Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் அறநூல்கள்

அறநூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள்


அறநூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.


பாடத்திட்டங்கள்:

2. அறநூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.


பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று.

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.

நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.


பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் யாவை

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  11. முப்பால் (திருக்குறள்)
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

3 வகைகள் :

அறநூல்கள் – 11
அகநூல்கள் – 6
புறநூல் – 1


52997.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் எவை ?
திருக்குறள்
நாலடியார்
பழமொழி நானூறு
இவை அனைத்தும்
52990.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் வகைகள்?
3
4
5
2

அறநூல்கள்


அகநூல்கள்


புறநூல்


1. நாலடியார்

திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூலாகும்.

இது ‘நாலடி நானூறு’ எனவும் அழைக்கப்படுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்" நாலடியார் ஆகும்.

  • ஆசிரியர் : சமண முனிவர்களால்
  • பா வகை : வெண்பா
  • பாடல் எண்ணிக்கை : 400

40 அதிகாரங்களைக் கொண்டது, (அதிகாரத்தத்துக்கு பத்து பாடல்கள் வீதம் 400 பாடல்களைக் கொண்டது)

இயற்றப்பட்ட காலம் : (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்)


வேறு பெயர்கள்

நாலடி நானூறு
வேளாண் வேதம்


திருக்குறளைப் போன்றே முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.

  1. அறத்துப்பால் : 13
  2. பொருட்பால் : 24
  3. காமத்துப்பால் : 3

நூலிற்கு உரை கண்டவர்

தருமர்
பதுமனார்


நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.

ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
நூலின் பெருமையை கூறும் அடிகள்

 "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி 
        நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி",

“நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் வரும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.

மேற்கோள்கள்

1."கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. ”
2.“ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
பால்உண் குருகின் தெரிந்து”
3.“கல்வி அழகே அழகு”

52992.திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூல் ?
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது

2. நான்மணிக்கடிகை

  • பாடல் எண்ணிக்கை : 101
  • ஆசிரியர் : விளம்பி நாகனார்
  • பாவகை : வெண்பா
  • இயற்றப்பட்ட காலம் : நான்காம் நூற்றாண்டு

நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை

கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை.

நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.

முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.

ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது

நூலில் வடமொழி கலப்பு அதிகம்.

ஜி.யு.போப் இந்நூலின் இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.

நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் 'நான்மணிக்கடிகை' என்று அழைக்கப்படுகிறது.


முக்கிய அடிகள்

“யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
“இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
வெல்வது வேண்டின் வெகுளிவிடல்”
“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்    வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்”
“ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்”
“மனைக்கு விளக்கம் மடவாள்
மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
புதல்வர்க்கு விளக்கம் கல்வி
கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு”

3. பழமொழி நானூறு

  • பாடல் எண்ணிக்கை : 400
  • இயற்றப்பட்ட காலம் : கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
  • ஆசிரியர் : முன்றுரை அரையனார்
  • பாவகை : வெண்பா
  • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்

பெயர்க்காரணம்

ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும்,நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.


வேறு பெயர்கள்

பழமொழி
உலக வசனம்


ஆசிரியர் குறிப்பு

இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.

முன்றுறை என்பது ஊர்பெயர்.

அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.

அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.

முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.


நூல் பகுப்பு முறை

இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34

பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)

பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)

பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)

பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)

பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)


52995.பழமொழி நானூறு ஆசிரியர்?
விளம்பிநாகனார்
கபிலர்
பூதஞ்சேந்தனார்
முன்றுறை அரையனார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள்

திருக்குறள்
நாலடியார்
பழமொழி நானூறு


தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.

பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.

மேற்கோள்கள்

“அணியெல்லாம் ஆடையின் பின்”
“கடன் கொண்டும் செய்வார் கடன்”
“கற்றலின் கேட்டலே நன்று”
“குன்றின்மேல் இட்ட விளக்கு”
“தனிமரம் காடாதல் இல்”
“திங்களை நாய்க் குரைத் தற்று”
“நுணலும் தன் வாயால் கெடும்”

இந்நூலின் பிரிவுகள்

  • கல்வி (10)
  • கல்லாதார் (6)
  • அவையறிதல் (9)
  • அறிவுடைமை (8)
  • ஒழுக்கம் (9)
  • இன்னா செய்யாமை (8)
  • வெகுளாமை (9)
  • பெரியாரைப் பிழையாமை (5)
  • புகழ்தலின் கூறுபாடு (4)
  • சான்றோர் இயல்பு (12)
  • சான்றோர் செய்கை (9)
  • கீழ்மக்கள் இயல்பு (17)
  • கீழ்மக்கள் செய்கை (17)
  • நட்பின் இயல்பு (10)
  • நட்பில் விலக்கு (8)
  • பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
  • முயற்சி (13)
  • கருமம் முடித்தல் (15)
  • மறை பிறர் அறியாமை (6)
  • தெரிந்து தெளிதல் (13)
  • பொருள் (9)
  • பொருளைப் பெறுதல் (8)
  • நன்றியில் செல்வம் (14)
  • ஊழ் (14)
  • அரசியல்பு (17)
  • அமைச்சர் (8)
  • மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
  • பகைத்திறம் தெரிதல் (26)
  • படைவீரர் (16)
  • இல்வாழ்க்கை (21)
  • உறவினர் (9)
  • அறம் செய்தல் (15)
  • ஈகை (15)
  • வீட்டு நெறி (13)

52998.பழமொழியை “முதுமொழி” என குறிப்பிட்டவர் ?
விளம்பிநாகனார்
கபிலர்
பூதஞ்சேந்தனார்
தொல்காப்பியர்

4. முதுமொழிக்காஞ்சி

பெயர்க்காரணம் :

முதுமொழி = மூத்தோர் சொல்,
காஞ்சி = மகளிர் இடையணி

மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.


வேறு பெயர்

அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி


முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.

இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்.

இந்நூலில் பத்து அதிகாரங்களும், அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு பாடல்களும் உள்ளன.


  • ஆசிரியர் = மதுரைக் கூடலூர்க்கிழார்
  • பாடல்கள் = 100
  • பாவகை = குறள் தாழிசை
  • ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
  • இதன் பாடல்கள் குறள்வெண்பா செந்துறை என்ற யாப்பால் ஆனவை.

பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.

  • சிறந்த பத்து
  • அறிவுப் பத்து
  • பழியாப் பத்து
  • துவ்வாப் பத்து
  • அல்ல பத்து
  • இல்லைப் பத்து
  • பொய்ப் பத்து
  • எளிய பத்து
  • நல்கூர்ந்த பத்து
  • தண்டாப் பத்து

ஆசிரியர் குறிப்பு

பெயர்: மதுரை கூடலூர் கிழார்.
பிறந்த ஊர்: கூடலூர்
காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.


ஆசிரியர் சிறப்பு

இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.


சொற்பொருள்

ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
காதல் – அன்பு, விருப்பம்
மேதை – அறிவு நுட்பம்
வண்மை – ஈகை, கொடை
பிணி – நோய்
மெய் – உடம்பு

மேற்கோள்கள்

1."ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
 ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை."

ஆர்கலி – கடல்
ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்

ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.


2. "காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்" 

காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
சிறந்தன்று – சிறப்புடையது

பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.


3. "மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை."

கற்றது - கற்ற பொருளை
மறவாமை – மறவாதிருத்தல்

புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.


4. "வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை"

வண்மையின் - வளமையோடிருத்தலை விட
செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.


5. "இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை"

மெய் – உடம்பு
பிணி இன்மை – நோயில்லாமலிருத்தல்

நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.


6. "நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று"

நலன் உடமையின் - அழகுடைமையை விட
நாணு – நாணமுடைமை

அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.


"7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று."

குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமை யினும்
கற்பு - கல்வியுடைமை

உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மை யானது.


"8.கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று"

கற்றாரை - கற்ற பெரியாரை
வழிபடுதல் - போற்றியொழுகுதல்

கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.


"9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று." 

செற்றாரை - பகைவரை
செறுத்தலின் - வெல்லுவதைவிட

பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம் படுத்திக் கொள்வது சிறப்பானது.


"10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று." 

முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்

செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.


23708.முதுமொழிக் காஞ்சியில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
200
300
10
130
23697. அறவுரைக் கோவை என்று அழைக்கப்படுவது எது?
முதுமொழிக்காஞ்சி
மதுரைக்காஞ்சி
நாலடியார்
சீவகசிந்தாமணி

5. திரிகடுகம்

திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பாடல்கள் : 100 + 1
பாவகை : வெண்பா

கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும்,

அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.

இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும்.

ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.

இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.


பெயர்க்காரணம்

திரி = மூன்று
கடுகம் = காரமுள்ள பொருள்

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான.

அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.


ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் : நல்லாதானர்
இயற்பெயர் – ஆதனார்
‘நல்’ என்பது அடைமொழி
காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
இவர் வைணவ சமயத்தவர்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.

“செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது



பொதுவான குறிப்புகள்

“திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது.

இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.

இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.

மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.

இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.

இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.

கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.

300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது


முக்கிய அடிகள் : (7th std)

“1.உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்”.

நீராடி யுண்பதும், ஒருபக்கச் சார்பு சொல்லாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்.


2.“இல்லர்க்கொன் றீயும்  உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள”.

வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும் அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு


3.“முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
        நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
        தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
        தூற்றின்கண் தூவிய வித்து.”.

முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.


சொற்பொருள் :

பால்பற்றி – ஒருபக்கச் சார்பு
சாயினும் – அழியினும்
தூஉயம் – தூய்மை உடையோர்
ஈயும் – அளிக்கும்
நெறி – வழி
மாந்தர் – மக்கள்
வனப்பு – அழகு
தூறு – புதர்
வித்து – விதை


“ 1. நெஞ்சம் அடங்குதல் வீடாகும் ”

நெஞ்சம் – மனம்,
அடங்குதல் – அடங்குதலால்,
வீடு ஆகும் – முத்தி உள்ளதாகும்


“2. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்”

முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்;


“ 3. நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும் ”

நிறைவுடைமை நெஞ்சம் கொண்டவனைக் கண்டு வறுமை அஞ்சும்.


4. உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;
நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;
செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்
செப்ப நெறி தூராவாறு."

உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.


5. “கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி”

6. இன்னா நாற்பது

ஆசிரியர் = கபிலர்
பாடல்கள் = 1 + 40
பாவகை = வெண்பா
இன்னா = துன்பம்.
இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.


கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.


பொதுவான குறிப்புகள் :

இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
கபிலரிடம் சைவ,வைணவ பேதம் இல்லை.
இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
மெல்லிய சில சொற்களால் தொகுக்கப்பட்டு அடியளவு குறைந்துள்ள செய்யுள் அம்மை எனப்படும்.சொல் அமைதியலோ, ஓசை அமைதியிலோ வருவதால் அம்மை எனப்பட்டது.
இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.

சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
1. பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்.
2. இன்னா நாற்பது பாடிய கபிலர்.
3. பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்.
4. பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்.
5. அகவற்பா பாடிய கபிலர்.


முக்கிய அடிகள்

1.“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா”
உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம்.


2. “தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா”

தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும்.


3.“ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா”

உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும்.


4.“குழவிகள் உற்றபிணி இன்னா”

குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும்.


5.“ இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு”  

பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்




7. இனியவை நாற்பது

  • ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா
  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.

இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.


கடவுள் வாழ்த்து

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.


ஆசிரியர் குறிப்பு

பெயர் - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.
ஊர் – மதுரை
காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


பொதுவான் குறிப்புகள்

பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.


சொற்பொருள்

குழவி - குழந்தை
பிணி - நோய்
கழறும் - பேசும்
மயரி - மயக்கம்
சலவர் - வஞ்சகம்
மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்


முக்கிய அடிகள் (8th std)

1.“குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது.”

குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.


2.“சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது”.

வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.


1. “ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;”

தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது.


2.“ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது”

மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது.


3. “வருவாய் அறிந்து வழங்கல் இனிது”

தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது.


>4.“தடமெனத் பணைத் தோள் தளிர் இயலாரை;
விடமென்று உணர்த்தல் இனிது”

மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.


8. சிறுபஞ்சமூலம்(9th std)

ஆசிரியர் குறிப்பு:

ஆசிரியர் : காரியாசான்
மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.


நூல் குறிப்பு:

இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.

கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.

இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.

ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.


பொதுவான குறிப்புகள்:

மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.

பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்.

ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.

சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை
1. வில்வம்,
2. பெருங்குமிழ்,
3. பாதிரி,
4. தழுதாழை,
5. வாகை

காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாக்காயனாரின் ஒரு சாலை மாணவர்கள்.

இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.


சொற்பொருள்

கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
வேந்தன் - அரசன்
வனப்பு - அழகு
கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
வாட்டான் - வருத்தமாட்டான்


இலக்கணக்குறிப்பு:

கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்


மேற்கோள்கள்

“கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு”

கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் கொள்ளும் இரக்க உணர்வை வெளிப்படுத்துதல். காலுக்கு அழகு அடுத்தவன் மனையாளை விரும்பிச் செல்லாமை.

எண் கணக்குக்கு அழகு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் இத்துணை ஆகிறது என்று சொல்லுதல்.

பண்ணிசைக்கு அழகு கேட்டவர் நன்று என்று பாராட்டல்.

வேந்தனுக்கு அழகு தன் நாட்டு மக்களை வாட்டாமல் மகிழ்வுடன் வைத்திருக்கிறான் என்று பலரும் சொல்லக் கேட்டல்.


1.“நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு”

நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.


2.“பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு”

பேதைக்கு = முட்டாளுக்கு
உரைத்தாலும் = எவ்வளவு சொன்னாலும்
செல்லாது உணர்வு = மண்டையில் ஏறாது


9. ஏலாதி

நூல் குறிப்பு

பாடல்கள்

பாயிரம் - 1,
தற்சிறப்பாயிரம் - 1,
பாடல்கள் - 80
பாவகை = வெண்பா

இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.


ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் = கணிமேதாவியார்
சமயம் = சமணம்
காலம் = கி.பி. 5ஆம் நூற்றாண்டு
இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது.


பெயர்க்காரணம்

ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று,

இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.


பொதுவான குறிப்புகள்

உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.


நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில்

1. எடுத்தல்
2. முடக்கல்
3. நிமிர்தல்
4. நிலைத்தல்
5. படுத்தல்
6. ஆடல்

மேற்கோள்

“தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
  வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
  கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
  வைத்து வழங்கிவாழ் வார்”

தலைஇழந்த - தலைமகனை இழந்த கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர். கொடையாளி கைக்குப் பொருள்வந்து சேரும்.


“சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
  மேவல் எளிது; அரிது மெய்போற்றல்”

இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது.


ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன.

அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.

இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.


ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்

சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.


வள்ளல்கள்

அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.

மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.

விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம். இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்

11. அறநூல் – ஆசாரக்கோவை

ஆசாரம் - ஒழுக்கம்.
கோவை - அடுக்கிக் கூறுதல்.

ஒழுக்க நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.


12. புறநூல்

களவழி நாற்பது

ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி.

இந்நூல் முழுவதும் யானைப் போர் பற்றியும் அழகிய வீரக் கற்பனைகளைத் தருகிறது.


13. அகநூல்கள்

கார் நாற்பது

அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல்.

கார்காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.

முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது.

முல்லை நிலத்தின் முதல் கரு உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.


14. ஐந்திணை ஐம்பது

ஆசிரியர் பொறையனார்.

அகத்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும் திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நூல் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.

“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்”
என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.


15. ஐந்திணை எழுபது

ஆசிரியர் மூவாதியார்.

ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 பாடல்கள் அமைந்துள்ளன.

இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.


53025.ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர்?
பொறையனார்
மூவாதியார்
பூதஞ்சேந்தனார்
ஔவையார்

16. திணைமாலை நூற்றைம்பது

ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்.

ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.

அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.

கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.


53027.கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல் ?
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
கார் நாற்பது

17. கைந்நிலை (ஐந்திணை அறுபது)

ஆசிரியர் புல்லங்காடனார்.

இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.


53028.கைந்நிலை நூலின் ஆசிரியர்?
பொறையனார்
மூவாதியார்
பூதஞ்சேந்தனார்
புல்லங்காடனார்

18. திணைமொழி ஐம்பது

ஆசிரியர் கண்ணந் சேந்தனார்.

அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.

இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.

53029.திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்?
பொறையனார்
கண்ணந் சேந்தனார்
பூதஞ்சேந்தனார்
புல்லங்காடனார்
9212.திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
கால்டுவெல்
ஜி.யு.போப்
ஜோசப் பெஸ்கி
தெ நொபிலி
Share with Friends