1.பொருத்துக, பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்
இப்பகுதில் பிரிவு அ வில் உள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை பிரிவு ஆ வில் உள்ள 4 சொற்களுக்கும் பொறுத்த வேண்டும்.
இதிலிருந்து மூன்று முதல் ஐந்து கேள்விகள் கேட்கபடுகிறது, எனவே நீங்கள் இதற்காக நன்கு பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்.இதற்கு நீங்கள் 6 to 10 புத்தகத்தில் உள்ள செய்யுள்களின் பாடல்வரிகளின் பொருளை நன்கு புரிந்து படிக்கவேண்டும்.
பொருத்துக
சோறு | - | உண்டான் |
பால் | - | பருகினான் |
பழம் | - | தின்றான் |
நீர் | - | குடித்தான் |
பண்பு | - | பாடறிந்து ஒழுகுதல் |
அன்பு | - | தன்கிளை செறாஅமை |
அறிவு | - | பேதையார் சொல் நோன்றல் |
செறிவு | - | கூறியது மறாஅமை |
நான்காம் வேற்றுமை | - | கு |
ஐந்தாம் வேற்றுமை | - | இன் |
ஆறாம் வேற்றுமை | - | அது |
ஏழாம் வேற்றுமை | - | கண் |
மதியாதார் முற்றம் | - | மிதியாமை கோடிபெறும் |
உபசரிக்காதார் மனையில் | - | உண்ணாமை கோடிபெறும் |
குடிபிறந்தார் தம்மோடு | - | கூடுவது கோடிபெறும் |
கோடானு கோடி கொடுப்பினும் | - | சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் |
மதுகரம் | - | தேன் |
புரை | - | குற்றம் |
குழல் | - | கூந்தல் |
பிடி | - | பெண் யானை |
TNPSC G4 General Tamil 2022
(a) சோறு | 1. குடித்தான் |
(b) பால் | 2. உண்டான் |
(c) பழம் | 3. பருகினான் |
(d) நீர் | 4. தின்றான் |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
· அக்கம் - தானியம்· அங்கண் - அழகிய இடம்
· ஆமா - காட்டுப்பசு
· ஆற்றுணா - கட்டுச்சோறு
· இருந்தி - பெருஞ்செல்வம்
· இரும்பை - பாம்பு
· ஈட்டம் - கூட்டம்
· ஈங்கதிர் - சந்திரன்
· உரன் - திண்ணிய அறிவு
· உலண்டு - கோற்புழு
· உகுநீர் - ஒழுகும் நீர்
· ஊழை - பித்தம்
· எழினி - இருதிரை
· எறும்பி - யானை
· எருத்தம் - பிடரி, கழுத்து
· கவர்தல் - நுகர்தல்
· ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
· சிறுமை - துன்பம்
· மறுமை - மறுபிறவி
· நன்றி - நன்மை
· அல்லவை - பாவம்
· துவ்வாமை - வறுமை
· அமர்ந்து - விரும்பி
· அகன் - அகம், உள்ளம்
· படிறு - வஞ்சம்
· செம்பொருள் - மெய்ப்பொருள்
· பீற்றல் குடை - பிய்ந்த குடை
· கடையர் - தாழ்ந்தவர்
· விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
· நுனி - மிகுதி
· முழவு - மத்தளம்
· வனப்பு - அழகு
· தூறு - புதர்
· மெய்ப்பொருள் - நிலையான பொருள்
· வண்மை - கொடைத்தன்மை
· புரை - குற்றம்
· குழவி - குழந்தை
· ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
· துன்னலர் - பகைவர்
· கலைமடந்தை - கலைமகள்
· நீரவர் - அறிவுடையார்
· அகம் - உள்ளம்
· அல்லல் - துன்பம்
· புனைதல் – புகழ்தல்
2.பொருத்துக : புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:-
பதினொன் மேல் கணக்கு நூல்கள் : பத்துப்பாட்டு + எட்டு தொகை
பத்துப்பாட்டு நூல்கள்: 10 பாடல்கள்
1. திருமுருகாற்றுப்படை- நக்கீரர்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5. முல்லைப்பாட்டு - நப்பூதனார்
6. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
7. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
8. நெடுநல்வாடை - நக்கீரர்
9. மலைபடுகடாம்; - பெருங்கௌசிகனார்
10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
பொருத்துக : எட்டுத்தொகை நூல்கள்
அக நூல்கள் - 5
1. நற்றிணை - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
2. குறுந்தொகை - பெருந்தேவனார்
3. ஐங்குறுநூறு - கூடலூர் கிழார்
4. அகநானூறு - உப்பூரி குடிகிழார் உருத்திரஞ்சன்மனார்
5. கலித்தொகை - நல்லந்துவனார்
புற நூல்கள் - 2
1. பதிற்றுப்பத்து -பெயர் தெரிய வில்லை
2. புறநானூறு - பெயர் தெரிய வில்லை
அகப்புற நூல்கள் - 1
1. பரிபாடல் - பெயர் தெரிய வில்லை
பொருத்துக : பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் : 18 பாடல்கள்
1. நாலடியார் - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்
4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. ஏலாதி - கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் - திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
10.பழமொழியின் நானூறு - முன்றுரை அரையனார்
11. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
13. ஐந்திணை எழுபது - மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது - கண்ணன்; சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது - பொய்கையார்
TNPSC G4 General Tamil 2018
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4.கண்ணங்கூத்தனார்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணியை - திருத்தக்க தேவர்
4. குண்டலகேசியை - நாதகுத்தனார்
5. வளையாபதியை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
TNPSC G2 General Tamil 2014
நூல் | நூலாசிரியர் |
---|---|
(a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
(b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
(c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
(d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
1. காக்கை பாடினியம் - காக்கைபாடினியார்
2. இறையனார் களவியல் - இறையனார்
3. புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார்
4. யாப்பருங்கலம் - அமிதசாகரர்
5. வீரசோழியம் - புத்தமித்திரர்
6. நேமிநாதம் - குணவீரபண்டிதர்
7. நன்னூல் - பவணந்தி முனிவர்
8. நவநீதப் பாட்டியல் - நவநீதநடனார்
9. சிரம்பரப் பாட்டியல் - மஞ்சோதியர்
10. பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்
11.மாறன் அகப்பொருள் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
12. இலக்கண கொத்து - சாமிநாத தேசிகர்
13. தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
14. பிரபந்த தீபிகை-முத்துவேங்கடசுப்பைய நாவலர்
15. சுவாமிநாதம் - சுவாமிக் கவிராயர்
பொருத்துக : புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்
1. ஊரும் பேரும் - ரா.பி சேதுப்பிள்ளை
2. குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்பக் கவிராயர்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகளார்
4. எழிலோவியம் - வாணிதாசன்
5. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
6. பாரததேசம் - மகாகவி பாரதியார்
7. நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
8. இசையமுது - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
9. திருத்தொண்டத் தொகை - சுந்தரர்
10. சாகுந்தலம் - காளிதாசர்
11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு - தாராபாரதி
12. ஏலாதி - கணிமேதாவியார்
13. செய்யும் தொழிலே தெய்வம - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
14. அந்தக்காலம் இந்தக் காலம் - உடுமலை நாராயண கவி
15. ஓர் இரவு - அறிஞர் அண்ணா
16. பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார்
17. அற்புதத் திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
18. நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
19. சயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி
20. கம்பர் - சடகோபரந்தாதி
TNPSC G2 General Tamil 2016
சயங்கொண்டார் - சடகோபரந்தாதி
காரியாசான் - புறநானூறு
கம்பர் - கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் - சிறுபஞ்சமூலம்
நூல் | நூலாசிரியர் |
---|---|
(a) பெருமாள் திருமொழி | 1. காரைக்கால் அம்மையார் |
(b) திருத்தொண்டத் தொகை | 2 ஆண்டாள் |
(c) அற்புதத் திருவந்தாதி | 3. சுந்தரர் |
(d) நாச்சியார் திருமொழி | 4. குலசேகர ஆழ்வார் |
- பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
- தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
- பிரித்து எழுதுக
- எதிர்ச்சொல் அறிக
- பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச்சொல்லின் வகையறிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
- பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)
- Question and Answers
- தொடரும் தொடர்பும் அறிதல் QA
- பிரித்தெழுதுக QA
- எதிர்ச்சொல் தருக QA
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் QA
- பிழைத்திருத்தம் One Liner QA