Current Affairs - தமிழ் 2021 January 2021 24th jan 2021
NDRF நிதி
தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நேரடியாக தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு (NDRF - National Disaster Relief Fund) பங்களிக்க அனுமதிக்கும் வகையிலான ஒரு பரிந்துரைக்கு மத்திய நிதித்துறை அமைச்சகமானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
NDRF ஆனது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
இது எந்தவொரு அச்சுறுத்தும் பேரிடர் சூழ்நிலைச் சமயத்திலும் “அவசரகால மீட்பு, நிவாரணம், புனர்வாழ்வு” ஆகியவற்றிற்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் நிதியாகும்.
இது மாநிலங்களின் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிகளுக்கு உதவி புரிவதற்காக (கூடுதலாக) அமைக்கப் பட்டுள்ளது.
இது “வட்டி ஏதும் பெறப்படாத ஒதுக்கப்பட்ட நிதியம் என்பதின் கீழ் இந்திய அரசின் பொதுக் கணக்கில்” வைக்கப் பட்டுள்ளது.
பிரதான் மந்திரி பாதுகாப்பு நிதியம் அல்லது பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியானது ஒரு பொது அமைப்பு அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்நிதி குறித்து தகவல் எதுவும் பெற முடியாது.
GAFA வரி
டிஜிட்டர் நிறுவனங்களுக்கான உலகளாவிய வரி முறைக்கான தீர்வை நோக்கமாகக் கொண்ட பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப் படும் நடவடிக்கை என்று இதை அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரான்ஸ், ஐக்கியப் பேரரசு, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இதர நாடுகள் ஆகியவை மிகப்பெரிய டிஜிட்டல் நிறுவனங்களின் மீது வரிகளை விதித்துள்ளன.
GAFA வரியானது கூகுள் ஆப்பிள் முகநூல் அமேசான் ஆகிய நிறுவனங்களை அடுத்து இந்தப் பெயர் (Google, Apple, Facebook, Amazon- GAFA) - வைக்கப் பட்டுள்ளது
இது மிகப்பெரிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வரியாகும்.
தேசியப் பாதுகாப்பு முகமை
சீனாவானது ஹாங்காங்கில் சிறப்பு முகமை தேசியப் பாதுகாப்பு அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது
இது குற்றவியல் வழக்குகளைக் கையாளும் உரிமை மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது
ஆங்கிலேயரால் சீனாவிற்கு வழங்கப்பட்ட முந்தையக் காலனியான ஹாங்காங் ஆனது 1997 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இருந்து வருகின்றது.
ஹாங்காங்கின் வெளியுறத் துறை விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன.
சட்டத்தின் ஆட்சிக் குறியீடு
இது அமெரிக்காவில் உள்ள ஒரு தனிச் சுதந்திர அமைப்பான உலக நீதித் திட்டத்தினால் வெளியிடப் பட்டுள்ளது
தற்பொழுதைய நிலையில் இதில் மொத்தமுள்ள 128 நாடுகளில் இந்தியா 68வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்படுள்ளது.
மிகியஸ்
இது 2016 ஆம் ஆண்டில் சீனாவினால் செலுத்தப்பட்ட உலகின் முதலாவது குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
இந்தச் செயற்கைக் கோளானது சிக்கலான போட்டான் இணைகளின் ஆதாரமாக விளங்குகின்றது.
சமீபத்தில், இது உலகின் மிகவும் பாதுகாப்பான ஒரு தகவல் இணைப்பை ஏற்படுத்துவதற்காக வேண்டி பூமிக்கு ஒளித் துகள்களை அனுப்பியுள்ளது.
ஸ்டெகோடான் புதை படிவம்
ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது அழிந்து போன யானை சந்ததியின் (முந்தைய) புதை படிவத்தைக் கண்டறிந்துள்ளது.
இது ஏறத்தாழ 5 முதல் 8 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்தப் புதைபடிவமானது உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்ஷாகி பாக் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது இமயமலையின் சிவாலிக் வரம்பின் தோக் பதான் பகுதியில் கண்டறியப் பட்டுள்ளது.
இது ஸ்டெகேடான் (மறைந்த பிளாய்ஸ்டோசீன் காலம் வரை காணப்பட்ட, தற்பொழுது அழிந்து போன யானை வகை) ஆக இருக்கலாம் என்று கூறப் படுகின்றது.