Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2016 Page: 2
33221.தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்பெறுபவர்
சுரதா
சிற்பி
பாரதிதாசன்
வாணிதாசன்
33222.அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
வெள்ளிவீதியார்
ஒளவையார்
காக்கை பாடினியார்
நக்கண்ணையார்
33223.கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும். அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
II, III சரியற்றவை
I, IV சரியற்றவை
I, III சரியற்றவை
III, IV சரியற்றவை
33224.புலவரேறு - என்று சிறப்பிக்கப் பெற்றவர்
நக்கண்ணையார்
நாமக்கல் கவிஞர்
வரத நஞ்சையப்பிள்ளை
கபிலர்
33225."தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்’
என்ற தொடரால் குறிக்கப்படுபவர்
உமையொரு பாகனாம் சிவபெருமான்
குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்
மாமரம் ஏழினைத் துளைத்த இராமன்
மாமரம் தடிந்த தணிகை வேலன்
33226.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I.பழந்தமிழரதுப் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் "பெண் கொலை புரிந்த மன்னன்" என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
I, III, IV சரியானவை
I, II, IV சரியானவை
I, II, III சரியானவை
IV, III, II சரியானவை
33227.நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல்நூலாசிரியர்
(a) பெருமாள் திருமொழி1. காரைக்கால் அம்மையார்
(b) திருத்தொண்டத் தொகை2 ஆண்டாள்
(c) அற்புதத் திருவந்தாதி3. சுந்தரர்
(d) நாச்சியார் திருமொழி4. குலசேகர ஆழ்வார்
4 2 3 1
3 4 1 2
2 1 4 3
4 3 1 2
33228.கீழ்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
தொல்காப்பியம்
தேம்பாவணி
தண்டியலங்காரம்
வீரசோழியம்
33229.கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர் அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்
இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
33230."கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
கலித்தொகை
33231.கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்
தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரிய்ராகச் சாலினி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்
நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.
மானுடம் பூத்தது, நெஞ்சோடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மணக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்
கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட சாலை இளந்திரையன் எழுச்சிச் சான்றோர், திருப்புமுனைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்
33232.கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக
ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம் வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்பெற்றது
ஓவியர், "கண்ணுள் வினைஞர்" எனப் புகழப்பெற்றார்
ஓவியருக்கு, "நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது
33233."எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி" எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை
சிற்பக்கலை
கட்டடக்கலை
செப்புப்படிமக்கலை
ஓவியக்கலை
33234.கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
கலம்பக இல்க்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டைநாட்டை ஆண்டநந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வெண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன
"அறம் பாடுதல்" என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது
33235.பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :
மனுமுறை கண்ட வாசகம்
திருப்புகழ்
திருவருட்பா
ஜீவகாருண்ய ஒழுக்கம்
33236.கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.
I மற்றும் II சரியானவை
I மற்றும் IV சரியானவை
I மற்றும் III சரியானவை
III மற்றும் IV சரியானவை
33237.விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுள்மிகுதியான அடிகளை உடையது.
II, III சரி I தவறு
I,II ,III சரி
I, II சரி III தவறு
I, III சரி II தவறு
33238."நாட்டுப் புற இயலின் தந்தை" என அழைக்கப்படுபவர்
ஜேக்கப் கிரீம்
மாக்ஸ் முல்லர்
கி.வா. ஜகந்நாதன்
ஆறு. அழகப்பன்
33239.சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
33240.பொருந்தா இணையினைக் காண்க
"பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்" - நாமக்கல் கவிஞர்
"முல்லைக்கோர் காடு போலும்" - சுரதா
கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
Share with Friends