மாநில நிர்வாகம்
ஆளுநர்- நமது இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 153ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.
- மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்ற நடைமுறைக்கிணங்க ஆளுநர் மாநிலத்தின் பெயரளவு தலைவராவார்.
- 1956-ஆம் ஆண்டின் 7-ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒரே ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவி வகிக்கலாம் என்று வழி வகை செய்தது.
- மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. மாநிலத்தின் எல்லா செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயராலேயே செயல்படுத்தப் படுகின்றன.
- இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத் தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ளது.
Group-IV(2011 Qns)
57208.பொருத்துக :
(a) ஆளுநர் 1.விதி 171
(b) முதலமைச்சர் 2.விதி 170
(c) மேலவை 3.விதி 153
(d) சட்டசபை 4.விதி 163
(a) ஆளுநர் 1.விதி 171
(b) முதலமைச்சர் 2.விதி 170
(c) மேலவை 3.விதி 153
(d) சட்டசபை 4.விதி 163
3 2 4 1
3 4 1 2
1 4 3 2
2 3 1 4
தகுதிகள்
அரசியலமைப்புப் படி 2 வித தகுதிகள் ஆளுநர் நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் மரபுப்படி 2 தகுதிகள் பின்பறறுபடுகின்றன. பதவி வகிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது. ஆளுநரை நியமிக்கும் போது குடியரசுத்தலைவர் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சரை கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆளுநர் பதவியேற்றதிலிருந்து 5 ஆண்டுக்காலம் பணியாற்றலாம். எனினும் 5 ஆண்டு பணிக்காலம் என்பது குடியரசுத் தலைவர் விரும்பும் வரை ஆகும். ஆளுநர் தான் விரும்பியபோது தனது பதவியை விட்டு விலகலாம். பதவி விலகல் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் சமர்பிக்க வேண்டும்.
1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2. 35-வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
Group-IV(2013 Qns)
10150.மாநிலங்களின் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி
விதி 354
விதி 355
விதி 356
விதி 357
ஆளுநரின் அதிகாரம் மற்றும் பணிகள்
1.நிர்வாக அதிகாரம்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆளுநர் ஒருவர் இருத்தல் வேண்டும். ஒரு மாநிலத்தின் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் ஆளுநரின் பெயரில்தான் எடுக்கப்பட வேண்டும். மாநில முதலமைச்சர்களையும் இதர அமைச்சர்களையும் ஆளுநர் நியமிக்கிறார். ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்கான அமைச்சரை ஆளுநரே நியமிக்கிறார். மாநில அரசின் தலைமை வழக்குரைஞரையும், மாநிலதேர்தல் ஆணையரையும் நியமிக்கிறார். மேலும் அவர்களது பதவிக்காலம், ஊதியம், படி ஆகியவற்றையும் ஆளுநர் தீர்மானிக்கிறார். மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கிறார். இவர் மாநில நிர்வாக சம்பந்தமான தகவல்களையும், மசோதாக்களையும் முதலமைச்சர் வாயிலாக பெற்றுக்கொள்கிறார். மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை செயல்படுத்த குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைப்பர். மாநில பல்கலைக்கழகங்களின் தலைவராக ஆளுநர் உள்ளார். மேலும் பல்கரைக்கழகத் துணைத்தலைவர்களையும் ஆளுநர் நியமிக்கிறார்.
2.ஆளுநரின் சட்டமியற்றல் சார்ந்த அதிகாரம்
1.நிர்வாக அதிகாரம்
2.ஆளுநரின் சட்டமியற்றல் சார்ந்த அதிகாரம்
Group-IV(2014 Qns)
3.ஆளுநரின் நிதிநிலை உறவுகள்
Group-IV(2016 Qns)
9440.Which State Governor was appointed as Tamilnadu Governor additional-charge in September, 2016?
Kerala
Karnataka
Maharashtra
Madhya Pradesh
ஆளுநரின் தன் விருப்ப அதிகாரங்கள் (Discretionary Powers)
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக எந்த ஒரு மசோதாவையும் ஆளுநர் அனுப்பி வைக்கலாம். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த ஆளுநர் பரிந்துரைக்கலாம். மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்டமியற்றுதல் தொடர்பான தகவல்களை முதலமைச்சரிடமிருந்து கேட்டுப் பெறலாம். பொதுத் தேர்தலுக்குப் பின்பு சட்டமன்றத்தில் எந்தக் கட்சிககும் தெளிவான அல்லது தனிப் பெரும்பான்மை இல்லாத போது எந்தக் கட்சியின் தலைவரையும் அமைச்சரவை அமைக்க அழைக்கலாம். அத்தகைய அமைச்சரவை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவையில் நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்றுவும் உத்தரவிடலாம். அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அமைந்தால் ஆளுநர் அமைச்சரவையை நீக்கம் செய்யலாம், மற்றும் அமைச்சரவை தனது பெரும்பான்மையை இழந்தால் ஆளுநர் சட்டசபையைக் கலைக்கலாம். அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் பழங்குடியினர் பகுதியில் வழங்கப்பட்ட கனிம உரிமங்களுக்காக மாவட்ட கவுன்சில்களுக்கு ராயல்டி தொகை வழங்குவது. இத்தகைய தன்விருப்ப அதிகாரங்களில் ஆளுநர் தமது சொந்த அறிவையும், தன் விருப்புரிமையையும் பயன்படுத்திச் செயல்படுவார். அமைச்சரவையின் ஆலோசனைப் படி செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதர அதிகாரங்கள்
மாநிலப் பொதுப்பணி ஆணையத்தின் ஆண்டு அறிக்கையைப் பெறுதல் மற்றும் அதனை அமைச்சரவை, சட்டமன்றம் ஆகியவற்றின் விவாதத்திற்காக சமர்ப்பித்தல். மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகளால், மேற்கொள்ளப்பட்ட வரவு மற்றும் செலவினம் தொடர்பான இந்தியத் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையைப் பெறுதல்.
சிறப்பியல்புடைய பொறுப்புகள் (Special responsibilities)
குடியரசுத்தலைவரின் ஆணைப்படி சில விசேஷமான பொறுப்புகளையும் ஆளுநர் நிறைவேற்றுகிறார். இத்தகையவற்றில் அமைச்சரவையின் ஆலோசனையை ஆளுநர் பெற்றாலும் கூட இறுதி முடிவை அவரே எடுக்கிறார். மகாராஷ்டிரா– விதர்யா மற்றும் மராத்வாடா பகுதிகளுக்கென்று தனியான மேம்பாட்டு வாரியம் அமைத்தல். குஜராத் – சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கென்று தனியான மேம்பாட்டு வாரியம் அமைத்தல். நாகலாந்து– உள்நாட்டுக் கலகங்கள் தொடரும்வரை சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பானவை. அஸ்ஸாம் – பழங்குடியினர் பகுதிகளை நிர்வகித்தல். மணிப்பூர்– மலைப்பகுதிகளை நிர்வகித்தல். சிக்கிம் – பலதரப்பட்ட மக்களின் அமைதியையும் மற்றும் சமூக, பொருளாதார மேம்பாடுகளையும் உறுதிப்படுத்துதல். அருணாச்சல பிரதேசம் – சட்டம் மற்றும் ஒழுங்கைப்பராமரித்தல். மாநில முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சரவை
1.அமைச்சரவையுடன் உள்ள தொடர்பு:
இதர அதிகாரங்கள்
சிறப்பியல்புடைய பொறுப்புகள் (Special responsibilities)
- நமது அரசியலமைப்பு சட்டத்தில் மாநில முதல் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் ஷரத்து 164-ல் மாநில ஆளுநர் அவர்களால் முதல் அமைச்சர் நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
- இந்திய அரசியலமைப்புக்கு இணங்க, மாநில செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும், உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர்.
- முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவராவார். ஆளுநர் அரசின் தலைவராவார்.
- முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுகிறார்.
1.அமைச்சரவையுடன் உள்ள தொடர்பு:
- முதலமைச்சரால் அறிவிக்கப்படும் நபர்களை ஆளுநர் அமைச்சர்களாக நியமிக்கிறார்.
- முதலமைச்சரே அனைத்து அமைச்சர்களுக்கும் தனித்தனி இலாக்காக்களை ஒதுக்குகிறார்.
- முதலமைச்சர், ஆளுநருக்கும் இதர அமைச்சர்களுக்கும் இடையே முக்கிய பாலமாக செயல்படுகிறார்.
- முக்கிய அரசு அதிகாரிகளை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஆளுநர் அவர்களை நியமிக்கிறார். (எ.கா.) 1.மாநில அரசின் வழக்குரைஞர்,
2. தமிழ்நாடு அரசு பணியாளர்கள்,
- மாநில தேர்தல் ஆணையர்.
- மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கும், ஒத்திவைப்பதற்கும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
- எந்த நேரத்திலும் அமைச்சரவையை கலைக்குமாறு ஆளுநருக்கு சிபாரிசு செய்யலாம்.
- அரசின் கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவிக்கலாம்.
- மாநில திட்ட கமிஷனின் தலைவர்.
- மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில், தேசிய வளர்ச்சி கவுன்சில் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளார்.
- மாநில அரசின் தலைமை கருத்து (செய்தி) அறிவிப்பாளராக உள்ளார்.
- மாநில அரசாங்கத்தின் தலைவராக பல்வேறு பிரிவு மக்களிடமிருந்து அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் கேட்டறிபவராக உள்ளார். மாநில அமைச்சரவை
- அரசியலமைப்பின்படி பாராளுமன்ற அரசாங்க முறையில் மத்திய அரசினை போல் மாநில அரசின் அமைச்சரவை முதமைச்சரை தலைவராக கொண்டு திகழ்கிறது.
- அரசியலமைப்பின் ஷரத்து 163 மற்றும் 164 ஆகியன அமைச்சரவை குழு பற்றியும் அதன் நியமனம், பதவிக்காலம், பொறுப்புகள், தகுதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கூறுகிறது.
சரத்து – 163
- முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் உதவியின் பேரிலேயே ஆளுநர் பணியாற்ற வேண்டும்(ஆளுநரின் தன் விருப்பு அதிகாரம் தவிர)
- ஆளுநருக்கு அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனை குறித்து எந்த நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது.
- மாநில முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். மேலும் முதலமைச்சர் பரிந்துரைக்கும் நபரையே ஆளுநர் அமைச்சர்களாக நியமனம் செய்கிறார்.
- அமைச்சரவை குழுவில் முதலமைச்சரையும் சேர்த்து அவையின் மொத்த உறுப்பினர்களில் 15சதவீதத்திதற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆனால் முதலமைச்சர் உட்பட இதர அமைச்சர்களின் எண்ணிக்கை 12-க்கு குறையாமலும் இருக்க வேண்டும். இந்த ஏற்பாடு 2003-ஆம் ஆண்டு 91-வதுஅரசியலமைப்பு திருத்தம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
- ஆளுநர் விரும்பும் வரையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கலாம்.
- அமைச்சரவைக் குழுவானது மாநில சட்டமன்றத்திற்குக் கூட்டுப் பொறுப்பு வாய்ந்ததாகும்.
- சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத நபர் அமைச்சராக பதவி ஏற்றால் 6-மாதகாலத்திற்குள் உறுப்பினராக வேண்டும்.
- மைய அரசைப்போலவே மாநிலங்களிலும் அமைச்சரவை மூன்று வகையான அமைச்சர்களைக் கொண்டுள்ளது.
சரத்து – 164
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers