Easy Tutorial
For Competitive Exams

TNPSC GS Polity - பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்

பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான அரசாங்க நடவடிக்கைகள் :

  • அரசு, ஊழல் தடுப்புசட்டத்தை (1988) இயற்றியுள்ளது. இச்சட்டம், முறையின்றி அனுமதி வழங்க குற்றம் புரிதல், பரிசுப் பொருட்களை வாங்குதல் | போன்றவற்றை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC), மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன
  • மத்திய புலனாய்வுதுறை (CBI): சந்தானம் குழுவின் பரிந்துரைப்படி 1963, உருவாக்கப்பட்டது. இது, ஒருகுற்றத் தடுப்பு ஊழல் தடுப்பு அமைப்பாக செயல்படுகிறது.
  • லோக்பால் சட்டம், ஊழல் புகார் விசாரிக்கும் பொருட்டு இயற்றப்பட்டது.
  • ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோர்களை (Whistle blowers)பாதுகாக்கும் மசோதா நிலுவையில் உள்ளது.
  • அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் -தன்மை கொண்டுவரும் பொருட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் (RTI - 2005) இயற்றப்பட்டது.

Group-IV(2013 Qn)

10044.உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னனு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி
ஜீலியன் அஸ்ஸானேஜ்
டானியல் ப்ர்ல்
எட்வர்ட் ஸ்னோடன்
மைக் டைசன்
10096.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) : மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவர் சமர்பிப்பார்.
காரணம் (R) : இரண்டு அவைக்கும் லோக் சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
(A)மற்றும் (R)இரண்டும் சரி
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
(A) சரி ஆனால் (R) தவறு
மத்திய புலனாய்வுத் துறை Central Bureau of Investigation (CBI)

  • மத்தியபுலனாய்வுத் துறை (சந்தானம் கமிட்டி பரிந்துரை) 1963ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் தீர்மானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
  • தற்போது கேபினட் செயலகத்தின் கீழ் ஒரு இணைக்கப்பட்ட அலுவலகமாக ல் செயல்படுகிறது.
பணிகள் :

  • ஊழல், இலஞ்சம் மற்றும் நடத்தைமீறிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் குறித்த வழக்குகளை விசாரித்தல்.
  • நிதி, பொருளாதார சட்டங்கள், ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாடு, கலால் மற்றும் சுங்கவரி, வருமானவரி, அந்நிய செலவாணி ஒழுங்குமுறை போன்றவை தொடர்பான வழக்கு -களை, அத்துறைகள் விரும்பினால், CBI விசாரிக்கும்.
  • தேசிய அல்லது உலக அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த குற்றங்களை விசாரிக்கிறது.
  • மற்ற ஊழல் தடுப்பு நிறுவனங்களின் செயல் பாடுகளையும் ஒருங்கிணைக் -கிறது.
  • மாநில அரசுகள் விரும்பிக் கேட்பின் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும்.
நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission, CVC)

நடுவண் விழிப்புணர்வு ஆணையம் அரசாங்க ஊழலுக்கு தீர்வுகாண 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயரிய இந்திய அரசுத்துறை அமைப்பாகும். நடுவண் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும் நடுவண் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளில் விழிப்புணர்வு அலுவலக்கத்தை திட்டமிட,செயல்படுத்த மற்றும் மீளாய்வு செய்ய உதவிடவும் தன்னிச்சையான, எந்தவொரு அதிகார இடையூறுமில்லாத அமைப்பாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசுத்துறைகளில் விழிப்புணர்வு தொடர்பான வழிகாட்டலுக்கான கே. சந்தானம் தலைமையிலான ஊழல் தடுப்பிற்கான குழு பரிந்துரைகளின் பேரில் இது பெப்ரவரி, 1964ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முதல் தலைமை விழிப்புணர்வு ஆணையராக நிட்டூர் சீனிவாச ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த அமைப்பு ஓர் புலனாய்வு அமைப்பல்ல. வேண்டிய நேரங்களில் நடுவண் புலனாய்வுச் செயலகம் அல்லது துறைசார் தலைமை விழிப்புணர்வு அதிகாரிகளின் துணையை நாடுகிறார். அரசுத்துறை குடிமுறைப் பொறியியல் வேலைகளை ஆய்வு செய்ய மட்டும் இவ்வாணையத்தின் கீழாக தலைமை தொழில்நுட்ப அதிகாரி பணியாற்றுகிறார்.

இதற்கு 2003 ம் ஆண்டு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டது

CVC அமைப்பு :
  • ஒரு மத்திய கண்காணிப்பு ஆணையர் /தலைவர் மற்றும் இரண்டு கண்காணிப்பு ஆணையர்களையும் கொண்டுள்ளது.
  • இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரதமர் (குழுவின் தலைவர்) மத்திய உள்துறை அமைச்சர் மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் கொண்ட பரிந்துரைக்கப்படுகின்றனர். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் நபரை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
பணிகள்:
  • ஊழல் தடுப்புச் சட்டத்தின் (1988) கீழ் வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசின் ஊழியர்கள் அல்லது மத்திய அரசு நிறுவனம் புரியமாயின் அதை விசாரிக்கும்.
  • ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் ஏதேனும் ஒன்றை கீழ்க்குறிப்பிட்ட அலுவலர்கள் புரிந்தால் அவ்வழக்கை விசாரணை செய்யும்
    1. மத்திய அரசில் பணிபுரியம்

    2. அகில இந்திய பணியாளர்கள்

    3. மத்திய அரசின் குரூப் A அதிகாரிகள்

    4. மற்றும் மத்திய அரசு அலுவலங்களில் குறிப்பிட்ட நிலையில் வேலையிலுள்ள அதிகாரிகள்

  • டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டம் 1946ல் கீழ், டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பிற்கு அதன் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்துகிறது.
CVC செயல்பாடுகள் :

  • cvC அதனுடைய பணிகளை தன் தலைமையிடத்திலிருந்தே (நியூ டெல்லி) மேற்கொள்கிறது.
  • ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அனைத்து அதிகாரங்களும் இந்நீதிமன்றத்திற்கு உண்டு.
  • மத்திய அரசிலிருந்தோ , அல்லது மத்திய அரசு நிறுவனங்களிலிருந்தோ தேவையான தகவல்களை கேட்டுப் -பெறும் அதிகாரம் இவ்வமைப்பிற்கு உண்டு
  • தனது அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்படும் புகார்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்
  • அவ்வறிக்கை / அறிவுரையின் மேல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் எடுக்காமல் போகலாம்.
  • எனினும் cvCன் அறிவுரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
  • cvc ஆண்டு தோறும் தனது செயல்பாடுகள் சார்ந்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கிறது
Share with Friends