Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2019 Page: 3
52533.நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
நடுவணரசு
மாநில அரசு
ஆங்கில அரசு
பிரெஞ்சு அரசு
52534.சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
பாம்பாட்டிச்சித்தர்
திருமூலர்
போகர்
கோரக்கர்
52535.லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்
மனோன்மணீயம்
அகத்தியம்
முறுவல்
குணநூல்
52536.மனோன்மணியத்தை இயற்றியவர்
சுந்தரம் பிள்ளை
சுந்தர முனிவர்
சுந்தரர்
சுந்தர மூர்த்தி
52537.செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?
இரண்டாம் பருவம்
ஐந்தாம் பருவம்
முதற் பருவம்
மூன்றாம் பருவம்
52538.பெரிய புராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
சிவதொண்டர் புராணம்
சிவனடியார் புராணம்
திருத்தொண்டர் புராணம்
தொண்டர்சீர் புராணம்
52539.சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?
பல்கலைக்கழகம்
அரசவைக் கவிஞர் பணி
அறக்கட்டளை
பேராசிரியர் பணி
52540.பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் - கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்
3 1 4 2
1 4 3 2
1 2 3 4
1 3 2 4
52541.குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்
கைகேயி
பத்தரை
சுமத்திரை
மாதவி
52542.கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?
சமணத் துறவி
இஸ்லாமியத் துறவி
பௌத்தத் துறவி
சைவ துறவி
52543.சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
சீவகசிந்தாமணி
மணிமேகலை
குண்ட லகேசி
நீலகேசி
52544."அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் ! - மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
சிலம்பு
கம்ப இராமாயணம்
மணிமேகலை
பெரிய புராணம்
52545.குறுந்தொகை நூலின் பா- வகை யாது?
கலிப்பா
வஞ்சிப்பா
வெண்பா
அகவற்பா
52546.துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் .
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?
இராமன்
இலக்குவன்
அனுமன்
குகன்
52547.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
நற்றிணை
பரிபாடல்
குறிஞ்சிப்பாட்டு
ஏலாதி
52548.பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?
இன்னா நாற்பது
நான்மணிக்கடிகை
நாலடியார்
சிறுபஞ்சமூலம்
52549.கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும்.
நற்பண்பு
நற்குணம்
புகழ்
நல்லெண்ணங்கள்
52550.பொருட்பாலின் இயல்கள்
பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
களவியல், கற்பியல்
பாயிரவியல், அரசியல், களவியல்
52551.வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
தென்னை போன்ற தோள்
பளிங்கு போன்ற தோள்
மூங்கில் போன்ற தோள்
வாழை போன்ற தோள்
52552.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
Share with Friends