தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாடக்குறிப்புகள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்தியாவின் குடிமக்களுக்காக பொது அதிகார அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகிய தகவல்களுக்கு அவற்றைப் பெறுவதற்கான செயற்திறன் மிக்க வழிவகையை 2005 – ஆம் ஆண்டின் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ வழங்குகிறது.
- ஒவ்வொரு பொது நிர்வாக அதிகார அமைப்பின் செயல்பாட்டிலும் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பேற்றுக் கொண்டு விளக்கமளித்தலையும் இச்சட்டம் முன்னெடுத்தச் செல்லுகிறது.
- ஜம்மு – காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியா முழுமைக்கும் பொருந்தும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது.
- தகவல்களுக்கு மிகப் பரந்ததும் மெலதிக செயற்திறன் வாய்ந்ததுமான வழிவகையை உறுதிசெய்யும் பொருட்டு 2002 – ஆம் ஆண்டின் தகவலுக்கான சுதந்திரச் சட்டத்தை ரத்து செய்வதென்றும் இ செயல் திறன் மிக்க சட்டகத்தை வழங்கும் வகையில் அமைந்த இன்னொரு சட்டத்தை இயற்றுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
- இந்த நோக்கத்தை எட்டுவதற்காக, தகவலறியும் உரிமைக்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005 – ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் நாள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மே 12,2005-அன்று மாநிலங்கள் அவையால் நிறைவேற்றப்பட்டு ஜூன் 15, 2005 – அன்று ஒப்புதலையும் பெற்றது.
- குடிமக்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவது அரசாங்கத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் – பொறுப்பேற்றுக் கொள்ளுதலையும் முன்னெடுத்துச் செல்வது ஊழலைக் கட்டுப்படுத்துவது மற்றும் நமது ஜனநாயகத்தை மக்களுக்காகப் பணி செய்வதை அதனுடைய உண்மையான அர்த்தத்தில் மேற்கொள்ளுமாறு செய்வது – ஆகியவையே தகவலறியம் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாகும்.
‘பொது அதிகார அமைப்பு’– என்பது என்ன?
‘பொது அதிகார அமைப்பு’ என்பது, எந்த ஓர் அதிகாரத்துவம் அல்லது அமைப்பு அல்லது நிறுவனத்தைக் குறிக்கும். அது தன்னாட்சி உரிமையுடையதாக இருக்கும். பின்வரும் வழிமுறைகளால் அத்தகைய தன்னாட்சி அதிகாரத்துவத்தை அது பெறுகிறது:
- அரசயில் சட்டத்தால் அல்லது அதன்கீழ் நிறுவப்படுவது அல்லது அமைக்கப்படுவது
- நாடாளுமன்றத்தாலோஅல்லதுமாநில சட்டமன்றத்தாலோ உருவாக்கப்பட்ட ஏதேனும் ஒரு சட்டத்தால் நிறுவப்படுவது அல்லது அமைக்கப்படுவது. மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவு அல்லது ஓர் அறிவிக்கையால் நிறுவப்படுவது அல்லது அமைக்கப்படுவது.
- மத்திய அரசு அல்லது மாநில அரசால் உரிமை கொள்ளப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கணிசமான அளவுக்கு நிதியளிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் மத்திய மாநில அரசுகளால் கணிசமான அளவுக்கு நிதியளிக்கப்பட்ட அரசு சாராத அமைப்புகளும் (என்ஜிஓக்கள்) இந்தப் பொது அதிகார அமைப்பு என்ற வரையறைக்குள் அடங்கும்.
- மேற்கண்ட அமைப்பு அல்லது என்ஜிஓவுக்கு அரசாங்கத்தால் நிதி வழங்கப்படுவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம்.
பொதுத் தகவல் அதிகாரி
- பொது அதிகார அமைப்புகள் தமது அலுவலர்களுள் சிலரை பொதுத் தகவல் அதிகாரிகள் என்ற பணிப்பொறுப்பளித்து நியமனம் செய்துள்ளன.
- தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் தகவல்கள் தேவை என்று கோருகிற நபர்களுக்குத் தகவல்களைத் தர வேண்டிய பொறுப்பு இந்த அதிகாரிகளையே சாரும்.
சட்டத்தின்கீழ் தகவலறியும் உரிமை
- ஒரு பொது அதிகார அமைப்பினால் அதனிடத்து அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழே வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு தகவல்களையும் அப்போது அதிகார அமைப்பிடமிருந்து கோரும் உரிமை ஒரு குடிமகன் ஃ குடிமகளுக்கு உண்டு.
- பணியைச் சோதித்தறிவது ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசோதிப்பதுஅத்தகைய ஆவணங்களையும் பதிவோடுகளையும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளாகப் பெறுவது, அவற்றின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பெறுவது, அவற்றிலிருந்து குறிப்புகள் எடுப்பது, மற்றும் பொது அதிகார அமைப்பு அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் சாந்றாதாரங்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுவது போன்ற இவையனைத்துமே அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரும் உரிமையில் அடங்குவனவாகும்.
- தகவல் அறியும் உரிமையை இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ள உரிமைக்குச் சமதையான விதத்தில் குடிமக்களுக்கு வழங்கி உள்ளது.
- இந்தச் சட்டத்தின்படி எந்தத் தகவல் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்திற்கு மறுக்கப்பட்ட முடியாதோ அதே தகவலை எந்த ஒரு குடிமகனுக்கும் மறுக்க முடியாது.
- விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் கோருகிற வடிவத்திலேயே கோரப்படும் தகவலை வழங்க வேண்டுமென்பதே சாதாரணமான நடைமுறையாகும்.
- எப்படியிருப்பினும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் கோரப்படும் தகவலை அவ்வாறே வழங்கும் பட்சத்தில் அது பொது அதிகார அமைப்பின் மூலவளங்களை சமச்சீரற்ற விதத்தில் மடைமாற்றினாலோ அல்லது பதிவேடுகளின் பாதுகாப்பு அல்லது பாராமரிப்புக்கு ஏதேனும் துன்பம் விளைவிப்பதாக அமைந்தாலோ அக்குறிப்பிட்ட வடிவத்தில் தகவல் வழங்க இயலாது என மறுக்கப்படும்.
தகவல் கோருவதற்கான கட்டணம்
- ஒரு பொது அதிகார அமைப்பிடமிருந்து ஏதேனும் ஒரு தகவல் கோருகிற ஒரு நபர், தனது விண்ணப்பத்துடன் ரூ.10 (ரூபாய் பத்து) மதிப்புள்ள இந்திய அஞ்சலக ஆணை, அல்லது வங்கி காசோலை அல்லது வங்கி கேட்போலை – ஒன்றை, அப்பொது அதிகார அமைப்பின் கணக்கு அலுவலருக்கு வழங்கப்படும் வகையில், தகவல் கோருவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகச் சேர்த்து அனுப்ப வேண்டியவராவார்.
- இக்கட்டணம் அப்பொது அதிகார அமைப்பின் கணக்கு அலுவலருக்கோ அல்லது துணைப் பொதுத் தகவல் அதிகாரிக்கோ முறையான ரசீதுக்கு எதிராக காசாகவும் செலுத்தப்படலாம்.
- நாடாளுமன்றத்தின் அல்லது மாநில சட்டமன்றத்தின் உரிமை மீறப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடும் வகையினாலோ தகவல் வெளிப்பாடுஅல்லது
- அமைச்சர்கள் குழுவினுடைய விவாதங்கள் செயலாயர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு இடையிலான விவாதங்கள் போன்ற அமைச்சரவை ஆவணங்கள் – நிபந்தனைகளுக்கு உட்பட்டு.
- சாதாரணமான நடைமுறைப்படி பொது அதிகார அமைப்பினால் விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் ஒரு விண்ணப்பதாரருக்கு அவர் கோரும் தகவல் அளிக்கப்பட வேண்டும். அத்தகவல் ஒரு குறிப்பிட்ட நபரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருக்கும் பட்சத்தில் 48 மணி நேர அவகாசத்திற்குள் அவ்வாறு கோரப்படும் தகவல் வழங்கப்பட்டு விட வேண்டும்.
- விதிக்கப்பட்ட இக்கால வரையறைகளான முப்பது நாட்கள் அல்லது 48 மணி நேர கால அவகாசத்திற்குள் ஒரு விண்ணப்பதாரருக்குத் தகவல் வழங்கப்படாத பட்சத்தில் அல்லது கொடுக்கப்பட்ட தகவலில் விண்ணப்பதாரருக்கத் திருப்தி ஏற்படாத பட்சத்தில் விண்ணப்பதாரர் முதல் மேல்முறையீட்டு அதிகாரிக்க மேல்முறையீட்டு மனுவை சமர்பிக்கலாம்.
- பொதுத் தகவல் அலுவலரின் பணிநிலையை விட மூத்த பதவியிலுள்ளவராக இந்த முதல் மேல்முறையீட்டு அதிகாரி இருக்க வேண்டும்.
- இத்தகைய மேல் மூறையீடுபொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட பதில் அல்லது முடிவின் நாளிலிருந்து அல்லது தகவல் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசமான 30 நாட்கள் முடிவடைந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டாக வேண்டும்.
- பொது அதிகார அமைப்பின் மேல்முறையீட்டு அதிகாரி, 30 நாட்களுக்குள் அல்லது சில விதிவிலக்கான மனுக்கள் விஷயத்தில் 45 நாட்களுக்குள் மேல் முறையீட்டுக்குத் தீர்வு காண வேண்டும்.
- இந்த முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணையில் விண்ணப்பதாரர் திருப்தி அடையாதிருக்கும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் அத்தகைய ஆணை எதையும் பிறப்பிக்க அவர் தவறும் பட்சத்தில், அந்த முதல் மேல் முறையீட்டு அலுவலர் தனது முடிவை என்றைக்கு எடுத்திருந்தாரோ அந்த நாளிலிருந்து அல்லது அம்முடிவு ஃ பதிலை இரண்டாவது மேல் முறையீட்டை மத்திய தகவல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்யலாம்.
வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்களிக்கபட்ட தகவல்
பின்வரும் வகையான தகவல்கள், தொடர்ந்து விலக்களிக்கப்பட்டவையாகவே நீடிக்கும்@ 20 வருட வரையறை முடிவடைந்த பின்னரும் கூட எந்த ஒரு குடிமகனுக்கும் இவற்றைக் கொடுக்க வேண்டுமென்கிற கடமை ஏதும் கிடையாது:
தகவல் வழங்குவதற்கான கால வரையறை
- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers