Easy Tutorial
For Competitive Exams

TNPSC GS Polity - சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை

சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை

சட்ட ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்று கூறும் ஒரு கோட்பாடு ஆகும். சட்ட ஆட்சி அரசுகளின், வணிக நிறுவனங்களின், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் ஒரு கூறாக அமைகிறது.
இது சட்டம் ஆட்சியாளர்களுக்கும், மக்களும், செல்வந்தர்களும், ஏழைகளும் என எல்லோருக்கும் ஒரே மாதிரியாக சட்டம் அமைய வேண்டும் என்றும் வரையறை செய்யப்படுகிறது. எனினும் சட்ட ஆட்சி என்பது சட்டங்கள் நியாமனவையா என்பது பற்றி தீர்மானிக்காமல், இருக்கும் சட்டங்கள் படி சமூகம் இயங்க வேண்ட என்ற கருத்துருவை கூடுதலாக சுட்டி நிற்கிறது. சட்டங்கள் மாற்றப் பட வேண்டுமானால் அது அந்த அந்த நாட்டு சட்டமியற்று வழிமுறைகளின் ஊடாக நிகழலாம்.

தக்க சட்ட முறை-நெருக்கடிகால சட்ட வகை முறைகள்

இந்திய அரசியல் அமைப்பு 3 வகையான நெருக்கடி நிலைமைகளை பற்றிக் குறிப்பிடுகிறது.
1. தேசிய நெருக்கடி நிலைமை
2.மாநில நெருக்கடி நிலைமை.
3.நிதி நெருக்கடி நிலைமை

தேசிய நெருக்கடி நிலைமை:
  • இந்தியாவின் பாதுகாப்பு வெளித்தாக்குதலாலோ ஆயதக் கலகங்களாலோ அல்லது போரினாலோ அச்சுறுத்தப்படுகிறது என குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால் அவர் இந்தியா முழுமைக்குமோ அல்லது இந்திய நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ நெருக்கடி நிலைமை பிரகடனப்படுத்தலாம் என ஷரத்து 352(1) கூறுகிறது.
  • நெருக்கடி நிலைமை பிரகடனமானது பாராளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதனை இரு அவைகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அப்பிரகடனமானது ஒரு மாதத்திற்குள் தன் செயல்திறனை இழந்து விடும். என ஷரத்து 352 (4) கூறுகிறது.
  • ஏற்கனவே ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனம் இருப்பினும், மேலும் ஒரு நெருக்கடி நிலைமை பிரகடனத்தை குடியரசுத்தலைவர் அறிவிக்கலாம் என ஷரத்து 352 (9) கூறுகிறது.
மாநில நெருக்கடி நிலைமை:
  • ஷரத்து 356ன் படி குடியரசுத்தலைவர், ஒரு மாநில ஆளுநர் அனுப்பிய அறிக்கையினைப் பெற்றதின் பேரிலோ அல்லது அம்மாநில அரசாங்கம் அரசியலமைப்பு சட்ட வகைமுறைகளின்படி நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது என அவர் திருப்தியுற்றாலோ, அந்த மாநிலத்தில் அவர் நெருக்கடி நிலைமையைப் பிரகடனப் படுத்தலாம்.
  • ஷரத்து 356ன் படி மாநில நெருக்கடி நிலைமை பிரகடனமானது பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் வைக்கப்பட வேண்டும். அதனை இரண்டு மாத காலம் முடிவடையும் முன் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அங்கீகரிக்கவில்லை என்றால் அது இரண்டு மாத காலம் வரை அமலில் இருக்கும்.
  • அத்தகு பிரகடனத்தை அதனைத் தொடர்ந்த ஒரு பிரகடனத்தினால். திரும்பப்பெற்றுக் கொள்ளலாம் அல்லது மாற்றியமைக்கலாம். > இந்த பிரகடனமானது மக்களவையினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டால். அது ஆறுமாதங்கள் வரை அமலில் இருக்கும்.
  • இந்த ஆறுமாத காலம். பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்படலாம். ஆனால் எந்த நெருக்கடி நிலைமை பிரகடனும் மூன்று ஆண்டுகாலம் முடிவடைந்தவுடன், குடியரசுத் தலைவருக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ, அப்பிரகடனத்தைத் தொடர்ந்திருக்கச் செய்ய அதிகாரம் இல்லை.
நிதி நெருக்கடி நிலைமை :
  • இந்தியாவின் நிதி நிலைமை அல்லது கடன் நிலைமை அச்சுறுத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது என குடியரசுத்தலைவர் திருப்தியுற்றால் அவர் நிதி நெருக்கடி நிலைமையை பிரகடனப்படுத்தலாம் என ஷரத்து 360 கூறுகிறது.
  • மாநில அரசு ஊழியர்கள், உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள். இவர்களின் ஊதியத்தை குறைக்க குடியரசுத்தலைவர் ஏவுரைக்கலாம்.
  • மாநிலச் சட்டமன்றங்களாய் நிறைவேற்றும் எல்லா நிதி மசோதாக்களையும் தமது பரிசீலனைக்கு அனுப்புமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம். இந்த மாதிரியான நெருக்கடி நிலைமை இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை.
சட்ட திருத்தங்கள் (Amendment of the Constitution) (Art 368)
  • அரசியலமைப்பை திருத்துவதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம், அதற்கான நடைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. (Power of Parliament to amend the constitution & Procedure therefore)
  • 1973 கேவானந்தபாரதி கேரளா மாநில வழக்கில் முகவுரையை உள்ளடக்கிய அரசியமைப்பின் எந்தப் பகுதியையும் பாராளுமன்றம் திருத்தலாம். ஆனால் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை திருத்த இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 1971 - 24வது சட்டத்திருத்தப்படி அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான நடைமுறைகள் (Procedure for Amendment of the constitutions)என்ற வார்த்தைக்கு பதிலாக அரசியமைப்பு சரத்தை திருத்துவதற்கான "Parliament to amend the constitutions & Precedure therefore” என்ற வார்த்தை சேர்க்க ப்பட்டது.
  • 1971-24 வது சட்டத்திருத்தத்தில் பாராளுமன்றம் அடிப்படை உரிமைகள் உட்பட அரசியலமைப்பின் எந்த பகுதியையும் திருத்த அதிகாரம் வழங்கப்பட்டது.
  • 1976 - 42வது சட்டத்திருத்தப்படி யுசவ 368 ல் பின்வரும் 5 வாசகங்கள் சேர்க்கப்பட்டது.
    1. அரசியலமைப்பு சட்டத்தில் எதையேனும் சேர்த்தல், மாற்றுதல் (திருத்துதல்), நீக்குதல்.
    2. திருத்தம் செய்வதற்கான நடைமுறைகள்.
    3. ஷரத்து 368 ன்படி மேற்கொள்ளப்படும் சட்டதிருத்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக இயலாது.
    4. சட்டதிருத்தம் மேற்கொள்ளும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் மீது வேறு எந்தவித அதிகாரமும் செலுத்த இயலாது.
  • இந்திய அரசியலமைப்பை 3 முறைகளில் (அ) வழிகளில் திருத்தலாம்.
    1. சாதாரண பெரும்பான்மை
    2. சிறப்பு (அ) அரிது பெரும்பான்மை
    3. சிறப்பு பெரும்பான்மை ரூ பாதிக்கு மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் மூலம் (Special Majority & the Ratification of half of the State legislatore)
1. சாதாரண பெரும்பான்மை
  • நாடாளுமன்றத்தில் 50மூ (அ) 12 மேபட்ட உறுப்பினர்களின் ஆதரவோடு திருத்தம் மேற்கொள்ளும் முறையாகும்.
  • மாநில சட்டமேலவையை ஏற்படுத்துதல் (அ) நீக்குதல் (Art 239A)
  • யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவையை ஏற்படுத்துதல் (Art 239A)
  • அரசியலமைப்பின் 2வது, 5வது, 6வது அட்டவணையை திருத்துதல்.
  • பாராளுமன்ற (அ) சட்டமன்ற தேர்தல் தொடர்பான திருத்தம்

2. சிறப்பு பெரும்பான்மை
  • பாராளுமன்றத்தில் 2/3 பங்குக்கு மேல் உறுப்பினர்கள் ஆதரவுடன் திருத்தம் மேற்கொள்ளும் முறையாகும்.
  • அடிப்படை உரிமைகள் தொடர்பான திருத்தம்
  • அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடு தொடர்பான திருத்தம்
  • 1வது முறை மற்றம் 3வது முறையில் திருத்தப்படாத மற்ற அனைத்தும் திருத்துதல்
3. சிறப்பு பெரும்பான்மை பாதிக்கு மேற்பட்ட மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல்
  • பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை ஆதரவுடன் திருத்தப்பட்டு, அத்திருத்தத்திற்கு இந்தியாவில் உள்ள பாதிக்கு மேற்பட்ட மாநில சட்டமன்றங்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
  • குடியரசு தலைவர் தேர்தல் ரூ தேர்தல் முறைகள்
  • மத்திய, மாநிலங்களின் நிர்வாக அதிகார எல்லை தொடர்பான திருத்தம்.
  • உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் தொடர்பான திருத்தங்கள்.
Share with Friends