Easy Tutorial
For Competitive Exams

Aptitude Tamil பரப்பளவு & சுற்றளவு (Area & Perimeter) Test - 1

49747.சதுர வடிவப் பூந்தோட்டத்தின் பக்கம் 40 மீ. பூந்தோட்டத்தைச் சுற்றி மீட்டருக்கு ரூ.10 வீதம் வேலிபோட ஆகும் செலவைக் காண்க.
ரூ.1500
ரூ.1600
ரூ.1300
ரூ.1400
Explanation:
சதுர வடிவப் பூந்தோட்டத்தின் பக்கம் 40 மீ வேலிபோட ஆகும்.
மொத்த செலவைக் காண தோட்டத்தின் சுற்றளவைக் கண்டு அதை மீட்டருக்கு ஆகும் செலவுடன் பெருக்கினால் போதுமானது சதுர வடிவப் பூந்தோட்டத்தின் சுற்றளவு = 4 * பக்கம்
= 4 * 40 = 160 மீ
வேலிபோட ஒரு மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10
160 மீட்டருக்கு ஆகும் செலவு = ரூ.10 * 160
= ரூ.1600
49748.80 மீ நீளம் உடைய செவ்வக வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 3200 ச.மீ. தோட்டத்தின் அகலத்தைக் காண்க.
40 மீ
81 மீ
54 மீ
67 மீ
Explanation:
நீளம் =80 மீ ,
பரப்பளவு =3200 ச.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் * அகலம்
அகலம் = செவ்வகத்தின் பரப்பளவு / நீளம்
= 3200 / 80
= 40 மீ
தோட்டத்தின் அகலம் = 40 மீ
49749.40 மீ உயரம் கொண்ட ஒரு முக்கோண வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 800 ச.மீ. அதன் அடிப்பக்கத்தின் நீளத்தைக் காண்க.
50 மீ
80 மீ
20 மீ
40 மீ
Explanation:
முக்கோணவடிவத் தோட்டத்தின் பரப்பளவு = 800 ச.மீ
1/2 * b * h = 800
1/2 * b * 40 = 800
20 * b = 800
b = 800 / 20 = 40 மீ
அடிப்பக்கத்தின் நீளம் = 40 மீ
49750.இரண்டு சதுரத்தின் சுற்றளவு முறையே 40 செ.மீ மற்றும் 32 செ.மீ ஆகும். மூன்றாவது சதுரத்தின் பரப்பளவானது மற்ற இரண்டு சதுரத்தின் பரப்பளவின் வித்தியாசங்களுக்குச் சமம் ஆகும். ஆகவே மூன்றாம் சதுரத்தின் சுற்றளவு காண்க.
23 செ.மீ
24 செ.மீ
25 செ.மீ
26 செ.மீ
Explanation:
முதல் சதுரத்தின் பக்கம் = (40 / 4) செ.மீ = 10 செ.மீ
இரண்டாம் சதுரத்தின் பக்கம் = (32/4) = 8 செ.மீ
மூன்றாம் சதுரத்தின் பரப்பளவு = $[(10)^2 - (8)^2 ] செ.மீ^2$
= (100 - 64) $செ.மீ^2$
= 36 $செ.மீ^2$
மூன்றாம் சதுரத்தின் பக்கம்= $\sqrt{36}$ செ.மீ = 6 செ.மீ
மூன்றாம் சதுரத்தின் சுற்றளவு = 4 * 6 = 24 செ.மீ
49761.5 மீ 44 செ.மீ நீளமும், 3 மீ 74 செ.மீ அகலமும் உடைய ஒரு அறையில் சதுர வடிவிலான ஓடுகள் பதிக்க முடிவெடுக்கப்படுகின்றது. ஆகவே, தேவைப்படும் குறைந்தபட்ச சதுர வடிவ ஓடுகளின் எண்ணிக்கையைக் காண்க.
169 சதுர ஓடுகள்
176 சதுர ஓடுகள்
156 சதுர ஓடுகள்
183 சதுர ஓடுகள்
Explanation:
நீளம் = 5 * 100 + 44 = 544 செ.மீ
அகலம் = 3 * 100 + 74 = 374 செ.மீ
அறையின் பரப்பளவு = (544 * 374) $செ.மீ^2$
தேவைப்படும் குறைந்தபட்ச சதுர வடிவ ஓடுகளின் எண்ணிக்கை = 544 மற்றும் 374 இன் மீ.பெ.வ
544 செ.மீ மற்றும் 374 செ.மீ இன் மீ.பெ.வ = 34 செ.மீ
ஆகவே ஒரு சது ஓட்டின் பரப்பளவு = (34 * 34) $செ.மீ^2$
தேவைப்படும் சதுர ஓடுகளின் எண்ணிக்கை = (544 * 374) / (34 * 34) = 176 சதுர ஓடுகள்.
49762.ஒரு நகரத்தின் முதல் வருட மக்கட்தொகையானது 5% அதிகரித்துள்ளது மற்றும் இரண்டாம் வருட மக்கட்தொகையானது 5% குறைந்துள்ளது. இரண்டாம் வருட இறுதியில் இருந்த மொத்த மக்கட்தொகையானது 9975 ஆகும். ஆகவே முதல் வருட தொடக்கத்தில் இருந்த மக்கட்தொகையினைக் காண்க.
70000
5000
20000
10000
Explanation:
முதல் வருட தொடக்கத்தில் இருந்த மக்கட்தொகை
= [ (9975) / [ (1 + (5/100) * (1 - (5/100) 1]
= 9975 * (20/21) * (20/19)
முதல் வருட தொடக்கத்தில் இருந்த மக்கட்தொகை = 10000

49763.ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50% குறைந்தால், அதன் பரப்பளவில் குறைந்துள்ள சதவீதத்தினைக் காண்க.
75%
25%
50%
100%
Explanation:
ஆரம்பத்தில் வட்டத்தின் ஆரம் = R
புதிய ஆரம் = (50/100) * R = R/2
ஆரம்பத்தில் வட்டத்தின் பரப்பளவு =$ \pi R^2$
புதிய பரப்பளவு = $ \pi (R/2)^2$ = $(\pi R^2)$/ 4
பரப்பளவில் ஏற்பட்டுள்ள குறைவு = $[ (3 \pi R^2 / 4) * (1 / \pi R^2) * 100 ]% $
[3 * 25 ]% = 75%
பரப்பளவில் ஏற்பட்டுள்ள குறைவின் சதவீதம் = 75%
49764.இரு முக்கோணங்களின் பரப்பளவின் விகிதம் 4 : 3 மற்றும் அவற்றின் உயரங்களின் விகிதம் 3 : 4 ஆகும். ஆகவே, இரு முக்கோணங்களின் அடிப்பக்கங்களின் விகிதத்தினைக் காண்க.
9 : 3
4 : 12
16 : 9
16 : 4
Explanation:
இரு முக்கோணங்களின் அடிப்பக்கம் முறையே x, y மற்றும் அவற்றின் உயரங்கள் 3h, 4h ஆகும்.
[ (1/2) * x * 3h ] / [(1/2) * y * 4h ] = 4/3
[ (3x) / (4y) ] = 4/3
x/y = [(4/3) * (4/3)] = 16/9
தேவையான விகிதம் = 16 : 9
ஆகவே, இரு முக்கோணங்களின் அடிப்பக்கங்களின் விகிதம் = 16 : 9
49765.ஒரு இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தினைப் போல இருமடங்காகும். இணைகரத்தின் பரப்பளவு 72 ச.செ.மீ எனில், அதன் உயரத்தினைக் காண்க.
5 செ.மீ
6 செ.மீ
3 செ.மீ
4 செ.மீ
Explanation:
இணைகரத்தின் உயரத்தினை x செ.மீ எனக் கொள்க.
பிறகு,
அடிப்பக்கம் = 2x செ.மீ
ஆகையால், 2x * x = 72 ச.செ.மீ
$2x^2$ = 72
$x^2$ = 72/2
$x^2$ = 36
x = 6
இணைகரத்தின் உயரம் = 6 செ.மீ
49766.ஒரு வட்ட வடிவிலான பூங்காவின் பரப்பு 13.86 ஹெக்டேர் ஆகும். பூங்காவினைச் சுற்றி வேலி அமைக்க மீட்டருக்கு ரூ. 4.40 ஆகும் எனில், மொத்தம் எவ்வளவு தொகை தேவைப்படும்?
ரூ. 4562
ரூ. 3476
ரூ. 5808
ரூ. 1394
Explanation:
பூங்காவின் பரப்பளவு = (13.86 * 10000) $மீ^2$ = 138600 $மீ^2$
$ \pi R^2$ = 138600
$R^2$= [138600 * (7/22) ]
$R^2$ = 44100
R = 210
ஆரம் R = 210 மீ
பூங்காவின் சுற்றளவு =$ 2 \pi R$
= [2* (22/7) * 210] மீ
= [44 * 30 ] மீ
பூங்காவின் சுற்றளவு = 1320 மீ
வட்ட வடிவிலான பூங்காவினைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவு
= ரூ. (1320 * 4.40)
= ரூ. 5808
Share with Friends