Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல் என்றால் என்ன?

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம்.

இடுகுறிபெயர்:

ஒரு பொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்.
(எ.கா):
மரம்,மலை,மண்

காரணப்பெயர்:

ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர்.
(எ.கா):
நாற்காலி,கருப்பன்,

பெயர்ச்சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.

  1. பொருட் பெயர்
  2. இடப் பெயர்
  3. காலப் பெயர்
  4. சினைப் பெயர்
  5. பண்புப் பெயர்
  6. தொழிற் பெயர்

பொருட்பெயர் மனிதன், ஆடு, பந்து
இடப்பெயர் மதுரை , தமிழகம், இந்தியா
காலப்பெயர் மணி, கிழமை, வாரம்,மாதம், இளவேனில்
சினைப்பெயர் கண், காது, கை, கால்
பண்புப்பெயர் கசப்பு , மஞ்சல்,அகலம், வட்டம்
தொழிற்பெயர் பாடுதல், ஓடுதல் , உறங்குதல்

1. பொருட் பெயர்

ஒரு பொருளைக் ( உயர்திணை மற்றும் அஃறிணை பொருளை) குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
(எ.கா):
உயர்திணை : மலர்விழி,
உயிருள்ள அஃறிணை : பசு, குதிரை
உயிரற்ற அஃறிணை : கணினி, மலை

2. இடப் பெயர்

ஒரு இடத்தை (பொது இடப் பெயர் மற்றும் சிறப்பு இடப் பெயர்) சுட்டுகின்ற பெயர் இடப் பெயர் எனப்படும். (எ.கா):
பொது இடப் பெயர் : கோயில், ஊர் , மாவட்டம்
சிறப்பு இடப் பெயர் : இலங்கை, சென்னை

3. காலப் பெயர்

ஒரு காலத்தை ( பொதுக் காலப் பெயர் மற்றும் சிறப்புக் காலப் பெயர்) குறிக்கும் பெயர் காலப் பெயர் எனப்படும்
(எ.கா):
பொதுக் காலப் பெயர் : ஆண்டு, விநாடி, கிழமை, மாதம்
சிறப்புக் காலப் பெயர் : பங்குனி, இளவேனில்

4. சினைப் பெயர்

உறுப்புகளைக் (உயர்திணை மற்றும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும்) குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்
(எ.கா):
உயர்திணை சினைப் பெயர் : கைவிரல், கால்விரல்
அஃறிணை சினைப் பெயர் : மரக்கிளை, பூக்காம்பு

5. பண்புப் பெயர்

ஒரு பொருளின் பண்பைக் (வடிவம், சுவை, அளவு, குணம்) குறிக்கும் பெயர் பண்புப் பெயர் எனப்படும்.
(எ.கா):
வட்டம், கசப்பு, மூன்று, தீமை

6. தொழிற் பெயர்

ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற் பெயர் எனப்படும்.
(எ.கா):
உறங்குதல்

தொழிற் பெயர் இரண்டு வகைப்படும்

(i). முதல்நிலை தொழிற்பெயர்

பெரும்பாலும் வேர்ச்சொல்லாகவே வரும் முதலெழுத்து குறிலாக இருக்கும் அவை முதல்நிலை தொழிற்பெயர்
(எ.கா):
பெறு , சுடு

(ii). முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயர்

முதற்நிலைத் தொழிற்பெயரின் முதலெழுத்து நீண்டு வருமாயின் அது
முதற்நிலைத் திரிந்த தொழிற்பெயராகும்.
(எ.கா):
கெடுதல் - தொழிற்பெயர்
கெடு - முதற்நிலைத் தொழிற்பெயர்
கேடு - முதற்நிலை திரிந்த தொழிற்பெயர்

Share with Friends