Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் இலக்கியம் நாட்டுப்புறப்பாட்டு,சித்தர் பாடல்கள்

நாட்டுப்புறப்பாட்டு

ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும் பாடிப்பாடிப் பழகி விடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல் தான் "நாட்டுப்புறப் பாடல்" எனப்படுகிறது.

வாய்மொழி இலக்கியம்
எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற பாட்டு நாட்டுப்புறப்பாட்டு. இதேபோல எழுதப்படாத எல்லாருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இவற்றையெல்லாம் "வாய்மொழி இலக்கியம்" என்று கூறுவார்கள்.

  • சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடும் கானாப்பாடல் கூட நாட்டுப்புறப் பாடல்தான்.
  • கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புரப் பாடல்தான்.
  • குழந்தையைக் கொஞ்சவேண்டும் என்று தோன்றினால் தாலாட்டுப்பாட்டு தானாகவந்து விடும்.
  • இறந்தவர்களைப் பார்த்ததும் அழுகை வந்துவிடும். அத்துடன் ஒரு சோகப் பாடலாக ஒப்பாரியும் வந்துவிடும்.
  • அப்படிப்பாடுகிறவர் ஏற்கெனவே தான் எங்கோ கேட்ட பாடல் வரிகளோடு தானும் சில வரிகளைச் சேர்த்துப் பாடிவிடுவார்.
  • இப்படியே நாட்டுப்புரப் பாடல் வளர்ந்து கொண்டே போகும்.
  • நாட்டுப்புரப் பாடல்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்:
    • தாலாட்டுப் பாடல்கள்
    • விளையாட்டுப் பாடல்கள்
    • தொழில் பாடல்கள்
    • சடங்குப் பாடல்கள்
    • கொண்டாட்டப் பாடல்கள்
    • வழிபாட்டுப் பாடல்கள்
    • ஒப்பாரிப் பாடல்கள்
  • பிறந்த குழந்தைக்குப்பாடுவது தாலாட்டுப் பாடல்
  • கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டுப் பாடல்.
  • களைப்பு நீங்க, வேலை செய்வோர்பாடுவது தொழில் பாடல்.
  • திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்குப் பாடல்,
  • கொண்டாட்டப் பாடல்கள், சாமி கும்பிடுவோர்பாடுவது வழிபாட்டுப் பாடல்
  • இறந்தோருக்குப்பாடுவது ஒப்பாரிப் பாடல்

எ.கா : விழிப்புணர்வுப்பாடல்
"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் "
என்ற பாடல், நமது நாட்டு விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான நாட்டுப்பாடல்

நாட்டுப்புற இலக்கியத்தை தொகுத்தவர்கள் :
பேச்சு வழக்கில் இருந்த நாட்டுப்புற இலக்கியக் கருவூலங்களா இதை பாதுகாத்துத் தொகுத்தவர்களின் பணி பாராட்டுக்குரியது.

  • அன்னகாமு - ஏட்டில் எழுதாக் கவிதைகள்
  • கி.வா. ஜ. - நாடோடி இலக்கியம், மலையருவி
  • நா. வானமாமலை வீரபாண்டிய காத்தவராய முத்துப் பட்டன் கதைப்பாடல்கள்
  • தமிழண்ணல் - தாலாட்டு
  • தூரன் - காற்றிலே வந்த கவிதை
  • மெ. சுந்தரம் - நாட்டுப்புறப்பாடல்கள்

சித்தர் பாடல்கள்

  • சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள்
  • இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.
  • "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
  • உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர்.
  • கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
  • நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் எனப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
  • பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.
  • சித்தர்கள் 18 பேர் என்று கூறுவது மரபு . ஆனால் இந்த எண்ணிக்கை வரையறுத்துக் கூறப்படவில்லை .
  • மக்கள் இலக்கியம் என போற்றப்படுவது சங்க இலக்கியம் அல்லது சித்தர் பாடல்கள் .
  • இந்த சித்தர் பாடல்கள் நேரடியாக ஒரு பொருளையும் மறைமுகமாக ஒரு பொருளையும் உணர்த்தும் .
    1. அகத்தியர் ( சித்தர்களின் தலைவர்)
    2. பட்டிணத்தார்
    3. பத்திரகிரியார்
    4. சிவாக்கியார்
    5. பாம்பாட்டிச் சித்தர்
    6. இடைக்காட்டுச்சித்தர்
    7. அகப்பேய்ச்சித்தர்
    8. குதம்பைச்சித்தர்
    9. காடுவெளிச்சித்தர்
    10. அழுகுணிச்சித்தர்
    11. கொங்கணச்சித்தர்
    12. பீர் முகமது
    13. மதுரை வாலைச்சாமி
    14. சடைமுனி
    15. திருமூலர்
    16. ரோமரிஷி
    17. கருவூரார்
    18. இராமலிங்க அடிகளார்

Share with Friends