இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
✓ சட்டமன்றமானது பிரதிநிதித்துவ மக்களாட்சியின் செயல்பாட்டிற்கு ஒரு மிக முக்கியமான நிறுவனமாகிறது. சட்டமன்றத்தின் அடிப்படை நோக்கமானது, அதன் பிரதிநிதிகளை பதிலளிக்க கடமைப்பட்டவர்களாகவும், நாட்டிலுள்ள மக்களின் நலன்களுக்கு பொறுப்புடையவர்களாகச் செய்வதே நோக்கம் ஆகும். நாட்டின் அனைத்து தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அந்நாட்டின் சட்டங்களை இயற்றுதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றை செய்யும் ஓர் உயர்ந்த சட்டம் இயற்றும் அமைப்பே, சட்டமன்றம் என பொதுவாக குறிப்பிடப்படுகின்றது.
✓ இந்தியா முழுமைக்குமான சட்டங்களை இயற்றும் சட்டமன்றம் நாடாளுமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று குறிப்பிடப்படுகின்றது. மாநிலங்களிலும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சட்டமன்றங்கள் சட்டமன்ற பேரவை என்று அழைக்கப்படுகின்றன.
Group-IV(2011 Qns)
* நாடாளுமன்றத்தின் ஈரவை முறை:
நாடாளுமன்றம் ஈரவைகளை கொண்டுள்ளது. அவை மக்களவை மற்றும் மாநிலங்களவை.
✓ இது பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை மற்றும் அமெரிக்காவின் ஈரவை முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதேபோல் சில மாநிலங்களில் சட்டமன்ற பேரவை (சட்டப்பேரவை) மற்றும் சட்டச்சபை என ஈரவை முறையே உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் சட்டமேலவை இன்றி ஒற்றை அவையாக சட்ட மன்ற பேரவையே உள்ளது.
✓ இந்தியாவில் நாடாளுமன்றம் அதன் சட்டம் இயற்றும் பணி மற்றும் அதனை செயல்படுத்துகின்ற பொறுப்பினை 29 மாநிலங்களுடனும், ஏழு ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்படுகின்றன. (தில்லி மற்றும் புதுச்சேரி தவிர)
* ஒன்றியச் சட்டமன்றம்:நாடாளுமன்றம்
✓ நாடாளுமன்றம், ஒன்றியச் சட்டமன்றம் அல்லது தேசிய சட்டமன்றம் என்று அறியப்படுகிறது. அதுவே முடிவுகளை எடுக்கக்கூடிய உச்ச அமைப்பு மற்றும் மக்களாட்சியின் அடையாளம். நாட்டினதும் அதன் மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் மீதான விவாதத்திற்கும், அரசியல் அமைப்பில் சட்டங்களை இயற்றுவதற்கும், திருத்துவதற்கும், பதிலளிக்க கடமைபட்ட மிகவும் சக்தி வாய்ந்த தளமாக நாடாளுமன்றமே உள்ளது.
சட்ட முன் வரைவுகளுக்கான ஒப்புதல்
அளித்தல், பல்வேறு தீர்மானங்கள் மற்றும்
நிகழ்வுகள் குறித்து விவாதம் நடத்துதல்,
போன்றவற்றிக்காக திட்டமிடப்பட்ட ஒரு
கால வரையறையில் நாடாளுமன்றம்
கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று
அழைக்கிறோம்.
ஒரு வருடத்தில்
நாடாளுமன்றம் மூன்று கூட்டத்
தொடர்களை நடத்துகிறது:
1. நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர்
(பிப்ரவரி-மே)
2. மழைக்காலக் கூட்டத்தொடர்
(ஜூலை-ஆகஸ்ட்)
3. குளிர்காலக் கூட்டத்தொடர்
(நவம்பர்-டிசம்பர்)
* இரு முக்கிய அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
சட்ட
அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம்
சட்ட அதிகாரங்கள் சட்டம்
இயற்றுவதற்கானவை. நிதி அதிகாரங்கள்
நிதிநிலை அறிக்கை என்று அறியப்படுகிற
நிதி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை
கணக்குகளை தயார் செய்வதற்கானது. மேலும்
இந்திய குடியரசுத்தலைவர் மற்றும்
குடியரசுத் துணைத்தலைவர் ஆகியோரை
தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல்
நடத்துவதற்கான தேர்வுச் செய்யும் பணிகளும்
நாடாளுமன்றத்துக்கு இருக்கின்றன.
உறுப்பினர்களின் குறைந்தபட்ச
எண்ணிக்கை:
மக்களவை / மாநிலங்களவை
கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த
உறுப்பினர்களின் எண்ணிக்கையில்
குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு
எண்ணிக்கை இருக்க வேண்டும்.
* சபாநாயகரின் பங்கு மற்றும் பொறுப்புகள்:
மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர் ஆவார். அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். சபையை வழிநடத்துவது, கலந்துரையாடல் மற்றும் விவாதங்களை நடத்த உதவுவது, சபை உறுப்பினர்களின் நடத்தை குறித்த கேள்விகளுக்கு பதில்களை பெறுவது மற்றும் அவர்களின் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை சபாநாயகரின் கடமை ஆகும். நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத் தலைவர் மக்களவை சபாநாயகர் ஆவார்.
* மாநிலங்களவை:
மாநிலங்களவை என்று
அழைக்கப்படுவது, அனைத்து மாநிலங்கள்
மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட
பகுதிகளிலிருந்து வரும் 238
உறுப்பினர்களையும் மற்றும்
குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட 12
நியமன உறுப்பினர்களையும் சேர்த்து
மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது.
மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய
நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி
மன்றம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவிலுள்ள ஆட்சிமன்றக்
குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள்
மற்றும் நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைப்பு
மாநிலங்களவை ஆகும். இது 1952 ஆம் ஆண்டு
ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட
மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Group-IV(2012 Qns)
I.Dr. A. P. J. அப்துல் கலாம்
II. Dr. சங்கர்தயால் சர்மா
III. K. R. நாராயணன்
IV. P. வெங்கடராமன்
இவற்றுள் :
1. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி.
இவற்றுள் :
1. திரு. சரண்சிங்
II. திரு. வி. பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :
அவசியமான தகுதி அல்லாதது எது ?
யார் மாநிலங்களவை
உறுப்பினராகலாம்?
*இந்திய நாட்டின் குடிமகனாக
இருக்கவேண்டும்.
* 30 வயதுக்கு உட்பட்டவராக
இருக்கக்கூடாது.
* மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
1951-இன் கீழ் மாநிலங்களவைவுக்கு
தேர்ந்தெடுக்கப்பட விரும்பும் ஒரு நபர்
அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற
தொகுதியில் ஒரு வாக்காளராக
இருக்கவேண்டும்.
Group-IV(2013 Qns)
I. ஆர். வெங்கட்ராமன்
II. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
III. டாக்டர் கே.ஆர். நாராயணன்
IV. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அளிக்கிறது?
இதன் மூலம் மாநிலங்களவைக்கு போட்டியிடும் ஒருவர் எந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ, அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விலக்கிக்கொள்ளப்பட்டது.
* அவன்/அவள் இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் ஒரு நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வெளிப்படையான ஓட்டெடுப்பின் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
Group-IV(2014 Qns)
I. திரு. ஜவஹர்லால் நேரு
II. திருமதி இந்திரா காந்தி
III. திரு. மொராஜ்ஜி தேசாய்
IV. திரு. லால்பகதூர் சாஸ்திரி
* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்
- நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை மற்றும் நாடாளுமன்றத்தில் அல்லது
Group-IV(2016 Qns)
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers