யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறப்புப் பகுதிகள்
யூனியன் பிரதேசம்
யூனியன் பிரதேசங்களின் தோற்றம்:
- 1874ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சில பகுதிகள் பட்டியலிடப்பட்;ட
மாவட்டங்கள் (Scheduled districts) என அழைக்கப்பட்டன. பின்பு அவை
முதன்மை ஆணையர் மாகாணங்கள் (Chief Commissioners Provines) என
அழைக்கப்பட்டன.
- சுதந்திரத்திற்குப் பின்பு அவை பகுதி C மற்றும் D மாநிலங்களில்
வகைப்படுத்தப்பட்டன.
- 1956ல் 7வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் (1956) மற்றும் மாநில
மறுசீரமைப்புச் சட்டம்(1956)ன் படி அவை யூனியன் பிரதேசங்களாக
மாற்றப்பட்டன.
- காலப்போக்கில் சில யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக
உயர்த்தப்பட்டன.
- இமாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், அருணாச்சல பிரதேசம்
மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் முன்பு யூனியன் பிரதேசங்களாக
இருந்தன.
- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 1956
- டெல்லி – 1956
- லட்சத்தீவுகள் – 1956
- தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி – 1961
- டாமன் மற்றும் டையூ – 1962
- புதுச்சேரி – 1962
- சண்டிகர் – 1966
- 1922ல் டெல்லி தேசிய தலைநகர யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
- யூனியன் பிரதேசங்கள் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டன.
- அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்கள் டெல்லி மற்றும் சண்டிகர், கலாச்சார
தனித்தன்மை – புதுச்சேரி, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ,
கேந்திர முக்கியத்துவம் – அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத் தீவுகள்.
- பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மீது சிறப்பு கவனம் – மிசோரம்,
மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம்.
- அனைத்து யூனியன் பிரதேசங்களும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட
நிர்வாகியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
- யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியானவர் குடியரசுத் தலைவரின் முகவரே
அன்றி ஆளுநரைப் போல மாநிலத்தின் தலைவர் அல்ல.
- 1963 – ல் புதுச்சேரியிலும், 1992ல் டெல்லியிலும் சட்டமன்றம்
தோற்றுவிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகள்
- அஸ்ஸாம் மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்கள் தவிர பிற
எந்த மாநிலத்திலும் வாழும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும்
பகுதிகளின் நிர்வாகமும கட்டுப்பாடும் ஐந்தாவது அட்டவணையில் உள்ளபடி
செயல்பட வேண்டும்.
- அஸ்ஸாம் மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் – வாழும்
பழங்குடியினர் வாழும் பகுதிகளின் நிர்வாகமும கட்டுப்பாடும் ஆறாவது
அட்டவணையில் உள்ளபடி செயல்பட வேண்டும்.
ஐந்தாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள சிறப்பு இயல்புகள்
- தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளை அறிவித்தல்
ஒரு பிரதேசத்தை அட்டவணைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கும் அதிகாரம்
குடியரசுத தலைவருக்குத் தான் உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் நிர்வாக அதிகாரம்
இந்தப் பிரதேசங்கள் தொடர்பாக ஆளுநருக்கு சிறப்புக் கடமைகள் உண்டு. இந்தப்
பிரதேசங்களின் ஆளுகை தொடர்பாக ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் அறிக்கை
சமர்பிக்க வேண்டும்
பழங்குடியினர் ஆலோசனைக் கவுன்சில்
- இது இருபது உறுப்பினர்கள் கொண்டு இருக்கும். அதில் ¾ உறுப்பினர்கள்
அம்மாநில சட்டசபையில் பழங்குடியினரின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.
- அப்பகுதிகளுக்கான சட்டம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும்
பகுதிகளின் நலம் மற்றும் நிர்வாகம் குறித்து அறிக்கை அளிப்பதற்காக ஒரு
குழுவை குடியரசுத் தலைவர் அமைக்கவேண்டும் என அரசியலமைப்புச் சட்டம்
கூறுகிறது.
- அவர் அக்குழுவை எப்பொழுது வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால்
அரசியல் அமைப்புச் சட்டம் செயல்படத் துவங்கிய 10ஆண்டுகளுக்குள் கட்டாயமாக
அமைக்க வேண்டும்.
- எனவே 1960ல் U.N. தேபார் தலைமையில் அமைக்கப்பட்டது. இரண்டாவது
குழு திலிப் சிங் புகாரியா தலைமையில் 2002ல் அமைக்கப்பட்டது.
ஆறாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள சிறப்பு இயல்புகள்
- அஸ்ஸாம் மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள
பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்டங்களாக்கப்படும். ஆனால் அவை
அம்மாநிலத்தின் நிர்வாக அதிகாரத்திற்கு வெளியே செயல்பட முடியாது.
- தன்னாட்சி மாவட்டங்களின் பரப்பளவைக் கூட்டவும் குறைக்கவும் அதன்
பெயரை மாற்றவும் அதன் எல்லைகனை வரையறுக்கவும் ஆளுநருக்கு அதிகாரம்
உண்டு.
- ஒரு தன்னாட்சி மாவட்டத்தில் பல்வேறு பழங்குடியினர் இருந்தால் ஆளுநர்
அதைப் பல தன்னாட்சிப் பிரதேசங்களாக பிரிக்கலாம்.
- ஒவ்வொரு தன்னாட்சி மாவட்டத்திலும் முப்பது உறுப்பினர்களை கொண்ட
ஒரு மாவட்ட கவுன்சில் இருக்கும். நான்கு உறுப்பினர்கள் ஆளுநரால்
நியமிக்கப்படுவர். ஏனைய 26 உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலமும்,
நியமிக்கப்பட்டவர்கள் ஆளுநர் விரும்பும் வகையிலும் பதவியில் இருப்பர்.
ஒவ்வொரு தன்னாட்சிப் பிரதேசமும் தனி பிரதேச கவுன்சிலை
கொண்டிருக்கும்.
- மாவட்ட மற்றும் பிரதேச கவுன்சில்கள் தங்களின் அதிகார வரம்பில் உள்ள
பகுதிகளை நிர்வகிக்கும். நிலம், காடு, மாற்றிட கால்வாய் வேளாண்மை, கிராம
நிர்வாகம், சொத்துரிமை, திருமணம் மற்றும் விவாகரத்து, சமூகவழக்கம்
போன்றவற்றி;ல சட்டம் இயற்ற அவற்றிற்கு அதிகாரம் உண்டு. ஆனால்
அச்சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலை பெறவேண்டும்.
மாநிலங்கள் |
பழங்குடியின பகுதிகள் |
அஸ்ஸாம் |
வடக்கு சச்சார் குன்று மாவட்டம், கர்பி அங்கலாங் மாவட்டம் |
|
போடோலேண்டு நிலப்பகுதி மாவட்டம் |
மேகாலயா |
காசி குன்றுகள் மாவட்டம்,ஜெயன்தியா குன்றுகள் மாவட்டம், |
|
காரோ குன்றுகள் மாவட்டம் |
திரிபுரா |
திரிபுரா பழங்குடி பகுதி மாவட்டம் |
மிசோரம் |
சக்மா மாவட்டம், மாரா மாவட்டம், லாய் மாவட்டம் |
யூனியன் பிரதேசங்களின் நிர்வாக அமைப்பு
யூனியன் பிரதேசங்கள் |
நிர்வாகம் |
சட்டமன்றம் |
நீதிமன்றம் |
அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
துணை நிலை ஆளுநர் |
- |
கல்கத்தா உயர்நீதி மன்றத்திற்குக் கீழ் |
சண்டிகர் |
நிர்வாகி |
- |
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்திற்குக்
கீழ் |
தாதர் மற்றும் நாகர் ஹவேலி |
நிர்வாகி |
- |
மும்பை உயர்நீதி மன்றத்திற்குக் கீழ் |
டாமன் மற்றும் டையூ |
நிர்வாகி |
- |
மும்பை உயர்நீதி மன்றத்திற்குக் கீழ் |
லட்சத்தீவு |
நிர்வாகி |
- |
கேரளா உயர்நீதி மன்றத்திற்குக் கீழ் |
டில்லி |
·. துணை நிலை ஆளுநர் |
|
|
|
. முதலமைச்சர் |
சட்டமன்றம் |
தனி உயர்நீதி மன்றம் |
|
. அமைச்சரவை குழு |
|
|
பாண்டிச்சேரி |
· துணை நிலை ஆளுநர் |
|
|
|
· முதலமைச்சர் |
சட்டமன்றம் |
மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் கீழ் |
|
· அமைச்சரவை குழு |
|
|