TNPSC GROUP2-GS -Indian Polity (இந்திய அரசியல்) அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
அரசு சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாகத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் கொள்கைகள் இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு சட்டங்களை இயற்றும்போது இந்திய அரசமைப்பு சட்டத்தின் நான்காவது பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோட்பாடுகளை கருத்திற்கொண்டு சட்டமியற்ற வேண்டும்.
இவை நீதிமன்றங்களின் வாயிலாகக் கட்டாயப்படுத்தப்பட முடியாதவை. அதாவது இவற்றில் எந்தக் கொள்கையையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக எவரும் அரசின் மீது வழக்குத் தொடர முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அரசமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிகளின்படி செம்மையாக செயலாற்றவில்லை எனில் அடுத்தது வரும் தேர்தலில் மக்கள் அந்த அரசாங்கத்திற்கு தக்க தீர்ப்பு அளிப்பார்கள் என்று டாக்டர்.அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான நெறிகள்:
சமுதாய, பொருளாதார, அரசியல் நீதி அனைவருக்கும் கிடைத்து மக்கள் நலம் எற்படும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும் (உறுப்பு 38)
எல்லா மக்களுக்கும் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்கள் கிடைக்கவும், பொருளாதார வனங்களின் உரிமை பரவலாக்கப்படவும், செல்வம் ஒரு சிலரிடமே குவிதல் தவிர்க்கப்படவும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உழைப்பிற்குச் சம ஊதியம் கிடைக்கவும், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது உடல்நலனைப் பாதிக்கும் வண்ணம் அவர்களிடம் வேலை வாங்குவது தவிர்க்கப்படவும் அவசியமான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் (உறுப்பு 39)
வேலை பார்க்கும் உரிமை, கல்வியுரிமை, வேலை வாய்ப்பற்றோர்க்கும், வயது முதிர்ந்தோர்க்கும் இயலாதவர்கட்கும் உதவுதல் போன்றவற்றை அரசு செய்ய வெண்டும் (உறுப்பு 41)
காந்தியக் கொள்கைகள் தொடர்பான நெறிகள்
ஊராட்சி மன்றங்கள் வலுவாக்கப்பட்டு அவை சிறப்பான சுய ஆட்சி அமைப்புகளாக ஆக அரசு முயல வேண்டும் (உறுப்பு 40)
மக்களின் உணவு சத்துள்ளதாக அமைந்து அவர்கள் உடல்நலம் பெற முயற்சிக்க வேண்டும். போதை தரும் பானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துதல் தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 47)
கால்நடை பராமரிப்பு நவீன அறிவியல் முறைப்படி அமைய கவனம் செலுத்தப்பட வேண்டும். பசு மற்றும் கன்றுகளைக் கொல்லுவது தடை செய்யப்பட வேண்டும் (உறுப்பு 48)
தொழிலாளர்கள் தொடர்பான நெறிகள்
தொழிலாளர்கள் பணிபுரியுமிடத்தில் நியாயமான மனிதாபிமானச் சூழல் நிலவவும், பெண்களுக்கு மகப்பேறு நிவாரணம் கிடைக்கவும் வகை செய்ய வேண்டும் (உறுப்பு 42)
விவசாயத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து விதமான தொழிலாளர்கட்கும் ஒரளவு நல்ல வாழ்க்கைத்தரம் அமையும் விதத்தில் ஊதியம் பெறவும் பணி இடத்தில் நல்ல சூழல் அமையவும் ஒய்வு வசதிகள் கிடைக்கவும் முயற்சிப்பதுடன் கிராமப்புறங்களில் குடிசைத்தொழில்கள் மேம்படவும் முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 43)
இந்தியாவிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே விதமான சீரியல் சட்டத்தொகுப்பு அமைய முயற்சிக்க வேண்டும் (உறுப்பு 44)
சமுதாயத்தில் நலிந்த பிரிவினர், குறிப்பாக அட்டவணைச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமுதாய அநீதி மற்றும் சுரண்டலிருந்து காக்கப்படவும் மேம்பாடயைவும் ஆவண செய்ய வேண்டும் (உறுப்பு 46)
வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களையும் இடங்களையும் பாதுகாக்க வேண்டும் (உறுப்பு 49)
நீதித்துறையை நிர்வாகத்துறையிடமிருந்து பிரிக்க முயல வேண்டும் (உறுப்பு 50)
பன்னாட்டு அமைதி காக்கவும் நாடுகளிடையே இணக்கத்தை வளர்க்கவும் பன்னாட்டுச் பிரச்னைகளை அமைதி வழிகளில் தீர்க்கவும் அரசு முயல வேண்டும் (உறுப்பு 51)
சில வழிகாட்டி நெறிகளை 42வது அரசியலமைப்புத் திருத்தம் இணைத்தது. அவையாவனை:
குழந்தைகள், இளைஞர்கள் நன்கு வளர வாய்ப்புகள் வழங்க்கப்பட வேண்டும். இளைஞர்கள் சுரண்டலிலிருந்து காக்கப்படவேண்டு (உறுப்பு 39) சட்டமுறை நீதியைக் காக்கும் வண்ணம் அமைய வேண்டும். பொருளாதார வசதியற்ற மக்களுக்கும் நீதி கிடைக்க இலவசச் சட்ட உதவிக்கான முறையை உருவாக்க வேண்டும் (உறுப்பு 39)
தொழிற்சாலைகளை மேலாண்மை செய்வதில் தொழிலாளர்களும் பங்குபெற வகை செய்தல் வேண்டும் (உறுப்பு 43)
புறச்சூழலை மேம்படுத்தவும் காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (உறுப்பு 48)
அரசியலமைப்பின் 44-வது திருத்தம் கீழ்க்கண்ட நெறியை இணைத்தது. தனி நபர்களிடையில் மட்டுமின்றி மக்கள் பிரிவினர்களிடையிலும் காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு முயல வேண்டும் (உறுப்பு 38)
வழிகாட்டி நெறிகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அரசியல் நிர்ணயச் சபையில் வலியுறுத்தப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா என்பதை (தேர்தலை கருத்தில்கொண்டு) மக்கள் கண்காணிப்பார்கள் என்றார்.