நீதித்துறை
உச்ச நீதிமன்றம் - அமெரிக்க ஐக்கிய நாடுகளைபோல் அல்லாமல் இந்திய அரசியலமைப்பின்படி நீதித்துறையானது உச்ச நீதி மன்றத்தை தலைமை இடத்திலும் அதற்கு ஒருங்கிணைந்த நீதித்துறையாகச் செயல்பட வைத்துள்ளது.
- இந்த ஒரே தன்மையுடைய நீதி முறையானது 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
- இதில் மத்திய மற்றும் மாநில சட்டங்கள் ஒருங்கே சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்திய உச்ச நீதிமன்றமானது ஜனவரி 28-1950-ல் துவங்கப்பட்டுள்ளது.
- 1935-ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படி இந்திய பெடரல் நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றமானது உயர்ந்த நீதி வழங்கும் அதிகாரமாக செயல்பட்டு வந்த இங்கிலாந்தின் மன்னர் கவுன்சிலை நீக்கியது.
- இந்திய அரசியலமைப்பின் பகுதி ஏ-ல்ஷரத்துகள் 124 முதல் 147 வரை நீதித்துறை பற்றி கூறுகிறது.
- தற்போது உச்ச நீதிமன்றமானது தலைமை நீதிபதி உள்பட 31 நீதிபதிகளை உள்ளடக்கியுள்ளது.
Group-IV(2011 Qn)
57607.சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
2010
2009
2008
2007
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
- தலைமை நீதிபதியை நியமிக்கும் போது இதர உச்சநீதிமன்ற நீதிபதிகளையும்ää உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் குடியரசுத்தலைவர் விரும்பினால் கலந்து ஆலோசிக்கலாம்.
- இதர உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கும்போது அதன் தலைமை நீதிபதி மற்றும் இதர நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கலந்து ஆலோசித்து நியமிக்கலாம்.
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
ஒரு நபர் உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கான தகுதிகளாவன:
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- உயர் நீதிமன்றங்களில் 5 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்.
- 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்.
- குடியரசுத் தலைவரால் சிறப்பு வாய்ந்த சட்டநிபுணர் என்று கருதப்படுபவர்கள் நமது அரசியலமைப்பில் உச்சநீதிமன்ற நீதிபதியாவதற்கு குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்படவில்லை.
- அரசியலமைப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் மூன்று வகைகளில் அவர்களை பணியில் இருந்து விடுவிப்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
- 65-வயது பூர்த்தியாகும் வரையில் நீதிபதியாக பணியாற்றலாம்.
- தனது பதவிவிலகல் கடிதத்ததை குடியரசுத் தலைவரிடம் சமர்பிப்பதன் மூலம் பதவி விலகலாம்.
- பாராளுமன்றத்தின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்ய முடியும்.
Group-IV(2012 Qn)
58109.பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர்
யார் ?
யார் ?
நீதியரசர் ஏ. என். ரே
நீதியரசர் பி. வி. ரெட்டி
நீதியரசர் எஸ். எம். சிக்ரி
நீதியரசர் ஒய். வி. சந்திரசூட்.
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் பணி நீக்கம் செய்கிறார்.
- இவை இரண்டு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. • தவறான நடத்தை • இயலாமை அல்லது திறமையின்மை
- பதவி நீக்க தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்களின் 100 நபர்களும் (அ) மாநிலங்களவை உறுப்பினர்களின் 50 நபர்களும் கையொப்பம் இட்டு மக்களவை சபா நாயகர் (அ) மாநிலங்களவைத தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
- மக்களவை சபாநாயகர் (அ) மாநிலங்களவை தலைவர் அத்தீர்மானத்தை அனுமதிக்கலாம் (அ) நிராகரிக்கலாம்.
- அனுமதிக்கப்பட்ட தீர்மானம் மூன்று உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழுவிடம் செல்லும்
- விசாரணைக் குழுவில்
- உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியின் வருகை எப்போது குறைவாக உள்ளதோ அப்போது அதன் தலைமை நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதிகளை தனி நீதிபதியாக (யுனாழஉ துரனபந) தற்காலிகமாக நியமிக்கலாம்.
- இதற்கு குடியரசுத் தலைவரின முன் அனுமதி வேண்டும்.
- தனி நீதிபதியாக நியமிக்கப்படும் நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
- அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும போது(அவர்களது இதர கடமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) மேலும் தனி நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிய நீதி எல்லை, அதிகாரம், சிறப்புரிமைகள் போன்றவற்றை பெறுவர்.
Group-IV(2013 Qn)
9994.உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
அன்னா சான்டி
விஜயலெட்சுமி பண்டிட்
இந்திரா காந்தி
பாத்திமா
- நமது அரசியலமைப்பானது மின நீண்ட அதிகார எல்லையையும் பரந்த அதிகாரத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது.
- இது கூட்டாட்சி நீதிமன்றத்தின் தலைமை அமைப்பாக திகழ்கிறது. அரசியலமைப்பிற்கு இறுதி விளக்கம் அளிக்கும் அமைப்பாக செயல்படுகிறது.
- இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. மேலும் அரசியலமைப்பின் பாதுகாவலனாக திகழ்கிறது.
- இறுதியாக ஆலோசனை வழங்குதல் மற்றும் மேற்பார்வையிடும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது.
- உச்ச நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு மற்றும் அதிகாரம் ஆகியவை பல்வேறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- கூட்டாட்சி நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் கூட்டாட்சியில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள பிரச்சனைகளை தீர்க்கிறது.
- மத்திய மற்றும் ஒரு மாநிலம் (அ) பல மாநிலங்கள்
- மத்திய மற்றும் எந்த மாநிலமும் (அ) மாநிலங்கள் ஒரு பக்கமும் மற்றும் ஒன்று (அ) பல மாநிலங்கள் மறுபக்கமும் (அ)
- இரண்டு மாநிலங்களுக்கு இடையே (அ) அதிக மாநிலங்கள்
Group-IV(2016 Qn)
9463.ஆட்கொணர் நீதி பேராணை என்பது
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
துணை நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடைசெய்த்ல்
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
2. நீதிப்பேராணை அதிகார வரம்பு
- உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகி நீதிபேராணைகள் மூலம் தீர்வு பெற வகை செய்கிறது.
- உச்ச,உயர் நீதிமன்றங்களுக்கு இடையே நீதிபேராணை வழங்குவதில் சில வேறுபாடுகள் உள்ளன.
- எ.கா.உச்ச நீதிமன்றம் சரத்து 32-ன் படி அடிப்படை உரிமைகள் மீறப்படுவதினால் பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபேராணை செயல்படுத்தும்.
- ஆனால் உயர்நீதிமன்றம் சரத்து 226-ன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது மட்டுமன்று இதர சட்டங்களால் பாதிப்பிற்கு உள்ளானாலும் அத்தகைய நபர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபேரானை மூலம் தீர்வு கொடுக்கலாம்.
- இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தை காட்டிலும் உயர்நீதிமன்றம் நீதிபேராணை வெளியிடும் அதிகாரவரம்பில் மேலோங்கி நிற்கிறது.
- ஆனால் பாராளுமன்றம் மூலம் உச்ச நீதிமன்றத்தின் இதர சட்டங்களுக்கும், செயல்களுக்கும் நீதிபேராணை அதிகாரம் வழங்க முடியும்.
கூட்டாட்சி நீதிமன்றமாக செயல்படும் உச்சநீதிமன்றம தனக்கு கீழாக உள்ள நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீட்டை பெறும் நீதிமன்றமாக செயல்படுகிறது. இந்த மேல் முறையீட்டினை நான்கு வகையாக பிரிக்கலாம். அவைகளாவன:
1.அரசியலமைப்பு சார்ந்த மேல் முறையீடு
2.சிவில் வழக்குகள் சார்ந்த மேல் முறையீடு
3. குற்றவியல் வழக்குகள் சார்ந்த மேல் முறையீடு
4.மேல் முறையீட்டிற்கான சிறப்பு அனுமதி
- அரசியலமைப்புச் சட்டம் சரத்து 143 மூலம் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை 2 வகையில் கேட்டு பெறலாம்.
- ஒரு தகவல் பற்றி (அ) ஒரு சட்டத்தைப் பற்றிய பிரச்சனை எழுந்துள்ளது (அ) எழக்கூடும் என்றும் அத்தகைய பிரச்சனையின் தன்மையையும் பொது முக்கியத்துவத்தையும் கவனிக்கும் போது
- அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற ஒப்பந்தங்கள்,உடன்படிக்கைகள், உறுதிமொழிகள் மற்றும் பட்டயம் போன்ற ஒத்த அதிகாரப்பத்திரம் சம்பந்தமாக எழும் விவாதங்கள். முதலியவற்றில் எழும் சந்தேகங்களுக்கு குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்றத்தை அணுகி ஆலோசனை பெறலாம்
- இதில் முதலில் கூறப்பட்ட தகவலுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கலாம் (அ) மறுக்கலாம். ஆனால் இரண்டாவது தகவலுக்கு கட்டாயம் ஆலோசனை வழங்கவேண்டும்.
- உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும், முடிவுகளும் எப்போதும் நிலைத்திருக்கும் ஆவணமாகத் தொகுக்கப்பட்டு தேவை ஏற்படும்போது சட்டத்திற்கு ஆதரவான சாட்சியாக சமர்பிக்கப்படுவதற்காக பேணிக் காக்கப்படுகின்றன. மேலும் அதன் நம்பகத் தம்மை பற்றி எவ்வித கேள்வியும் கேட்காமல் எந்த ஒரு நீதிமன்றத்திலும் அதனைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- உச்ச நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்புகளையும் அவமதிக்கும் நபர்களை தண்டிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
- அரசியலமைப்பின் படி உச்ச நீதிமன்றத்திற்கு நீதி புனராய்வு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- அதன் படி மத்திய மாநில சட்டமன்றங்களின் சட்டமியற்றும் சட்டங்களின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்துறையின் கட்டளைகள் போன்றவற்றை ஆராய்ந்து அவை அரசியலமைப்பை மீறினால் அவற்றை அரசியலமைப்பு தன்மையற்றவை(ருடவசய – ஏசைரள) என்று அறிவிக்க முடியும்.
- அவ்வாறு அறிவிக்கப்பட்டதை மத்தியää மாநில அரசாங்கங்கள் செயல்படுத்தக் கூடாது.
- மாநில ஆளுநர் ஒரு மாநிலத்தின் மாவட்ட நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, நியமனம் செய்வது, பதவி உயர்வு செய்வது ஆகிய விவகாரங்களை, அந்த மாநிலத்திற்கு அதிகார வரம்புள்ள உயர்நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்து செய்ய வேண்டும்.
- ஒரு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஒரு நபர் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரியாதிருக்க வேண்டும். ஏழாண்டுகளுக்குக் குறையாமல் வழக்கறிஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும்ää மற்றும் அத்தகைய நியமனத்திற்கென உயர்நீதிமன்றத்தால் அவர் பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்
- மாவட்ட நீதிபதிகள் அல்லாத வேறு நீதித்துறை சம்பந்தப்பட்ட நியமனங்கள்ää அதற்கெனத் தம்மால் உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியும் மாநிலப்பொதுத்தேர்வு ஆணையத்தையும்ää அம்மாநிலத்துக்கு அதிகார வரம்புள்ள உயர்நீதிமன்றத்தையும் கலந்தாலோசித்து அந்த மாநில ஆளுநரால் செய்யப்பட வேண்டும்.
- கீழ்நிலை நீதிமன்றங்கள் அமைப்பு மற்றும் எல்லை
- மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியே உயர் அதிகாரம் பெற்ற நீதித்துறை அதிகாரி ஆவார்.
- குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மறுவிசாரணை செய்யும் அதிகாரங்களை இவரே பெற்றுள்ளார். மாவட்ட நீதிபதி நீதித்துறை மற்றும் ஆளுமை அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
- மாவட்டத்திலுள்ள அனைத்து கீழ்ப்படிந்த நீதிமன்றங்களுக்கும் இவர் கண்காணிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
- கீழ்நிலை நீதிபதி பண சம்பந்தமான குடிமை விவகாரங்களில் அளவிலா அதிகாரம் பெற்றுள்ளார்.
- 7 வருடங்கள் வரை தண்டனை அளிக்கக்கூடிய குற்றவியல் வழக்குகளை தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் முடிவு செய்கிறார்.
- சிறிய அளவு பணம் நம்பந்தமான குடிமை வழக்குகளில் தீர்ப்பளிக்கும் விவகாரங்களில், அளவான அதிகாரங்களையே முன்சிப் பெற்றுள்ளார்.
- மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படக்கூடிய வழக்குகளை நீதித்துறை மாஜிஸ்திரேட் முடிவு செய்கிறார்.
• இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி ஹரிலால். ஜெகிசுந்தாஸ் கணியா 26.01.1950 முதல் 06.11.1951 வரை • தற்போதைய தலைமை நீதிபதி அட்லமஸ் கபீர். • நீண்டகாலம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவர் லு.ஏ.சந்திர சு10ட் 1972 – 1985 வரை • குறுந்த காலம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவர் மு.N.சிங் 25.11.1991 முதல் 12.12.1991 வரை
மாவட்ட நீதிபதிகளின் நியமனம்- இந்திய அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- அரசியலமைப்பின் சிறப்பியல்புகள்
- மத்திய,மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்
- குடியுரிமை
- அடிப்படை உரிமைகள்
- அடிப்படைக் கடமைகள்
- மனித உரிமை சாசனம்
- இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்
- மாநில நிர்வாகம்
- மாநில சட்டமன்றம்-சட்ட சபை
- உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு
- இந்தியாவின் நீதி துரையின் அமைப்பு
- சட்டத்தின் ஆட்சி -தக்க சட்ட முறை
- இந்திய தேர்தல் ஆணையம்
- அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
- பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்
- லோக் அதாலத்
- முறை மன்ற நடுவர்( Ombudsman)
- தகவல் அறியும் உரிமைச் சட்டம்
- இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்(Comptroller and Auditor General)
- பெண்கள் முன்னேற்றம்
- நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
- சர்வதேச ஆண்டுகள்
- FIRST TIME IN INDIAN GOVERNMENT
- இந்திய அரசியலமைப்பு -Quick Notes
- இந்திய அரசியல் அமைப்பு Online Test
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா-முக்கிய குறிப்புகள்
- முக்கிய அருஞ்சொற்பொருள்கள்
- இந்திய அரசியல் நிர்ணய சபை
- இந்திய அரசியல் Question & Answers