1.திருநாவுக்கரசர்(அ)அப்பர் :
வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர் = மருள்நீக்கியார்
பெற்றோர் = புகழனார், மாதினியார்
ஊர் = தென்னாற்காடு மாவட்டம் திருவாமூர்
சகோதரி = திலகவதி
வாழ்ந்த காலம் = 81 ஆண்டுகள்
மார்க்கம் = சரியை என்னும் தாச மார்க்கம்
நெறி = தொண்டு நெறி
ஆட்கொள்ளட்பாட இடம் = திருவதிகை
இறைவனடி சேர்ந்த இடம் = திருப்புகலூர்
இவரின் தமிழ் = கெஞ்சு தமிழ்
படைப்புகள்:
இவர் அளித்தது 4,5,6 ஆம் திருமுறை
4ஆம் திருமுறை = திருநேரிசை
5ஆம் திருமுறை = திருக்குறுந்தொகை
6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
வேறு பெயர்கள்:
மருள்நீக்கியார்(இயற் பெயர்)
தருமசேனர்(சமண சமயத்தில் இருந்த பொழுது)
அப்பர்(ஞானசம்பந்தர்)
வாகீசர்
தாண்டகவேந்தர்
ஆளுடைய அரசு
திருநாவுக்கரசர்(இறைவன் அளித்த பெயர்)
சைவ உலகின் செஞ்ஞாயிறு
செய்த அற்புதங்கள்:
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்.
“மகேந்திரவர்மப் பல்லவனை” சைவராக்கினார்
திருமறைக்காட்டில் பாடியே கதவை திறக்கச் செய்தார்.
பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார்.
திருவையாற்றில் மூழ்கி எழுந்து, கயிலாயக் காட்சியை கண்டார்.
மகேந்திரவர்மப் பல்லவன் இவரை கல்லில் கட்டி கடலில் வீசிய போதும், “கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சி வாயவே” எனப் பாடி கடலில் கல்லுடன் மிதந்து கரை சேர்ந்தார்.
சிறப்பு:
சிவபெருமானே இவரை “நாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
“உழவாரப்படை” கொண்டு கோயில் தோறும் உழவாரப்பணி(புல் செதுக்கி சுத்தம் செய்தல்) மேற்கொண்டார்.
திருஞானசம்பந்தரை தன் தோலில் சுமந்து பல தலங்கள் சென்றுள்ளார்.
“என் கடன் பணி செய்து கிடபதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார்
இறைவனை கணவனாகவும், ஆன்மாவை மனைவியாகவும் உருவகித்து பாடியவர்.
குறிப்பு:
இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார்.
இவர் சமண சமயத்தில் இருந்த பொது இவரின் பெயர் = தருமசேனர்
இவர் 4900 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
ஆனால் இன்று கிடைப்பதோ 313 பதிகங்கள் மட்டுமே
சங்கம் என்னும் வார்த்தை முதன் முதலில் இவரது திருப்பத்தூர்த் தேவாரத்தில், “நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன் காண்” என்ற பாடலில் வருகிறது.
மேற்கோள்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்குஇள வேனிலும்
கல்துனைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச்சி வாயவே
நமார்ர்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்போம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
குனித புருவமும் கொவ்வைச் செவ்
வாயிற்குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குளமும் கொண்டு என் செய்வீர்?
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
என் கடன் பணி செய்து கிடப்பதே
2.திருஞானசம்பந்தர்
வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர் = ஆளுடையபிள்ளை
பெற்றோர் = சிவபாத இருதயார், பகவதி அம்மையார்
ஊர் = சீர்காழி(தோணிபுரம், பிரம்மபுரம், வேணுபுரம்)
மனைவி = சொக்கியார்
வாழ்ந்த காலம் = 16 ஆண்டுகள்
மார்க்கம் = கிரியை என்னும் சத்புத்திர மார்க்கம்
நெறி = மகன்மை நெறி
ஆட்கொள்ளட்பாட இடம் = சீர்காழி
இறைவனடி சேர்ந்த இடம் = பெருமண நல்லூர்
இவரின் தமிழ் = கொஞ்சு தமிழ்
படைப்புகள்:
1,2,3 ஆம் திருமுறைகள்
முதல் மூன்று திருமுறைகள் =”திருகடைகாப்பு” எனப் போற்றுவர்
வேறு பெயர்கள்:
ஆளுடையபிள்ளை(இயற்பெயர்)
திருஞானம் பெற்ற பிள்ளை
காழிநாடுடைய பிள்ளை
ஆணைநமதென்ற பெருமான்
பரசமயகோளரி
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தம்(சுந்தரர்)
திராவிட சிசு(ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லகரி என்னும் நூலில்)
இன்தமிழ் ஏசுநாதர்
சத்புத்திரன்
காழி வள்ளல்
முருகனின் அவதாரம்
கவுணியர்
சந்தத்தின் தந்தை
காழியர்கோன்
ஞானத்தின் திருவுரு
நான் மறையின் தனித்துணை
கல்லாமல் கற்றவன்(சுந்தரர்)
நிகழ்த்திய அற்புதங்கள்:
திருமறைக்காடு = மூடிய கோயில் கதவுகளை பாடித் திறக்க செய்தார்.
திருப்பாச்சிலாச்சிரமம் = மழவன் மகளின் முயலகன் நோய் நீக்கினார்
திருமருகல் = பாம்பு தீண்டிய வணிகனின் விடம் நீக்கினார்
திருவோத்தூர் = ஆண்பனையை பெண்பனை ஆக்கினார்
மதுரை = தான் தங்கியிருந்த மடத்திற்குக் கூன்பாண்டியன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்பு நோயாகப் பற்றச் செய்தார். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் வேண்ட, நீறு பூசி அவனின் வெப்பு நோய் நீக்கி, அவனின் கூன் நீக்கச் செய்து அவனை “நின்றசீர் நெடுமாறன்” ஆகினார்.
மதுரை = வாதத்துக்கு அழைத்த புத்தநந்தியின் தலை துண்டாகுமாறு செய்தார்.
மயிலாப்பூர் = குடத்தில் சாம்பலாக இருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிருடன் வரச் செய்தார்.
திருஏடகம் = வைகையாற்றில் இட்ட ஏடு கரை ஏறியது.
திருப்பூந்துருத்தி = நாவுக்கரசர் இவரை சுமந்த இடம்.
இறைவனிடமிருந்து பெற்றவை:
திருகோலக்காவில் = பொற்றாளம்
திருவாடுதுறை = பொற்கிழி
திருவீழிமிழலை = படிகாசு
திருவாயிலறத்துறை = முத்துச்சிவிகை
பட்டீஸ்வரம் = முத்துப்பந்தல்
குறிப்பு:
மூன்று வயதில் இவருக்கு உமையம்மையே நேரில் வந்து இவருக்கு “ஞானப்பால்” ஊட்டினார். அன்று முதல் இவர் “ஞானசம்பந்தன்” எனப் பெயர் பெற்றார்.
இவர் தந்தையாரின் தோளில் அமர்ந்தவாறே சிவத்தலங்கள் சென்று பாடினார்.
இவரின் அனைத்துப் பதிகங்களிலும் எட்டாவது பாடல் “இராவணன்” பற்றியும், ஒன்பதாவது பாடல் “மாலும் அயனும்” காண இயலாத சிவபெருமானின் பெருமையும், பத்தாவது பாடல் “சமண பௌத்த சமயங்கள்” துன்பம் தரும் தீங்கினை உடையன என்றும் பாடும் பாங்கினை கொண்டுள்ளன.
16 ஆண்டுகள் மட்டுமே இவர் உயிருடன் வாழ்ந்தார்.
அந்தணரான சம்பந்தர் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாணர் குளத்தை சேர்ந்த திருநீலகண்ட யாழ்பாணரை அழைத்து செல்வார்.
இவர் தன்னை தானே “தமிழ் ஞானசம்பந்தன்” என அழைத்துக்கொள்வார்
மதுரையில் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை தோற்கடித்தார். தோல்வி தாங்காமல் 8000 சமண முனிவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.
இவரின் தோழர் = சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார்
ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடியதாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்கு கிடைத்தது 384 பதிகங்கள் மட்டுமே.
கிடைக்கும் மொத்தப்பாடல்கள் = 4181
220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார்.
சம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம் = திருப்புகலூர்
சிறப்பு:
தந்தை இல்லாமல் சென்ற இடங்களில் சிறுவனான இவரை, திருநாவுக்கரசர் தம் தோளில் சுமந்து சென்றுளார்.(இடம் = திருப்பூந்துருத்தி)
திருநாவுக்கரசரை “அப்பர்” எனப் பெயர் இட்டு அழைத்தார்.
இவரின் நெறி = மகன்மை நெறி
இவரின் மார்க்கம் = சத்புத்திர மார்க்கம்
சேக்கிழார் தமது பெரியபுராணத்தில், “வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க இவர் தோன்றினார்” எனப் பாராட்டினார்.
தம் பாடல்களில் 23 பண் அமைத்துப் பாடியுள்ளார்.
ஏறத்தாழ 110 சந்தங்களை தன் பாடல்களில் அமைத்துப் பாடியுள்ளார். எனவே இவரை, “சந்தத்தின் தந்தை” என்று கூறுவர்.
யமகம், மடக்கு முதலிய சொல்லணிகட்கும், சித்திர கவிக்கும் முதன் முதலில் தொடங்கி வைத்தவர் சம்பந்தரே ஆவார்.
சேக்கிழார் பெரியபுராணத்தில் ஏறக்குறைய பாதிக்கு பாதி சம்பந்தர் வரலாறு இடம் பெறுவதால் “பிள்ளை பாதி புராணம் பாதி” எனப் போற்றப்படுகிறது.
இவர் “முருகனின் அவதாரமாகவே” கருதப்பட்டார்.
யாழ முறி இவருக்கு மட்டுமே உரியது.
மேற்கோள்:
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதனாம நமச்சிவாயமே
சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடுபால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே
3.சுந்தரர்
வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர் = நம்பி ஆரூரர்
பெற்றோர் = சடையனார், இசைஞானியார்
ஊர் = திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்
மனைவி = பரவையார், சங்கிலியார்
வாழ்ந்த காலம் = 18 ஆண்டுகள்
மார்க்கம் = யோகம் என்னும் சக மார்க்கம்
நெறி = யோகம் அல்லது தோழமை நெறி
ஆட்கொள்ளட்பாட இடம் = திருவெண்ணெய் நல்லூர்
இறைவனடி சேர்ந்த இடம் = கைலாயம்
இவரின் தமிழ் = மிஞ்சு தமிழ்
படைப்புகள்:
7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.
திருதொண்டத்தொகை
வேறு பெயர்:
வன்தொண்டர்
தம்பிரான் தோழர்
சேரமான் தோழர்
திருநாவலூறார்
ஆலாலசுந்தரர்
ஆளுடைய நம்பி
நிகழ்த்திய அற்புதங்கள்:
12000 பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.
செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.
வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன் வாழ்ந்தவர்.
பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான் உதவி புரிந்தார்.
இரு கண்ணையும் இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.
முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டார்.
சிறப்பு:
இவரின் திருமணத்தன்று இறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரர் தனது அடிமை என நிறுவினார்.
தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரை ஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.
சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.
மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையே தூதாக அனுப்பினார்
குறிப்பு:
இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.
இவர் 38000 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.
“வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.
மேற்கோள்:
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
தம்மானை அறியாத சாதியாரும் உளரோ
4.மாணிக்கவாசகர்
வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர் = தெரியவில்லை
பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்
ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர்
வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள்
மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம்
நெறி = ஞானம் நெறி
ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை
இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம்
படைப்புகள்:
8ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார்
திருவெம்பாவை
போற்றித் திருவகவல்
திருவாசகம்:
தமிழ் வேதம்
சைவ வேதம்
திருக்கோவையார்:
திருசிற்றம்பலக்கோவை
ஆரணம்
ஏரணம்
காமநூல்
எழுத்து
வேறு பெயர்கள்:
திருவாதவூரார்
தென்னவன் பிரம்மராயன்
அழுது அடியடைந்த அன்பர்
வாதவூர் அடிகள்
பெருந்துறைப் பிள்ளை
அருள் வாசகர்
மணிவாசகர்
சிறப்பு:
மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார்.(பரி=குதிரை)
பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.
திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.
தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.
புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.
“திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை
திருவாசகம்;
திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
“திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.
51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.
திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.
திருக்கோவையார்:
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.
திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்
இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து
இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.
400 பாடல்களைக் கொண்டது.
கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது
திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.
குறிப்புகள்:
அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.
மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.
மேற்கோள்:
நமச்சிவாயம் வாழ்க நாதம் தாள்வாழ்க
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
உற்றாரை யார்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
5.திருமூலர் :
பெயர்: திருமூலர்
குலம்: இடையர்
பூசை நாள்: ஐப்பசி அசுவினி
அவதாரத் தலம்: சாத்தனூர்
முக்தித் தலம்: திருவாவடுதுறை
முக்கிய சொற்றொடர்கள்:
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
நூல்கள்
திருமூலர் காவியம் 8000
சிற்பநூல் 1000
சோதிடம் 300
மாந்திரீகம் 600
வைத்தியச் சுருக்கம் 200
சூக்கும ஞானம் 100
சல்லியம் 1000
பெருங்காவியம் 1500
யோக ஞானம் 16
காவியம் 1000
தீட்சை விதி 100
ஆறாதாரம் 64
கருங்கிடை 600
கோர்வை விதி 16
பச்சை நூல் 24
விதி நூல் 24
தீட்சை விதி 18
திருமந்திரம் 3000
6.குலசேகர ஆழ்வார்
குறிப்பு:
இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்
இவர் வடமொழியில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்
இவர் இராமனுக்கு தாலாட்டு பாடியவர்
ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும்
திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார்
வேறு பெயர்கள்:
கொல்லிக் காவலன்
கூடல் நாயகன்
கோழிக்கோ
படைப்பு:
பெருமாள் திருமொழி
மேற்கோள்:
ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே
மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே
7.ஆண்டாள்
குறிப்பு:
பிறந்த ஊர் = ஸ்ரீவில்லிபுத்தூர்
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
இவர் பூமகள் அம்சமாகப் பிறந்தவர்
இவர் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்டார்
இவருக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் = கோதை இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெற்ற இடம் = திருவரங்கம்
இவரின் பாடல்களைப் “பள்ளமடை” என்றும், பிற ஆழ்வார்களின் பாடல்களை “மேட்டுமடை” என்றும் குறிப்பிடுவர்
திருப்பாவை:
திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்றவர் = இராமானுஜர்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
பாவை என்பது இருமடியாகு பெயர்.
திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.
இவரின் திருப்பாவை, பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது.
திருப்பாவைக்கு ஆண்டாள் இட்ட பெயர் = சங்கத் தமிழ் மாலை முப்பது
சிறப்பு பெயர்:
கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
நாச்சியார்
ஆண்டாள்
படைப்புகள்:
திருப்பாவை
நாச்சியார் திருமொழி
மேற்கோள்:
கற்பூரம் நாறுமோ! கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?
மறுப்பு ஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண்சங்கே!
வாரணம் ஆயிரம் சூழ வளஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று
மானிடவர்க்கு என்று பேச்சுப் படின்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
நாராயணனே நமக்கே பறைதருவான்
8.சீத்தலைச் சாத்தனார்
இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகிறது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் 'சாத்தன்' என்று வழங்குகின்றது 'சீத்தலை' என்னும் அடைமொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையார் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக்கொள்ள அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் 'சீத்தலை' என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று கூறுவார் கூற்றுப் பொருத்தமாகத் தோன்றுகிறது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகஞ் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர்.
சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய 'சாத்தன்' என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை.
'சாத்தன்' என்னும் பெயர் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில் மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நம் சாத்தனாருக்கும் அவ்வாறே 'சீத்தலை', 'மதுரைக் கூலவாணிகர்' என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார்; எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல் வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ்நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல்நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சிபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று செங்குட்டுவனுக்கும், அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில் தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன், கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான். இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக 'மணிமேகலை' என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார்.
மணிமேகலையை இயற்றியது மன்றி, வேறு சில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.
சங்க நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மெற்கண்ட செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவது கொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ? ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச் சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காக மட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது. தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்குமட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லாமக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது. இவர் தாம் இயற்றி மணிமேகலையில்,
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" (மணிமேகலை 22-060)
என்று திருக்குறளை மேர்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி.
9.எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை:
நூலாசிரியர்
தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியதில் ஐரோப்பியக் கிறித்துவச் சமயத் தொண்டர்களுக்குப் பெரும் பங்குண்டு. ஐரோப்பியக் கிறித்துவத் தமிழ்த் தொண்டர்களைப் போல, தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.
வாழ்க்கை வரலாறு:
பிறப்பு
தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை. தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். இவர்கள் வைணவ சமயத்தினர். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத் தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். தம் புதல்வருக்கும் தக்க ஆசிரியர்கள் வாயிலாகத் தமிழ்ப் பயிற்சியும் வடமொழிப் பயிற்சியும் கொடுத்தார்.
கிறித்துவராதலும் பணிசெயலும்:
சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழாசிரியராகக் கவிஞர் பணியாற்றினார். அப்பொழுது, இயேசு பெருமானின் அறக்கருத்துகளினால் ஈர்க்கப்பெற்றுக் கிறித்துவராக மாறினார். தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள தூய தாமசு ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அது முதல் ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணபிள்ளை என வழங்கப்பட்டார். இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ்.கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். மேலும் கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
இறப்பு
தமது 73ஆம் வயதில் கி.பி. 1900ஆம் ஆண்டு, பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்தார்.
சமகால அறிஞர்கள்
இவர் காலத்தில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தனர்.
ஆசிரியரது படைப்புகள்
இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தை இயற்றிப் பெரும் புகழ் கொண்டவர் கிருஷ்ண பிள்ளை. இவர் இரட்சணிய யாத்திரிகம் மட்டுமன்றி வேறு பல அரிய நூல்களையும் இயற்றியுள்ளார். இறைவனைப் புகழும் இனிய தேவாரப் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திரு அகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். அவ்வாறே இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை கிறித்துவரான வரலாறு என்ற தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் படைத்துள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார். வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.
10.உமறுப்புலவர்:
ஆசிரியர் குறிப்பு:
உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.
நூல் குறிப்பு:
சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
இந்நூல் விலாதத்துக் காண்டம்(பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம்(செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம்(செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.
பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.
மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.
சீறாப்புரானத்தில் நபிகளின் வல்லவு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அது “சின்ன சீறா” என வழங்கப்படுகிறது.
- திருக்குறள்
- அறநூல்கள்
- கம்பராமாயணம்
- எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள்
- சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்
- பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்
- இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்
- இலக்கியம் சமய முன்னோடிகள்
- இலக்கியம் prepare
- 1.திருக்குறள் மாதிரி தேர்வு
- 2.அறநூல்கள் மாதிரி தேர்வு
- 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு
- 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA
- One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி