Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2021 January  2021 8th Jan 2021


கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு

  • 12.69 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • கரோனா தொற்று காலத்தில்தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்களை தமிழக அரசு வழங்கியது. அந்த வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 முறைதலா ரூ.1,000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், ஒரு கிலோ பருப்பு அடங்கிய சிறப்பு நிவாரணத் தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 5 லட்சத்து 94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 6 லட்சத்து 75 ஆயிரத்து 403 பெண் தொழிலாளர்களுக்கு புடவை, 2 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், ஒரு கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், தலா 25 கிராம் முந்திரி மற்றும் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.94 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு

  • 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி தொடங்கி வைத்தார்
  • வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு,வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது. தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு இன்று நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு முன் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டங்களைப் போலவே, மெய்நிகர் முறையில் மாநாடும் நடத்தப்படும். "தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுதல்" என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் மையக்கருவாக இருக்கும்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும்.

உள்ளாட்சி அமைப்பு நடுவராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்பு

  • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது.
  • இதையடுத்து உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக மாலிக் பெரோஸ்கானுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார்.

அயோத்தி நகராட்சி நிர்வாகம் ஐ.ஐ.எம். உடன் ஒப்பந்தம்

  • அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்ற ஐ.ஐ.எம். எனப்படும் 'இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்' உடன் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு நகரை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Share with Friends