இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றதது
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணியத்த 328 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.
- இந்த போட்டியில், ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங் செய்தனர். இந்த வெற்றிக்குக்காக இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
- இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆலன் பார்டர் சுனில் கவாஸ்கர் கோப்பை இந்திய அணி மீண்டும் தக்கவைத்துள்ளது.
- இதன் மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை வசப்படுத்தியது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
- நியூசிலாந்து 420 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 332 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் புள்ளிகளுக்குரிய சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் நிலையில் அதிலும் இந்தியா முதலிடம் (71.7 சதவீதம்) வகிக்கிறது. நியூசிலாந்து 70 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 69.2 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.
நேதாஜி பிறந்த நாளை வலிமை தினமாக கொண்டாட முடிவு மத்திய அரசு அறிவிப்பு
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ம் தேதி ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் 'பரக்ரம் திவாஸ்' எனும் வலிமை தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 தேதி, ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு அவரின் 125வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.
- கோல்கட்டாவில், முதலாவது வலிமை தின நிகழ்ச்சி நடைறெ உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.நிகழ்ச்சியில், நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவ படையில் பங்களிப்பு செய்த முக்கிய நபர்களை கவுரவிக்கும் பிரதமர் மோடி, கண்காட்சி ஒன்றையும் துவங்கி வைக்கிறார்.
- இந்திய தேசிய ராணுவ படையை சேர்ந்த சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் எழுப்பவும் ஆலோசனை நடந்து வருகிறது. முதலாவது வலிமை தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். இதற்காக பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்நிலை குழு ஒன்று அமைப்பட்டுள்ளது.
தமிழ் செம்மல் விருது
- உடுமலையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை அங்குசாமிக்கு, மாநில அரசின் தமிழ் செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், தமிழ் செம்மல் விருது, திருவள்ளுவர் திருநாளையொட்டி, விருதுகள் வழங்கப்படுகிறது.
- இதில், 2020ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது, திருப்பூர் மாவட்டத்தில், உடுமலையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பேராசிரியரான துரை அங்குசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பராமரிப்பு: அதானி குழுமம் ஒப்பந்தம்
- திருவனந்தபுரம், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த 2019 பிப்ரவரியில் அறிவித்தது.
- இதையடுத்து, கடும் போட்டிகளுக்கு இடையே அதானி குழுமத்துக்கு இந்த விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமம் கிடைத்தது. இதனால், லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.