Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2013 Page: 5
34223.செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்ப்ட்டது
பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உசி
வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
34224."குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது"-இக்குறளில் அடி எதுகையாவது
குணமென்னும் - குன்றேறி
குன்றேறி - நின்றார்
குணமென்னும் - கணமேயும்
கணமேயும் - காத்தல்
34225.வாக்கிய அமைப்பினைக்கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் என சுட்டுக
தனி வாக்கியம்
கலவை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
34226.பிறவினை வாக்கியத்தைகண்டறிக
புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்த்ார்
அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
ஐங்குறுநூறுநூலைப்புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
34227.பின்வரும் இலக்கணக்குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை
மென்கண்
செய்வினை
நன்கலம்
அருவிலை
34228."நெறியினில் உயிர்செகுத் திடுவ" - இதில் "உயிர்செகுத்து" எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
வினையாலணையும் பெயர்
வியங்கோள் வினைமுற்று
இரண்டாம் வேற்றுமைத்தொகை
34229.சரியானவற்றைத் தேர்க.
பொருள்திணை
1. எதிருன்றல்- வெட்சி
2. மீட்டல்- வஞ்சி
3. செருவென்றது- வாகை
4. எயில்காத்தல்- நொச்சி
1ம்,2ம் சரி
2ம்,3ம் சரி
3ம்,4ம் சரி
1ம்,4ம் சரி
34230.பிரித்தெழுதுக:
நெடுநாவாய்
நெடு +நாவாய்
நெடுமை + நா+ வாய்
நெடுமை+நாவாய்
நெடுநா + வாய்
34231."நல்ல" எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
ஐங்குறுநூறு
34232."கடலில் கரைத்த பெருங்காயம் போல" இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
பகர்தல்
கலத்தல்
வீணாதல்
ஏமாறல்
34233.தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
நோயின்றி வாழ்கிறான்
மெல்ல நடந்தான்
நடந்து வந்தான்
நன்கு பாடினான்
34234.பொருத்துக:
(a) கை1. துன்பம்
(b) நோ2. கைப்பற்றுதல்
(c)யா3. ஒழுக்கம்
(d) வெள4. ஒருவகை மரம்

(a) (b) (c) (d)
2 4 3 1
3 4 1 2
3 2 4 1
3 1 4 2
34235.ஈற்றயலடி "சிந்தடி" பெற்று வரும் பாவகை
நேரிசைச்சிந்தியல் வெண்பா
இன்னிசைச்சிந்தியல் வெண்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா
34236."சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
பேரறிஞர் அண்ணா
பண்டித ஜவஹர்லால் நேரு
காந்தியடிகள்
ஜி.யு.போப்
34237."கவிகாளமேகம்" எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
34238.உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.
இந்தியா
குயில்
தமிழ்ச்சிட்டு
மணிக்கொடி
34239.மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
கற்றது மறவாமை
ஒழுக்கம் உடைமை
கண்ணஞ்சப்படுதல்
வாய்மை
34240.இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
(a) வழிக்கரை1. வினைத்தொகை
(b) கரகமலம்2. உரிச்சொற்றொடர்
(c) பொங்குகடல்3. ஆறாம் வேற்றுமைத்தொகை
(d) உறுவேனில்4. உருவகம்

(a) (b) (c) (d)
3 2 4 1
3 1 2 4
3 4 1 2
2 3 4 1
34685."பிள்ளைத் தமிழ்" என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
ஒட்டக்கூத்தர்
புகழேந்தி
குமரகுருபரர்
பகழிக்கூத்தர்
Share with Friends