Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2014 Page: 2
32921.சந்திப்பிழையில்லாத தொடரைக் கண்டறிக?
கைதொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுகொள்
32922.இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக
அம்பி
பஃறி
திமில்
புணரி
32923."எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
சிங்கப்பூர், மொரிசியசு
இலங்கை, மலேசியா
அமெரிக்கா, கனடா
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா
32924.பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
தேய்ந்து x வளர்ந்து
குழப்பம் x தெளிவு
நண்பர் x செறுநர்
கரத்தல் x மறைத்தல்
32925.விடைத்தேர்க:
அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
சதுரகராதி
திருமந்திரம்
திருவருட்பா
திருக்குறள்
32926.கீழ்க்காணும் வல்லினம் மிகா இடம் குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?
வினைத்தொகையில் வல்லினம் மிகாது
உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது
32927.கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?
பெருங்கடுங்கோ
கபிலர்
நல்லந்துவனார்
நல்லுருத்திரன்
32928.பொருத்துக:
ஊர் சிறப்புப்பெயர்
(a) மதுரை 1. திருவடிசூலம்
(b) திருநெல்வேலி 2. கடம்பவனம்
(c) சிதம்பரம் 3. வேணுவனம்
(d) திருவிடைச்சுரம் 4. தில்லைவனம்

1 3 2 4
2 3 1 4
2 3 4 1
4 2 3 1
32929.கா- எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
சோலை
ஆறு
மலை
காடு
32930.கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்
ஆரண்ய காண்டம்
சுந்தர காண்டம்
கிட்கிந்தா காண்டம்
யுத்த காண்டம்
32931.இலக்கணக் குறிப்பறிதல்
"நல்லாற்றுப் $\underline{படூஉ}$ நெறியுமா ரதுவே"
கூற்று A : செய்யுளிசையளபெடை
காரணம் R : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
A - சரி, ஆனால் R - தவறு முரி
A மற்றும் R - இரண்டும் சரி, மேலும் R- என்பது A-விற்குச் சரியான விளக்கம்
A - தவறு, ஆனால் R - சரி
A - மற்றும் R - இரண்டும் தவறு
32932.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கெளரவிக்கிறது
செயப்பாட்டு வாக்கியம்
தொடர்வாக்கியம்
கலவை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
32933.விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக
தொண்டு
கூத்து
நசை
ஆட்டம்
32934.கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
$\underline{எத்திசையும்}$ புகழ்மணக்க இருந்த $\underline{பெருந் தமிழ}$ணங்கே
உம்மைத்தொகை, வினைத்தொகை
முற்றும்மை, பண்புத்தொகை
இழிவு சிறப்பும்மை, உயர்வு சிறப்பும்மை
வினைத்தொகை, பண்புத்தொகை
32935.பொருந்தா இணையைக் கண்டறிக
கலை-வித்தை
கழை-மூங்கில்
களை-முகத்தின் ஒளி
காளை - மேகம்
32936.கீழ்க்காணும் சொற்களுள் யானை என்னும் பொருள் குறிக்காத சொல்
கரி
களிறு
வேழம்
கேழல்
32937.இலக்கணக் குறிப்பறிதல்:
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
$\underline{வயிற்றுக்கும்}$ ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு
முற்றும்மை
உயர்வு சிறப்பும்மை
எண்ணும்மை
இழிவு சிறப்பும்மை
32938.கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?
பூங்கொடி
இயேசு காவியம்
காவியப்பாவை
வீரகாவியம்
32939.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது?
திருநள்ளாறு
திருநெல்வேலி
தஞ்சாவூர்
மதுரை
32940.ரூபாயத்-என்ற சொல்லின் பொருள்
பணம்
பாட்டு
மூன்றடிச் செய்யுள்
நான்கடிச் செய்யுள்
Share with Friends