Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் பெரிய புராணம்,நாலாயிரந்திவ்விய பிரபந்தம் - திருவிளையாடற்புராணம் - தேம்பாவணி - சீறாப்புராணம்

பெரிய புராணம்

  • தனியடியார்கள் 63 பேர் மற்றும் தொகையடியார்கள் 9 பேர் என மொத்தம் 72 சிவனடியார்களைப்பற்றி கூறும் புராணம் பெரியபுராணம் .
  • இது அடியார்களின் பெருமைப்பற்றி கூறுவதால் பெரிய புராணம் என்றழைக்கப்படுகிறது.
  • தில்லை நடராசப்பெருமான் ‘ உளமெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ’ என அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு பாடப்பட்டது .
  • இப்பாடல் தெய்வமனம் கமழுவதால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ‘பக்திச்சுவை நனிசொட்ட சொட்டப் பாடிய கவிவளவ’ என சேக்கிழாரைச் சிறப்பித்துள்ளார் .
  • இந்நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம் .
  • இது திருத்தொண்டர் மாக்கதை எனவும் அழைக்கப்படுகிறது .
  • உலகம் , உயிர் , கடவுள் ஆகிய மூன்றனையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என திரு.வி.க பாராட்டியுள்ளார் .
  • தமிழில் தோன்றி இரண்டாவது தேசிய காப்பியம்.
  • சேக்கிழாரின் இயற்பெயர் அருள்மொழித்தேவர் . இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் . அம்மன்னன் இவருக்கு இட்டபெயர் உத்தமச்சோழபல்லவராயன் .
  • சேக்கிழார் , தொண்டற்சீர்பரவுவார் என்றும் அழைக்கப்படுகிறார் .
  • கல்வெட்டுகள் இவரை ராமத்தேவர் என்று கூறுகிறது .


நாலாயிரந்திவ்விய பிரபந்தம்:

  • வைணவக்கடவுளைப்போற்றி பாடுவது மங்களாசாசனம் செய்தல் எனப்படும்.
  • இதைப்பாடியவர்கள் ஆழ்வார்கள்.
  • இறைவனின் திருவடியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்.
  • இவர்கள் 12 பேர் ஆவார்கள்.
  • இப்பாடல்களின் தொகுப்பு நாலாயிரந்திவ்விய பிரபந்தம் எனப்படும்.
  • இப்பாடல்களைத்தொகுத்தவர் நாதமுனிகள்.
  • இதற்கு உரையெழுதியவர் – பெரியவாய்ச்சான் பிள்ளை ஆவார் .
  • இவர் வியாக்கியான சக்கிரவர்த்தி என்று புகழப்படுகிறார்.
  • நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தின் வேறுபெயர்கள் - தீந்தமிழ்ப்பனுவல், அருந்தமிழ் பனுவல், திராவிட சாகரம்.
  • பொய்கை , பூதம் , பேய் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
  • இவர்கள் மூவரும் சந்தித்த இடம் திருக்கோவிலூர்
  • பிரிவுகள்:

    இந்நூல் முதலாயிரம் 947 பாடல்கள், பெரிய திருமொழி 1134 பாடல்கள், திருவாய்மொழி 1102 பாடல்கள், இயற்பா 817 பாடல்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

    பாடுபொருள்

    இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன.

    பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன.

    இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும்.

    இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும்.

    இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர்.

    நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலின் தனிச்சிறப்பு:

    தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு.

    வேறு பெயர்கள்:

    • ஆன்ற தமிழ் மறை
    • ஐந்தாவது வேதம்
    • திராவிட வேதம்
    • திராவிட பிரபந்தம்

    பன்னிரு ஆழ்வார்கள்

    இந்நூலை இயற்றிய பன்னிரு ஆழ்வார்கள்:

    • 1. பொய்கையாழ்வார்
    • 2. பூதத்தாழ்வார்
    • 3. பேயாழ்வார்
    • 4. திருமழிசையாழ்வார்
    • 5. நம்மாழ்வார்
    • 6. மதுரகவியாழ்வார்
    • 7. குலசேகர ஆழ்வார்
    • 8. பெரியாழ்வார்
    • 9. ஆண்டாள்
    • 10. தொண்டரடிப்பொடியாழ்வார்
    • 11. திருப்பாணாழ்வார்
    • 12. திருமங்கையாழ்வார்

    திவ்ய பிரபந்தங்கள் :

    12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் : 24

    • 1. திருப்பல்லாண்டு
    • 2. பெரியாழ்வார் திருமொழி
    • 3. திருப்பாவை
    • 4. நாச்சியார் திருமொழி
    • 5. பெருமாள் திருமொழி
    • 6. திருச்சந்த விருத்தம்
    • 7. திருமாலை
    • 8. திருப்பள்ளி எழுச்சி
    • 9.அமலனாதிபிரான்
    • 10.கண்ணிநுண்சிறுத்தாம்பு
    • 11.பெரிய திருமொழி
    • 12.திருக்குறுந்தாண்டகம்
    • 13.திருநெடுந்தாண்டகம்
    • 14.முதல் திருவந்தாதி
    • 15.இரண்டாம் திருவந்தாதி
    • 16.மூன்றாம் திருவந்தாதி
    • 17.நான்முகன் திருவந்தாதி
    • 18.திருவிருத்தம்
    • 19.திருவாசிரியம்
    • 20.பெரிய திருவந்தாதி
    • 21.திருஎழுகூற்றிருக்கை
    • 22.சிறிய திருமடல்
    • 23.பெரிய திருமடல்
    • 24.இராமானுச நூற்றந்தாதி

    முதலாயிரம் பாடல்கள்

    பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (12), திருமொழி (461)

    ஆண்டாள் – திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)

    குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (105)

    திருமழிசை ஆழ்வார் – திருசந்தவிருத்தம் (120)

    தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (45), திருப்பள்ளி எழுச்சி(10)

    திருப்பாணன் ஆழ்வார் – அமலனாதிபிரான்(10)

    மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (11)

    இரண்டாவது ஆயிரம் பாடல்கள்

    திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி (1084)

    திருகுறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம் (30)

    மூன்றாவது ஆயிரம் பாடல்கள்

    பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி (100)

    பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி (100)

    பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி (100)

    திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி (96)

    நம்மாழ்வார் – திருவிருத்தம் (100), திருவாஞ்சியம் (7), பெரிய திருவந்தாதி (87)

    திருமங்கை ஆழ்வார் – திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (78)

    திருவரங்கத்தமுதனார் – இராமானுச நூற்று அந்தாதி (108)

    நான்காவது ஆயிரம் பாடல்கள்

    நம்மாழ்வார் – திருவாய்மொழி (1102)

    ஆழ்வார்களின் வேறு பெயர்கள்:



ஆழ்வார்களின் சிறப்புகள்


பெரியாழ்வார்


  • இவர் பிள்ளைத்தமிழின் முன்னோடி ஆவார். பிள்ளைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.
  • மாணிக்கம் கட்டி எனும் இவருடை பாத்துப்பாட்டு, தமிழின் மிகத்தொன்மையான தாலாட்டுப்பாடலாகும்.


ஆண்டாள்


  • வில்லிப்புத்தூரில் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  • பெரியாழ்வாரின் வளர்ப்புமகள்.
  • பெரியாழ்வார் இவருக்கு இட்ட பெயர் கோதை
  • இவர் பூமகள் ஆம்சமாக பிறந்தவர்.
  • பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை .
  • இது பாவைப்பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
  • திருப்பாவையின் பாக்கள் முப்பதும் பொற்சக கலிப்பா வகையைச்சார்ந்தது.
  • வேதம் அனைத்திற்கும் வித்தாவது திருப்பாவை என ராமானுஜர் கூறுகிறார் திருப்பாவையின் மீதுள்ள ஆர்வத்தால் இவர் திருப்பாவை ஜீயர் எனப் புகழப்படுகிறார்
  • ஆன்டாள் எழுதிய திருப்பாவை, நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக உள்ளது .
  • இவர் திருமாலை மணம் செய்வதாக கனாக்கண்டு பாடிய வாரணம் ஆயிரம் என்ற பாடல், இன்றும் தென்கலை வைணவர்களின்ன திருமணத்தின்போது தவறாமல் பாடப்படுகிறது.
  • இறைவனுக்கும் ஆன்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் (அ) ஸ்ரீரங்கம்
  • பாவை என்பதன் இலக்கணக்குறிப்பு இருமடி ஆகுபெயர்.

  • நம்மாழ்வார்


    • இவர் இயற்றிய நான்கு நூல்களும் வேதங்களின் சாரம் என்று புகழப்படுகிறது.
    • இவரின் திருவாய்மொழி ,திராவிடவேதம் என்றும் தமிழ்மறை ஆதிரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது .

    மதுரகவி ஆழ்வார்


    • இவர் திருமாலைப்பாடாமல், தம்குருநாதரான நம்மாழ்வாரை பற்றி பாடியவர்.


    திருமங்கை ஆழ்வார்


    • இவரின் திருவெழுங்கூற்றறிக்கை, சொல்லணியில் அமைத்துப்பாடப்பட்ட நூலாகும்.
    • மடல் எனும் சிற்றிலக்கிய வகையைத்தொடங்கியவர்.
    • திருடனாக இருந்து ஆழ்வாராக மாறியவர்.


    குலசேகர ஆழ்வார்


    • இவர் சேரமன்னர் மரபில் வந்த ஆழ்வார்.
    • திருவாஞ்சிக்களத்தில் , கி.பி9 – ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
    • இவர் கௌத்துவமணியின் அம்சமாக பிறந்தவர்.
    • நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல்கள் முதல் ஆயிரத்தில் உள்ளது.
    • இவர் இயற்றிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக்கொண்டது.
    • இவர் திருவரங்கத்தில், 3வது மதிலைக்கட்டியதால், அவ்வீதிக்கு குலசேகரன் வீதி எனப்பெயர் உண்டாயிற்று .
    • இவரின் மிகப்பெரிய தாலாட்டுப்பாடலாக இப்போது கிடைத்திருப்பது மண்ணுப்புகழ் என்ற பத்துப்பாட்டு .
    • மலையில் ஏதேனும் ஒரு பொருளாக இருக்க விரும்பியவர்


    திருவிளையாடற் புராணம்:

    • இது சிவபெருமானின் திருவிளையாட்டைப்பற்றி கூறும் நூல் .
    • முதன்முதலில் இறைவனின் திருவிளையாடலைப்பற்றி கூறிய நூல் – கல்லாடம் . ஆசிரியர் கல்லாடர் .
    • ‘கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே ’ என்பது பழமொழி .
    • முதன்முதலில் திருவிளையாடற்புராணம் பாடியவர் – பெரும்பற்ற புலியூர் நம்பி (13 – ம் நூற்றாண்டு ) . இவர் பாடியது திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் . பின்னர் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமே புகழ்பெற்றது . இது சொக்கர் சோமசுந்தர பெருமானின் திருவிளையாடல்களை கூறுகிறது .
    • கந்தபுராணத்தின் ஆலாசியமான்மியத்தை அடிப்படையாகக்கொண்டு திருவிளையாடற்புராணமானது இயற்றப்பட்டது .
    • 3 காண்டங்களையும் 64 படலங்களையும் 3363 விருத்தப்பாக்களையும் கொண்டது .
      1. மதுரைக்காண்டம் – 18 படலம்
      2. கூடற்காண்டம் – 30 படலம்
      3. ஆலவாய்க்காண்டம் – 16 படலம்
    • பரஞ்சோதி முனிவரின் தி.வி.புராணத்திற்கு உரையெழுதியவர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் .
    • பரஞ்சோதி முனிவர் மதுரையில் தங்கியிருந்தபோது அம்மாநகர மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தி.வி.புராணத்தை இயற்றினார் .இந்நூலை சிவனின் திருக்கோயிலுக்கு எதிரே உள்ள ஆறுகால் பீடத்தில் வடமொழி , தென்மொழிப்புலவர்கள் யாவரும் போற்ற அரங்கேற்றினார் .
    • உடல்முழுவதும் கண்களை உடையவன் – இந்திரன்
    • இறைவனின் பாடலைப்பெற்றுச்சென்றவன் – தருமி
    • பொற்கிழிப்பெறச்சென்ற தருமியைத்தடுத்தவர் – நக்கீரர் .
    • பொற்கிழிப்படலம் இடம்பெற்ற காண்டம் – திருவாலவாய்க்காண்டம் .


    திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள்

    திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.

    • 1. இந்திரன் பழி தீர்த்த படலம்
    • 2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
    • 3. திருநகரங்கண்ட படலம்
    • 4. தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்
    • 5. தடாதகை பிராட்டியாரின் திருமணப் படலம்
    • 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
    • 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
    • 8. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்
    • 9. ஏழுகடல் அழைத்த படலம்
    • 10. மல‌யத்துவசனை அழைத்த படலம்
    • 11. உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்
    • 12. உக்கிரபாண்டியனுக்கு வேல், வளை, செண்டு கொடுத்த படலம்
    • 13. கடல் சுவற வேல்விட்ட படலம்
    • 14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
    • 15. மேருவைச் செண்டால் அடித்த படலம்
    • 16. வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
    • 17. மாணிக்கம் விற்ற படலம்
    • 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
    • 19. நான்மாடக் கூடலான படலம்
    • 20. எல்லாம் வல்ல சித்தரான படலம்
    • 21. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம்
    • 22. யானை எய்த படலம்
    • 23. விருத்த குமார பாலரான படலம்
    • 24. கால்மாறி ஆடின படலம்
    • 25. பழி அஞ்சின படலம்
    • 26. மாபாதகம் தீர்த்த படலம்
    • 27. அங்கம் வெட்டின படலம்
    • 28. நாகம் எய்த படலம்
    • 29. மாயப் பசுவை வதைத்த படலம்
    • 30. மெய் காட்டிட்ட படலம்
    • 31. உலவாக்கிழி அருளிய படலம்
    • 32. வளையல் விற்ற படலம்
    • 33. அட்டாம சித்தி உபதேசித்த படலம்
    • 34. விடை இலச்சினை இட்ட படலம்
    • 35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
    • 36. இரசவாதம் செய்த படலம்
    • 37. சோழனை மடுவில் வீழ்த்திய படலம்
    • 38. உலவாக் கோட்டை அருளிய படலம்
    • 39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
    • 40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
    • 41. விறகு விற்ற படலம்
    • 42. திருமுகம் கொடுத்த படலம்
    • 43. பலகை இட்ட படலம்
    • 44. இசைவாது வென்ற படலம்
    • 45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்
    • 46. பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்
    • 47. கரிகுருவிக்கு உபதேசம் செய்த படலம்
    • 48. நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
    • 49. திருஆலவாயான படலம்
    • 50. சுந்தரப் பேரம்பு எய்த படலம்
    • 51. சங்கப்பலகை கொடுத்த படலம்
    • 52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
    • 53. கீரனை கரையேற்றிய படலம்
    • 54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
    • 55. சங்கத்தார் கலம்தீர்த்த படலம்
    • 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
    • 57. வலை வீசின படலம்
    • 58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
    • 59. நரியை பரியாக்கிய படலம்
    • 60. பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்
    • 61. மண் சுமந்த படலம்
    • 62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
    • 63. சமணரை கழுவேற்றிய படலம்
    • 64. வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்

    கந்தபுராணம்


    • ஆசிரியர் – கச்சியப்பர்
    • இது சைவர்களின் இதிகாசம் என்று பாராட்டப்படுகிறது
    • இதுவே புராணங்களில் மிகப்பெரியது (10000 பாடல்கள்)
    • கட்சியப்பர் , ‘ புராண நன்நாயகம் ’ எனச் சிறப்பிக்கப்படுகிறார் .
    • கண்ணனின் பாலலீலையைக்கூறுவது பாகவதப்புராணம் . அதேபோல் முருகனின் பால லீலையைக்கூறுவது கந்தபுராணம் .


    பிறபுராணங்கள்


    • அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
    • சேக்கிழார் புராணம் – உமாபதி சிவாச்சாரியார்
    • கூர்ம புராணம் – அதிவீர ராமபாண்டியன் .


    ஆசிரியர் குறிப்பு:


    • நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தார்.
    • தமிழிலும், வடமொழியிலும் புலமை பெற்றவர் மீனாட்சி சுந்தர தேசிகர்.
    • பரஞ்சோதி முனிவர் துறவியாகச் சிவாலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
    • மதுரை மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர். அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார்.
    • அந்நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணைங்க திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென் மொழிப்புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
    • திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.


    நூற்குறிப்பு:


    • திருவிளையாடற் புராணம், மதுரைக் காண்டம் (பதினெட்டுப் படலம்), கூடற்காண்டம் (முப்பது படலம்), திருவாலவாய்க் காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
    • இதில் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்தி மூன்று விருத்தப் பாக்கள் உள்ளன.
    • மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளங்குகின்றன.
    • இந்நூல், இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுல் விரிவானதும் சிறப்பானதும் ஆகும்.
    • தொடைநயம் பக்திச்சுவை மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
    • உடல் முழுவதும் கண்களை உடையவர் - சிவபெருமான்
    • பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவர் - நக்கீரனர்
    • இறைவனிடம் பாடலைப் பெற்றுச் சென்றவர் - தருமி
    • தமிழ்ப்புலவர்கள் இறைவனுக்கும் தமிழுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்தவே திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்களை இயற்றியதாகக் கொள்ளலாம்.
    • புலவர் தம் புலமைத் திறத்தை அறிய இறைவனை வேண்டிச் சங்கப் பலகையைப் பெற்றனர்.


    சொற்பொருள்:


    • வையை நாடவன் - பாண்டியன்
    • உய்ய - பிழைக்க
    • இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்.
    • தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ)) சுந்தரபாண்டியன்
    • இன்னல் - துன்பம்
    • நல்கினார் - அளித்தார்
    • இறைஞ்சி - பணிந்து
    • அளக்கில் கேள்வியார் - அளவற்ற கேள்வியறிவினர்.
    • சிரம் துளக்கி - தலையசத்து
    • புறம்பு - வெளியில்
    • பையுள் - வருத்தம்
    • நம்பி - தருமி
    • கண்டம் - கழுத்து
    • வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்
    • ஆர்அவை - (புலவர்) நிறைந்த அவை
    • சீரணி - புகழ்வாய்ந்த
    • வேணி - செஞ்சடை
    • மீனவன் - மீன்கொடியை உடைய பாண்டியன்
    • விபுதர் - புலவர்
    • பொற்கிழி - பொன் முடிப்பு
    • கிளத்தினேன் - சொன்னேன்
    • ஓரான் - உணரான்
    • அற்குற்ற - (அல்கு+ உற்ற) - இருளையொத்த
    • நாற்றம் - நறுமணம்
    • குழல் - கூந்தல்
    • அல்கு - இரவு
    • ஞானப்பூங்கோதை - உமையம்மை
    • உம்பரார் பதி - தேவர் தலைவன் (இந்திரன்)
    • கரந்தான் - மறைந்தான்
    • நாவலன் - புலவர்


    இலக்கணக் குறிப்பு:


    • உரைத்து, இரந்து - வினையெச்சங்கள்
    • சொல்லி, இறைஞ்சி - வினையெச்சங்கள்
    • விளக்கி, சிறந்து - வினையெச்சங்கள்
    • மகிழ்ந்த - தொழிற்பெயர்
    • தூங்கிய, ஆயந்த - பெயரெச்சங்கள்
    • நேர்ந்த - வினையெச்சம்
    • கொண்டு, வைத்து - வினையெச்சங்கள்
    • நோக்கி - வினையெச்சம்
    • கிளத்தினேன் - தன்மை ஒருமை வினைமுற்று
    • தேராக்கீரன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    • புனைமலர் - வினைத்தொகை
    • பற்றுவான், அஞ்சான் - வினையாலணையும் பெயர்கள்
    • குற்றம் - தொழிற்பெயர்
    • விழுந்து - வினையெச்சம்
    • செந்நீ, வெம்மை - பண்புத்தொகை
    • தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த - பெயரெச்சங்கள்


    தேம்பாவணி

    ஆசிரியர் குறிப்பு:


    • பெயர் – வீரமாமுனிவர்
    • இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
    • பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
    • பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
    • அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
    • தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
    • சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
    • இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
    • காலம் – 1680-1747


    நூல் குறிப்பு:


    • தேம்பாவணி = தேம்பா + அணி.
    • தேம்பாவணி = தேன் + பா + அணி(தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
    • இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.
    • இநூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
    • இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன


    சீறாப்புராணம்

    நூல் குறிப்பு:


    • சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள்.
    • சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள்.
    • இந்நூல் விலாதத்துக் காண்டம்(பிறப்பியற் காண்டம்), நுபுவ் வத்துக் காண்டம்(செம்பொருட் காண்டம்), ஹிஜ்ரத்துக் காண்டம்(செலவியற் காண்டம்) என்ற மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
    • இந்நூலில் 5027 விருதப்பாக்கள் உள்ளன.
    • பெருமானார் பிறந்ததும் இளமை நிகழ்வுகளும் திருமணமும் விலாதத்துக் காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
    • வானவர் ஜிப்றாயில் மூலம் திருமுறை நபிகள் பெருமானார்க்கு அருளப்பட்டதும் அதன்பின் மக்கத்தில் நடந்தவையும் நுபுவ்வத்துக் காண்டத்தில் பேசப்படுகின்றன.
    • மக்கத்தை விட்டுப் பெருமானார் மதீனம் சென்றதும் தீன் நிலை நிறுத்தற்காக நிகழ்ந்த போர்களும் பிறவும் ஹிஜ்றத்துக் காண்டத்தில் வரையப்பட்டுள்ளன.
    • சீறாப்புரானத்தில் நபிகளின் வல்லவு முற்றிலுமாகப் பாடி நிறைவு செய்யப்படவில்லை.
    • பனூ அகமது மரைக்காயர் என்பவர் தாம் பெருமானாரின் தூய திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தார். அது “சின்ன சீறா” என வழங்கப்படுகிறது.


    ஆசிரியர் குறிப்பு:


    • உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
    • செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் வண்ணமே உமறுப்புலவர் சீறாப்புராணத்தை எழுதினார்.
    • நூல் முடிவுறும் முன்னரே சீதக்காதி மறைந்தார்.
    • பின் அபுல் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது.
    • உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற என்பது பாக்களால் ஆன நூலையும் படைத்துள்ளார்.


    Share with Friends