கடும் குளிர்: ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி
- எல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சீனப் படையினரின் ஊடுறுவலைத் தடுக்க கிழக்கு லடாக் பகுதியில் 50,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவால் மூச்சுத் திணறலில் இருந்து இந்திய வீரர்களை, புகாரி சாதனம் காக்க வல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா
- 'கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
- இந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்( டேட்டா கார்டுகள்) வழங்கப்படும்.
கோவிஷீல்டு' தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த 'கோவிஷீல்டு' தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த 'கோவேக்சின்' தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்தது.
- கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டு கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இதன் அடுத்தகட்டமாக 'கோவிஷீல்டு' தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.அந்த நிறுவனத்திடம் 1 கோடியே பாத்து லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு அளித்தது.
- மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த ஆர்டரை அளித்தது. ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ.200 ஆகும். ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.210 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.