Easy Tutorial
For Competitive Exams

Aptitude Tamil தனிவட்டி (Simple Interest) - 2

47255.வினோத் ரூ.12,000க்கு இசைக்கருவிகளை வாங்கினார். விற்பனை வரி விகிதம் 8% எனில், அவர் செலுத்த வேண்டிய விற்பனை வரி, மொத்த தொகை ஆகியவற்றைக் காண்க.
ரூ.960, ரூ.12,960
ரூ.1000, ரூ.13,960
ரூ.800, ரூ.12,800
ரூ.850, ரூ.12,850
Explanation:
இசைக்கருவிகளின் மதிப்பு = ரூ.12,000
விற்பனை வரி விகிதம் = 8%
விற்பனை வரித்தொகை = (8/100) * 12000 =960
விற்பனை வரித்தொகை= ரூ.960
வினோத் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை = 12,000 + 960 =12960
வினோத் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை = ரூ.12,960
47256.ரூ.5000 என்ற தொகைக்கு தனிவட்டி வீதத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1750 கிடைக்கிறது. இருப்பினும் வட்டிவீதத்தில் 2% அதிகரிப்பின் கிடைக்கும் அதிகரித்த வட்டித்தொகையினைக் காண்க.
ரூ.1750
ரூ.2450
ரூ.350
ரூ. 700
Explanation:
தனிவட்டி (S.I) =[(P * N * R/ 100)
1750 = [(5000 * 7 * R) / 100]
1750 = 350 * R
R= 1750 / 350
R= 5%
வட்டிவீதம் 2% அதிகரிப்பின் தனிவட்டித் தொகையில் கிடைக்கும் அதிகரிப்புத்தொகை தனிவட்டி தொகை
=[(5000 *7* 7) / 100 ]
= 49 * 50 = ரூ. 2450
வட்டிவீதம் 2% அதிகரிப்பின் தனிவட்டித் தொகையில் கிடைக்கும் அதிகரிப்புத்தொகை
= ரூ. (2450 - 1750) = ரூ. 700
47257.ரூ.10000 க்கு 5 சதவீத தனி வட்டி வீதம் 4 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டி எவ்வளவு?
ரூ.1500
ரூ.2000
ரூ.2250
ரூ.2500
Explanation:
தனிவட்டி I = (PNR / 100)
I = தனிவட்டி
P = அசல் = ரூ.10000
N = காலம் = 4 ஆண்டுகள்
R = வட்டிவீதம் = 5%
I = (10000 * 4 * 5) / 100
I = ரூ.2000
47258.ரூ. 900 திற்கு தனிவட்டி 4.5% என்ற வீதத்தில் கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளின் வட்டித்தொகை ரூ. 81 யை அடையும்?
2 ஆண்டுகள்
5 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
7 ஆண்டுகள்
Explanation:
அசல் (P) = ரூ. 900
தனிவட்டி (I) = ரூ. 81
காலம் (N) = ?
வட்டிவீதம் (R) = 4.5%
I = PNR/100
N = (100 * I) / (PR)
= (100 * 81) / (900 * 4.5)
= 81 / (4.5 * 9).
= 81 / 40.5
காலம் (N) = 2 ஆண்டுகள்
47259.ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 9800 எனவும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 12005 எனவும் கிடைத்தால் ஒரு ஆண்டிற்கான வட்டிவீதத்தினைக் காண்க.
18%
15%
12%
22%
Explanation:
3 ஆண்டுகளுக்கு தனிவட்டி = ரூ. (12005 - 9800) = ரூ. 2205
5 ஆண்டுகளுக்கு தனிவட்டி = ரூ. [(2205/3) * 5] = ரூ. 3675
ஆகவே, அசல் = ரூ. [9800 - 3675] = ரூ. 6125 ஆகையால்,
வட்டிவீதம் = [ (100 * 3675) / (6125* 5) ]%
வட்டிவீதம் = 12%
47260.ஆண்டொன்றிற்கு 18% தனி வட்டி தரும் குழுமத்தில் ரஹீம் ரூ.10000 - ஐ முதலீடு செய்தார் எனில், 5 வருடங்களுக்குப் பிறகு அவர் பெறும் வட்டியினைக் காண்க.
ரூ. 9,500
ரூ. 8,000
ரூ. 9,000
ரூ. 8,500
Explanation:
அசல் = ரூ. 10000
வட்டி = 18%
காலம் = 5 வருடங்கள்
I = Pnr/100
= (10000 * 5 * 18)/100
= 1800 * 5
= 9,000
5 வருடங்களுக்குப் பிறகு அவர் பெறும் வட்டி = ரூ. 9,000
47271.ஒரு குறிப்பிட்ட தொகையானது 2 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1008 என்ற தொகையினையும், 3*(1/2) ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 1164 என்ற தொகையினையும் தருகிறது எனில், அசலினையும், வட்டிவீதத்தினையும் காண்க.
அசல் = ரூ. 800, வட்டி = 13%
அசல் = ரூ. 550, வட்டி = 11%
அசல் = ரூ. 751, வட்டி = 19%
அசல் = ரூ. 850, வட்டி = 20%
Explanation:
1*(1/2) ஆண்டுக்கு தனிவட்டி = ரூ. (1164 - 1008) = ரூ. 156
2 ஆண்டுகளுக்கு தனிவட்டி = ரூ. [156 * (2/3) * 2] = [ 52 * 4] = ரூ. 208
அசல் = ரூ. (1008 - 208) = ரூ. 800
வட்டிவீதம் = [ (100 * 208) (800 * 2) ]%
வட்டிவீதம் = 13%
47272.ரூ.800 தனிவட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.956 தொகையானது பெறப்படுகிறது. ஆனால் வட்டியானது 4% அதிகரிக்குமேயானால் ரூ.800 க்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் வட்டித்தொகையினைக் காண்க.
ரூ.150
ரூ.252
ரூ.346
ரூ.225
Explanation:
காலம் n = 3 ஆண்டுகள்
அசல் p = ரூ.800
தனிவட்டி I = ரூ. (956 - 800) = ரூ.156
I = pnr/100
156 = (800 * 3 * r) / 100
வட்டிவீதம் r= [ (100 * 156) / (800 * 3) ]% = 6.5%
புதிய வட்டிவீதம் = [6 .5 + 4]% = 10.5%
புதிய தனிவட்டிதொகை = ரூ. [800 * 3 * 10.5/100] = ரூ.252
47273.ஒரு கணினியின் விலை ரூ. 20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 36 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?
ரூ. 222
ரூ. 450
ரூ. 635
ரூ. 722 (தோராயமாக)
Explanation:
கணினியின் விலை = ரூ. 20,000,
வட்டி ஆண்டொன்றுக்கு = 10%
காலம் = 36 மாதங்கள் (3 ஆண்டுகள்).
மொத்த வட்டி = 20000 * (10 /100) * 3 = ரூ. 6000
செலுத்த வேண்டுய மொத்த தொகை = 20000 + 6000
= ரூ. 26,000
மாதத் தவணை = மொத்த தொகை / மொத்த மாதங்கள்
= 26000 / 36
= ரூ. 722.22
= ரூ. 722 (தோராயமாக)
47274.ரூ.100 என்ற தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ரூ.252 ஆனது 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்கு கிடைக்கிறது எனில், ஒரு வருடத்திற்கு தனிவட்டியினைக் கணக்கிடுக.
6 * (3/4)%
4 * (4/3)%
8 * (1/2)%
2 * (3/4)%
Explanation:
காலம் = 2 வருடங்கள் 4 மாதங்கள் = 2* (1/3) வருடங்கள் =7/3 வருடங்கள்
வட்டிவீதம் =[ (100 * 252 * 3) 1(1600 * 7) ]%
வட்டிவீதம் = 6 * (3/4)%
Share with Friends