம்பட்டினம் - சோழர் துறைமுகம்
      • கப்பலில் இருந்து இறக்கப்படுவன, நிலத்திலிருந்து கப்பலில் ஏற்றப்படுவன என அளவில்லாத பண்டங்கள் முன்றிலில் மலைபோலக் கிடக்கும் என்கின்றன இலக்கிய நூல்கள்.
      • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும், மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன.
    • ஏற்றுமதியான பொருட்கள்: இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப் பட்டை, இஞ்சி ஆகியன.
    • இறக்குமதியான பொருட்கள்: சீனத்திலிருந்து பட்டும், சருக்கரையும்.
      • அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கரும்பு கொண்டுவந்து பயிரிடப்பட்டது.
    • "மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்” - பாரதியார்

    Share with Friends