32981.பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தியவர் யார்?
காமராசர்
அண்ணாதுரை
எம்.ஜி.இராமச்சந்திரன்
ராஜாஜி
32982.சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?
திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது
திரைபடம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது
கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்
32983.பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் மாணவர்கள் அங்கத்தினர்
தேர்வு நேரத்தில் அந்நியர் யாரும் நுழையக் கூடாது
அலுவலகத்தில் உத்தரவு பெற்று உள்ளே வரவேண்டும்
அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் கூடாது
32984.மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
மயில் கூவியது - குயில் குழறியது
குயில் கூவியது -மயில் முழங்கியது
குயில் கத்தியது-மயில் அலறியது
குயில் கூவியது மயில் அகவியது
32986.பட்டியல் 1 ஐ பட்டியல் II இல் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க பட்டியல்
பட்டியல் I | பட்டியல் II |
---|---|
(a) ஊண் | 1. மகிழ்வு |
(b) ஊன் | 2. சனி |
(c) கலி | 3. உணவு |
(d) களி | 4. இறைச்சி |
4 3 1 2
3 4 1 2
3 4 2 1
4 3 2 1
32987.மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி
காட்டில் மயில் அகவும் குயில் பேசும்
காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்
காட்டில் யானை கத்தும் நரி ஊளையிடும்
காட்டில் கூகை கூவும் ஆந்தை அலறும்
32988.DUBBING - என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
ஒளிச் சேர்க்கை
ஒளி விலகல்
ஒலிச் சேர்க்கை
ஒலி மாற்றம்
32989.உரைநடை எழுதுவது தனது தொழில் என்ற வகையில் உழைத்தவர்
மு. வரதராசனார்
ரா பி சேதுப்பிள்ளை
திரு. வி. கலியாணசுந்தரனார்
கண்ணதாசன்
32991.கீழ்வருவனவற்றுள் பண்புத் தொகை அல்லாதன
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்
I மற்றும் II சரி
II மற்றும் IV சரி
I, II மற்றும் III சரி
I மற்றும் III சரி
32992."மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுல நீர பிற"
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
அனைத்தறன் ஆகுல நீர பிற"
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.
OVER LOOK
OVER POWER
OVATION
OVIPARUS
32993.பொருத்துக:
சொல் | தளை |
---|---|
(a) பாரி பாரி | 1. இயற்சீர் வெண்டளை |
(b) பலர்புகழ் கபிலர் | 2. நேரொன்றியத்தளை |
(c) தாமரைப்பூ குளத்தினிலே | 3. நிரையொன்றாசிரியத்தளை |
(d) அகரமுதல | 4. கலித்தளை |
4 3 2 1
3 2 1 4
2 3 4 1
1 4 3 2
32994."ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன், தாய், தாய், தாய் என்று போற்றுகிறான்"
என்னும் கூற்று யாருடையது?
என்னும் கூற்று யாருடையது?
பாரதியார்
பாரதிதாசன்
திரு.வி.க.
கம்பன்
32995.விடைத் தேர்க:
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது"
என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது"
என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
தந்தை பெரியார்
டாக்டர் அம்பேத்கர்
பேரறிஞர் அண்ணா
காமராசர்
32997.இந்தியா மிகப்பெரிய நாடு- எவ்வகை வாக்கியம்?
தொடர்நிலை வாக்கியம்
தனிநிலை வாக்கியம்
கலவை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
32998.பொருத்துக:
(a) நடந்தான் | 1. தொழிற்பெயர் |
(b) நடந்த | 2. வினையெச்சம் |
(c) நடந்து | 3. பெயரெச்சம் |
(d) நடத்தல் | 4.வினைமுற்று |
4 3 2 1
2 3 1 4
3 4 1 2
4 2 3 1
32999."சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே" என்று கூறியவர் யார்?
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலன் உணர்ந்தோரே" என்று கூறியவர் யார்?
நற்கவிராச நம்பி
பவனந்தி முனிவர்
ஐயனாரிதனார்
தொல்காப்பியர்
- TNPSC Group2 & 2A General Tamil
- General Tamil - 2022
- General Tamil - 2017
- General Tamil - 2016
- General Tamil - 2015
- General Tamil - 2014
- General Tamil - 2013
- TNPSC Group2 & 2A General Studies
- General Studies Tamil - 2022
- General Studies English - 2022
- General Studies - 2017
- General Studies - 2016
- General Studies - 2015
- General Studies - 2014
- General Studies - 2013