கணக்கு தணிக்கை அலுவலர் (The Comptroller and Auditor-General of India)
- பாராளுமன்றமுறை ஜனநாயகத்தின் இன்றியமையாத தேவை சுதந்திரமான தணிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகும்., பாராளுமன்ற அடிப்படையைக்கொண்ட அரசாங்கத்தில் நிர்வாகம் அதனுடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் சட்டத்துறைக்குப் பொறுப்புடையதாக இருக்கிறது. இந்த நிர்வாகப் பொறுப்பை, சட்டத்துறை திறமையோடு நிறைவேற்றுவதற்கு நிர்வாகத் துறையின் நடவடிக்கைகளைச் சரிபார்க்கவும், அவை ஒவ்வொன்றைப்பற்றியும் அதனுடைய தீர்ப்புகள் பொருத்தமான முறையில் தகுதியுடையனவாக இருந்தால்தான் முடியும்.
- ஒரு சில நிர்வாக நடவடிக்கைகளை யார் வேண்டுமானலும் தணிக்கை செய்யமுடியுமென்றாலும், வேறு சிலவற்றைச் சாதாரண மனிதர்கள் தணிக்கை செய்வது கடினமாகும். நிர்வாகத்தினால் செய்யப்பட்ட நிதி வரவுசெலவுகள் சரியான முறையில் செய்யப்பட்டனவா அல்லவா என்பதை அறிய, கணக்குகளைச் சோதிப்பதும் மதிப்பிடுவதும் தொழில் நுணுக்கத் துறையைச் சேர்ந்த வேலையாகும்.
- பாராளுமன்றம் பொதுவாக, சாதாரணமானவர்களை உடையதாக இருப்பதால், அத்தகைய தணிக்கையைச் செய்வதற்குப் பொருத்தமான அமைப்பன்று. இருப்பினும், அரசாங்கத்தின் நிதிபற்றிய நடவடிக்கைகளைத் தணிக்கை செய்யவேண்டியதும் வரி செலுத்தியவர்களின் பணம் சரியானவாறு செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டியதும் பாராளுமன்றத்தின் பணியாகும். இக் காரியத்திற்குப் பாராளுமன்றம், நிபுணர் ஒருவரின் உதவியைப் பெறவேண்டியது அவசியமாகிறது. ஆகையால்தான் கணக்கு தணிக்கை அலுவலர் பதவி, பாராளுமன்றமுறை மக்களாட்சியின் இன்றியமையாத ஓர் அம்சமாகிறது. கணக்கு தணிக்கை அலுவலர் சிறப்பு ஆலோசனை தான் பாராளுமன்றம் திறமையோடு அதன் வேலையைச் செய்வதற்கு உதவுகிறது.
- அத்தகையதொரு முக்கியப் பணியைச் செய்வதால்தான் கணக்கு தணிக்கை அலுவலர் பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் இயக்கத்தில் இன்றியமையாததொரு கருவியாகக் கருதப்படுகிறார். இத்துறையில் செய்யப்படுகின்ற முக்கியமான பணிதான் அவருடைய பதவியை (office) நம்முடைய மக்களாட்சி அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றாக ஏற்படுத்துகிறது. சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை இதர மூன்று தூண்களாகும்.
- கணக்கு தணிக்கை அலுவலர் பதவியைப்பற்றிய அரசிகம்லமைப்பு ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்க புதுமை எதுவுமில்லை. அத்தகைய பதவி (இந்தியப் பொதுத் தணிக்கையாளர்) 1919ஆம் ஆண்டிலிருந்தே இந்திய அரசியலமைப்பு இயந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்துவந்திருக்கிறது.
- இப்பதவியைப் பற்றிய கருத்தே இங்கிலாந்திலிருந்து வருவதாகும். அங்கு இது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாற்றையுடையதாக இருக்கிறது.
- இந்தியாவில் தணிக்கைத்துறைத் தலைவர் முதல்தடவையாக சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றது 1919ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தினலாகும்.
- அத்தகைய அங்கீகாரம், நிர்வாகத் துறையினின்றும் முழுச் சுதந்திரமாக அவர் நடப்பதற்கு இயலாது . கவுன்சிலில் அங்கம் வகித்த இந்திய அமைச்சரினால் விதிக்கப்படும் பொதுவான அல்லது சிறப்பு உத்தரவுகளுக்குட்பட்டுத் தணிக்கைத்துறைத் தலைவர் ஒரு தணிக்கையைச் செய்யவேண்டும்.
- அரசாங்கக் கணக்குகளைப் பற்றிய அவருடைய அறிக்கைகள் அந்த அதிகாரிக்கு கவர்னர் ஜெனரல் மூலமாக அனுப்பப்படவேண்டும். 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் தணிக்கைத்துறைத் தலைவரைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய மந்திரிக்கு இருந்த அதிகாரத்தை ஒழித்து அவருடைய சுதந்திரத்தைக் கணிசமாக அதிகரித்தது. தணிக்கைத்துறைத் தலைவர் அவருடைய ஆண்டுத் தணிக்கை அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட சட்டசபைகளுக்கு இந்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள்மூலமாக அனுப்பவேண்டும்.
- பாரளாமன்ற ஜனநாயகத்தில், தணிக்கை செய்வதற்கு சுதந்திரமான அமைப்பு அவசியமென்று உணர்ந்து அரசியலமைப்பைப் படைத்தவர்கள் முழுச் சுதந்திரமுடையவராகச் செய்தனர். அதனால் அவருடைய வேலைகளை அச்சமில்லாமலும் திறமையாகவும் அவர் செய்வதற்கியலும் என்று கருதப்பட்டது.
Group-IV(2011 Qn)
57635.2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ்
கபில்சிபில்
ப. சிதம்பரம்
பிரணாப் முகர்ஜி
கணக்கு தணிக்கை அலுவலரின் சுதந்திரம்
- 148ஆம் விதியின் கீழ்த் கணக்கு தணிக்கை அலுவலர், குடியரசுத் தலைவரின் கையால் எழுதப்பட்டு, முத்திரை பொறிக்கப்பட்ட ஆணை ஒன்றினல், உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவது போல நியமிக்கப்படவேண்டும்.
- உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் எந்த அடிப்படைகள் காரணமாக எவ்வாறு பதவியிலிருந்து விலக்கப்படலாமோ, அவ்வாறே கணக்கு தணிக்கை அலுவலரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்,
- தணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட எவரும் பதவியேற்பதற்குமுன், குடியரசுத்தலைவர் முன்பாக உறுதிமொழி செய்து அதன்படி நடப்பதாக, அதற்காகவே ஏற்படுத்தப்பட்ட முறைப்படி பிரமாணம் செய்யவேண்டும்.
- அவருடைய சம்பளமும் இதர ஊழிய நிபந்தனைகளும் பாராளுமன்றத்தால் தீர்னிக்கப்படும். ஆனால், ஒருமுறை நியமிக்கப்பட்ட பிறகு வேலைக்கு வாராமல் விடுப்பெடுத்துக்கொள்ளல், பதவியிலிருந்து ஓய்வு பெறல் அல்லது ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டிய வயது ஆகியவைபற்றிய அவருடைய உரிமைகளோ அல்லது ஊதியமோ அவருக்குப் பாதகமாக மாற்றியமைக்கப்படக் கூடாது. தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் பெறுகின்ற சம்பளம் போன்றே, தணிக்கைத்துறைத் தலைவரும் பெறுகிறார்,
- பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகோ அல்லது விலகியபிறகோ, இந்திய அரசாங்கத்தின் கீழோ அல்லது ஏதாவதோர் மானில அரசாங்கத்தின் கீழோ வருவாய் உடைய பதவியொன்றை வகிக்கத் தகுதியற்றவராவார்.
- அலுவலக ஊழியர்களது ஊதியங்கள், மற்றவைகள் உட்படத் கணக்கு தணிக்கை அலுவலர் அலுவலக நிர்வாகச் செலவுகளெல்லாம் இந்தியக் பொது நிதியிலிருந்து அளிக்கப்பட வேண்டும்.
- இந்தியத் தணிக்கைக் கணக்குத் துறையில் செயலாற்றும் பணியாளர்களது பணிவிதிகளும், தணிக்கைத் துறைத் தலைவரது ஆட்சி அதிகாரங்களும், தணிக்கைத்துறைத் தலைவரைக் கலந்துகொண்ட பிறகு குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப் படவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. அத்தகைய விதிகள் அரசியலமைப்பின் ஷரத்துகளுக்கும், பாராளுமன்றத்தால் தற்காகச் செய்யப்படும் சட்டத்திற்குட்பட்டும் இருக்க வேண்டும், இந்த ஷரத்துகளை அவற்றேடு தொடர்புடைய உச்ச் நீதிமன்ற நீதிபதிகளைப்பற்றிய ஷரத்துகளோடு ஒப்பிட்டும் பார்க்கும்போது இவ் இருவகையின் நோக்கப் பரப்பு, பெரும்பாலும் ஒரேமாதிரியாக இருப்பதையும், கணக்கு தணிக்கை அலுவலர் பதவி அதன் சுதந்திரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற அடிப்படையில் ஏற்பட்டிருக்கிறதென்பதையும் அது விளக்கும். அம் முறையில் கணக்கு தணிக்கை அலுவலர், அவருடைய பொறுப்புகள் நிறைவேற்றத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்பு ஆதாரத்தையும், அதனுடைய தெளிவான ஏற்பாடுகளினால் பாதுகாப்புடையதாக இருப்பதையும் துணையாகக்கொண்டு பணியாற்ற முடியும்.
- கணக்கு தணிக்கை அலுவலர் கடமைகளும் அதிகாரங்களும் 149, 150ஆம் விதிகள் தணிக்கைத்துறைத் தலைவரது கடமைகளையும் அதிகாரங்களையும் எடுத்துக் கூறுகின்றன. 149ஆம் விதியின்படி, மத்திய அரசின் கணக்குகள், யூனியன் அல்லது மாநிலங்களால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரக் குழு அல்லது நிலையத்தின் கணக்குகள் ஆகியவற்றின் தணிக்கைக்கு, தணிக்கைத்துறைத் தலைவரது அதிகாரங்கள், கடமைகள்பற்றிய விதிகளை வரையறை செய்யப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
- மேலும், அத்தகைய அதிகாரங்களையும் கடமைகளையும் பாராளுமன்றம் ஏற்படுத்துகின்றவரையிலும் அரசியலமைப்பு இயங்க ஆரம்பிப்பதற்கு முன்பு, இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவர் என்னென்ன கடமைகளையும் அதிகாரங்களையும் செலுத்திவந்தாரோ அத்தகையனவற்றை அவர் செய்வதற்கு அது ஏற்பாடு செய்திருக்கிறது. இத் துறையில் பாராளுமன்றம் இது தொடர்பாக சட்டம் இயற்ருததால், இந்திய டொமினியன் அரசியலமைப்பின்கீழ் அவருக்கு முன்பிருந்தவர் ஆற்றிவந்த பணிகளுக்கு இணையான அதே பணிகளைத் கணக்கு தணிக்கை அலுவலர் செய்து வருகிறார், 150ஆம் விதிக்கிணங்க மத்திய அரசு மற்றும் , மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் எவ்வமைப்பிலும் முறையிலும் இருக்கவேண்டும் என்பதை குடியரசுத் தலைவரின் ஒப்புதல்படி செய்யத் கணக்கு தணிக்கை அலுவலர் அதிகாரம் பெற்றிருக்கிறார்,
- 1971 ஆம் ஆண்டு கணக்கு தணிக்கை அலுவர் சட்டத்தின் படி அவர் கீழ்க்கண்ட பணிகளை செய்கிறார். இச்சட்டம் 1976 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
- மத்திய அரசு, மானில அரசு மற்றும் சட்டசபையை கொண்டுள்ள யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் இந்தியப் பொது நிதியின் கீழ் செய்யப்படும் செலவு தொடர்பாக தணிக்கை செய்தல்
- இந்திய அவசர கால நிதி மற்றும் பொது நிதி ஆகியவற்றையும் மேலும் மானில அவசர கால நிதி மற்றும் பொது நிதியையும் அது தொடர்பான செலவுகளையும் ஆய்வு செய்தல்.
- மத்திய மற்றும் மானில அரசின் பல்வேறு துறைகளுக்கான , வியாபாரக் கணக்கு , இலாப நட்டக் கணக்கு செலவு ஆகியவற்றை தணிக்கை செயதல்
- மத்திய மானில அரசுகள் முறையாக உருவாக்கப்பட்ட வழிமுறைகளின் படி பணத்தினை செலவு செய்திருக்கிறாதா என்பதை உறுதி செய்தல்.
- வேறு ஏதேனும் கணக்குகளை தணிக்கை செய்யுமாறு குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுனர் கேட்டுக்கொண்டால் அதனை தணிக்கை செய்தல்
- தணிக்கை அறிக்கையை , குடியரசுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மானில ஆளுனரிடம் சமர்ப்பித்தல் ( விதி 151)
- கணக்கு தணிக்கை அலுவலர் முக்கியமான பணி, அப்பணி சட்டப்படி அவர் ஆற்றவேண்டிய பணிகளுள் ஒன்றாக இல்லாவிட்டாலும், பொருளாதார நிலைமையை நோக்கமாகக் கொண்டு கணக்குகளைச் சோதனை செய்வதும், எங்கு அதிக மாகவும், அவசியமில்லாமல் வீணடிக்கப்பட்டும் இருக்கிறதோ அத்தகைய இனங்களை அரசினர் கணக்கை ஆராயும் பொதுக்கணக்கு குழுவின் (Public Accounts Committee) கவனத்திற்குக் கொண்டுவருவதுமாகும்.
- நிதி ஒதுக்கீடுபற்றிய் கணக்குகளையும், அவைகளைப்பற்றிய கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கைகளையும், அவைபோன்ற பாராளுமன்றத்திடம் வைக்கப்பட்ட இதர கணக்குகளையும், பொது கணக்கு குழு சரியென்று அதற்குத் தோன்றுமாறு சோதனை செய்யவேண்டியது அதன் கடமையாகும். அத்தகைய சோதனையின் நோக்கம், நிதித்துறையில் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அது பாராளுமன்றத்திற்குப் பொறுப்புடையதாக இருப்பதை உறுதிப் படுத்துவதற்காகும்.
- அதனுடைய தேர்வாராய்வுகளை மேற்கொள்வதற்கு அக்குழு, அரசாங்கக் கணக்குகளின் சிக்கல்களை எல்லாம் ஆராய்கின்ற தணிக்கைத்துறைத் தலைவரின் ஆலோசனையை பெறுகிறது. அக் குழு, அதன் முன்தோன்றி சாட்சியளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் துறையைச் சேர்ந்த சாட்சிகளை, அவர்கள் எத்துறையைச் சேர்ந்தவர்களோ அத் துறையைப்பற்றிய கணக்கு தணிக்கை அலுவலரின் ஆண்டறிக்கைகளில் காணப்படும் குற்றச்சாட்டுகளுக்கான அவர்களுடைய சாட்சியங்களை ஆய்கிறது. பொதுக் கணக்கு குழுவின் வெற்றி அல்லது தோல்வி முக்கியமாகத் கணக்கு தணிக்கை அலுவலரின் ஆண்டறிக்கைகளின் தரத்தைப் பொறுத்ததாகும். அவருடைய அறிக்கைகள், உதவி மான்யங்கள் வழங்கப் படாமல் பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மீறப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கு உதவுவதோடு, அவ்வொதுக்கீடு அடிப்படையிலான செலவு ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குட்பட்டிருக்குமாறு செய்யவும் உதவுகிறது. அதோடு மட்டுமல்லாது அவர் பாராளுமன்றத்தின் சார்பாக அரசாங்கச் செலவுத் திட்டத்தின் சிறப்பு, உண்மைத் தன்மை, சிக்கணம் ஆகியவற்றையும் தனக்குத்தானே திருப்தி செய்துகொள்ள வேண்டும். வரி கொடுப்போரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படும் கணக்கு தணிக்கை அலுவலரின் சேவையின் மதிப்பு அளவிடற்கரியதாகும்.
- நாட்டு நிதிக்குப் பாதுகாவல் தணிக்கை. பாராளுமன்றத்தின் சார்பாக அரசாங்கத்தின் நிதித்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுபவராக இருப்பவர் தணிக்கைத் துறைத் தலைவர். ஆண்டுதோறும் அரசாங்கச் செலவு வேகமாக அதிகரித்துக்கொண்டுவரும் இந்தியா போன்ற நாடொன்றில், அரசியலமைப்பில் கொள்ளப்பட்டிருக்கும் ஜனநாயகக் கொள்கைகளை உரிய முறையில் அடைவதற்குத் கணக்கு தணிக்கை அலுவரின் பங்கை அதிகப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே தான் இவ்வலுவலகம் மிகவும் முக்கியமானதென்றும் , பொதுப் பணத்தின் பாதுகாவலன் என்றும் அறியப்படுகிறது.
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers