Easy Tutorial
For Competitive Exams

Aptitude Tamil பரப்பளவு & சுற்றளவு (Area & Perimeter) Test - 2

49751.ஓர் இணைகரத்தின் பரப்பளவு 480 செ.மீ அடிப்பக்கம் 24 செ.மீ கொண்ட இணைகரத்தின் குத்துயரம் என்ன?
47 செ.மீ
35 செ.மீ
15 செ.மீ
20 செ.மீ
Explanation:
பரப்பளவு = 480 $செ.மீ^2$
அடிப்பக்கம் b = 24 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = 480
b * h= 480
24 * h = 480
h = 480 / 24
= 20 செ.மீ
49752.சாய் சதுரம் ஒன்றின் பரப்பளவு 150 ச.செ.மீ. அதன் ஒரு மூலைவிட்டம் 20 செ.மீ. மற்றொரு மூலைவிட்டத்தின் அளவைக் காண்க.
15 செ.மீ.
21 செ.மீ.
24 செ.மீ.
27 செ.மீ.
Explanation:
பரப்பளவு = 150 ச.செ.மீ
ஒரு மூலைவிட்டம் d1 = 20 செ.மீ
சாய் சதுரத்தின் பரப்பளவு = 150
(d1 * d2) / 2 = 150
(20 * d2) / 2 = 150
10 * d2 = 150
d2 = 150/10
d2 = 15 செ.மீ.
மற்றொரு மூலைவிட்டத்தின் அளவு = 15 செ.மீ.
49753.ஓர் இணைகரத்தின் பரப்பளவு 56 செ.மீ. அதன் குத்துயரம் 7 செ.மீ எனில் இணைகரத்தின் அடிப்பக்கம் என்ன?
6 செ.மீ
4 செ.மீ
8 செ.மீ
2 செ.மீ
Explanation:
பரப்பளவு = 56 செ.மீ,
குத்துயரம் h = 7 செ.மீ
இணைகரத்தின் பரப்பளவு = 56 b * h = 56
b * 7= 56
b = 56 /7 = 8 செ.மீ.
இணைகரத்தின் அடிப்பக்கம் = 8 செ.மீ.
49754.ஒரு கோளத்தின் புறப்பரப்பு 98.65 ச.செ.மீ எனில் ஆரத்தைக் காண்க.
1.8cm
6.2cm
3.4cm
2.8cm
Explanation:
கோளத்தின் புறப்பரப்பு = 98.56 ச.செ.மீ
$4 \pi r^2$ = 98.56
4 * 22/7 * $r^2$ = 98.56
$r^2$ = 98.56 x (1/4) x 7/22
$r^2$ = 1.12 x 7
$r^2$ =7.84
r = $\sqrt{7.84}$
r = 2.8cm
49755.ஓர் உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவு 1848 $m^3$. அதன் விட்டம் 14 m எனில், உருளை வடிவ தொட்டியின் ஆழத்தினைக் காண்க.
12 m
10 m
8 m
14 m
Explanation:
கன அளவு = 1848 $m^3$
விட்டம் = 14m எனில்
ஆரம் =14/2 = 7m
தொட்டியின் ஆழத்தினை h எனக் கொள்வோம். 1848 = $ \pi * r^2 * h $
h = ((1848*7) / (22*7*7))
h = (1848 / (22*7)
தொட்டியின் ஆழம் (h) = 12 m
49756.ஒரு கனசதுரத்தின் ஒவ்வொரு முனையும் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேற்பரப்பின் பரப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பினை சதவீதத்தில் காண்க.
525%
425%
225%
325%
Explanation:
முனையின் நீளம் = a
மேற்பரப்பின் பரப்பு = 6$a^2$
புதிய முனையின் நீளம் = a ல் 150%= (150/100)*a = (3/2) * a
புதிய மேற்பரப்பின் பரப்பு = $6 * ((3/2) * a)^2$ = (6 * 9 * $a^2$) / 4) = 54 $a^2$ / 4
மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு சதவீதம் = (27$a^2$ / 2) * (1 / 6$a^2$) * 100
= (27/2) * (1/6) * 100
= 225%
49757.ஒரு செவ்வகத்தின் பரப்பு 16 சது மீட்டர். அதன் நீளம், அகலத்தைவிட நான்கு மடங்கு அதிகம் எனில் செவ்வகத்தின் சுற்றளவு எவ்வளவு?
12 மீ
35 மீ
15 மீ
20 மீ
Explanation:
செவ்வகத்தின் அகலம் = X என்க
(நீளம் அகலத்தைப்போல நான்கு மடங்கு அதிகம், எனில்)
செவ்வகத்தின் நீளம் = 4x
செவ்வகத்தின் பரப்பு = 16 சதுர மீ
l * b = 16
4x * x = 16
$4x^2$ = 16
$x^2$ = 16/4
$x^2$ = 4
x = 2
எனவே,
l = 2
b = 4 * l = 4*2 = 8
செவ்வகத்தின் சுற்றளவு = 2(I + b)
= 2 (8 + 2)
செவ்வகத்தின் சுற்றளவு = 20 மீ
49758.ஒரு செவ்வகத்தின் நீளம் அதன் அகலத்தினைப்போல இருமடங்கு ஆகும். நீளமானது 5 செ.மீ குறைக்கப்பட்டும், அகலமானது 5 செ,மீ அதிகரிக்கப்பட்டும் இருந்தால் செவ்வகத்தின் நீளமானது 75 ச.செ.மீ அதிகரிக்கிறது. ஆகவே செவ்வகத்தின் நீளத்தினைக் காண்க.
10 செ.மீ
20 செ.மீ
15 செ.மீ
25 செ.மீ
Explanation:
அகலம் =X என்க.
பிறகு, நீளம் = 2x
(2x - 5) * (x + 5) - 2x * x = 75
5x - 25 = 75
X = 20
ஆகவே செவ்வகத்தின் நீளம் = 20 செ.மீ
49759.ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டத்தின் நீளம் 17 செ.மீ ஆகும். அதன் சுற்றளவு 46 செ.மீ எனில் செவ்வகத்தின் பரப்பளவினைக் காண்க.
160 செ.மீ
200 செ.மீ
120 செ.மீ
100 செ.மீ
Explanation:
நீளம் = x,
அகலம் = y என்க
2 (x + y) = 46
(x + y) = 23
மற்றும்
$(x^2 + y^2)$ = $(17)^2$ = 289
$(x + y)^2$ = $23^2$
$x^2 + y^2$+ 2xy = 529
289 + 2xy = 529
2xy = 529 - 289
2xy = 240
xy = 120
செவ்வகத்தின் பரப்பளவு = 120 செ.மீ
49760.ஒரு புல்வெளியானது செவ்வக வடிவத்தில் 2 : 3 என்ற வீதத்தில் பக்கங்களைக் கொண்டுள்ளது. புல்வெளியின் பரப்பளவு 1/6 ஹெக்டேர்ஸ் எனில், செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தினைக் காண்க.
விடை : நீளம் = 33 * (1/3) மீ, அகலம் = 50 மீ
நீளம் = 33 * (1/3) மீ, அகலம் = 50 மீ
நீளம் = 36 * (1/2) மீ, அகலம் = 45 மீ
நீளம் = 34* (1/4) மீ, அகலம் = 35 மீ
நீளம் = 32 * (2/3) மீ, அகலம் = 40 மீ
Explanation:
செவ்வகத்தின் நீளம் = 2x
செவ்வகத்தின் அகலம் = 3x
பரப்பளவு = (1/6) * (10000) $மீ^2$ = (5000/3) $மீ^2$
2x * 3x = (5000/3)
$6x^2$ = (5000/3)
$x^2$ = (5000/3) * 1/6
$x^2$ = (2500/9)
X = (50/3)
நீளம் 2x = 100/3 மீ = 33 * (1/3) மீ
அகலம் 3x = 150/3 மீ = 50 மீ.
Share with Friends