ஹரிவராசனம் விருது 2020
- சபரிமலை ஐயப்பன் பற்றிய பாடல்கள் பாடியவர்கள் மற்றும் இசையமைப்பவர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 2012 முதல் ஆண்டு தோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.
- இதுவரை ஜேசுதாஸ், விஜயன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீகுமார், கங்கை அமரன், சித்ரா, பி.சுசீலா, இளையராஜா உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
- இந்த ஆண்டு வீரமணி ராஜூ தேர்வு செய்யப்பட்டார். விருது வழங்கும் விழா சன்னிதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. ராஜூ ஆபிரகாம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தேவசம்போர்டு தலைவர் வாசு வரவேற்றார்.
45,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியம்
- இந்தோனேஷியாவில் உள்ள சுலோவெசி தீவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சி பணி நடந்துள்ளது. அப்போது அங்கிருந்த குகைகளில் இருந்த சுண்ணாம்பு கற்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அதனடிப்படையில் அங்கு பன்றியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. சுமார் 136 x 54 சென்டி மீட்டரில் அந்த ஓவியம் இருந்துள்ளது. அதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் அந்த ஓவியம் 45500 ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மக்கள் அப்போது வாழ்ந்த்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏர் டாக்சி சேவை துவக்கம் - ஹரியாணா
- பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து ஹரியாணா மாநிலம் ஹிசாருக்கு 'ஏர் டாக்சி' சேவையினை ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஞாயிறன்று துவக்கி வைத்தார். ஏர் டாக்சி ஏவியேஷன் என்னும் நிறுவனம் இந்த தினசரி சேவையினை நடத்துகிறது. இதற்காக நான்கு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- இதில் விமானி தவிர மூன்று பேர் பயணம் செல்லலாம். சண்டிகரில் இருந்து ஹிசாருக்கு பயண நேரமாக 45 நிமிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒன்றுக்கு ரூபாய் 1,755 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதேநேரம் தனிப்பட்ட பயண முன்பதிவுக்கு கட்டணங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த சேவையானது ஒரே ஒரு நபர் டிக்கெட் எடுத்திருந்தாலும் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.
பூபேந்தர் சிங் மான் விலகல் - உச்சநீதிமன்றம்
- வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யவும், விவசாயிகளுடன் பேசவும், நான்கு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.
- இதில், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் பூபேந்தர் சிங் மான், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரமோத் ஜோஷி, ஷேட்கெரி சங்கதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வட் ஆகியோர் இடம்பெற்றனர்.
- ஆனால், இந்த கமிட்டியை ஏற்க மறுத்த விவசாயிகள், குழுவில் இடம்பெற்றவர்கள் வேளாண் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டினார். அதில், கடந்த டிசம்பர் மாதம் மத்திய விவசாயத்துறை அமைச்சர் தோமரை சந்தித்த சில விவசாய அமைப்பின் உறுப்பினர்களில் பூபேந்தர் சிங் மானும் ஒருவர் ஆவார்.
- இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகியுள்ளார்.
ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள்
- பண்டையகால மனித நாகரிகம் தொடர்பாக உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வாளர்கள் மனிதன் வாழ்ந்த இடங்கள், வாழும் முறைகள், பயன்படுத்திய பொருட்கள் மூலமாக வாழ்ந்த காலத்தை ஆய்வு செய்கின்றனர்.
- அந்தவகையில், செளதி அரேபியாவின் வடக்கு பகுதியில் உள்ள பழமையான ஏரி ஒன்றில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 1,15,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மனித காலடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- இங்கு ஏரி காணப்பட்டதால், அதிக அளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர்.மேலும், ஒட்டகம், எருமை, யானை உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காகவும் மனிதர்கள் இங்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- அந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 தடங்கள் மனிதனுடையது என கண்டறியப்பட்டுள்ளது.
- சில கால்தடங்கள் அளவில் வேறுபாடுடனும், அதிக இடைவெளியுடனும் காணப்படுகின்றன. மனிதனின் காலடி தடம் மட்டுமல்லாமல் மேலும் 233 தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
- அதேநேரத்தில் வேட்டையாட பயன்படுத்தியதற்கான ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்ரிக்காவில் இருந்து யுரேசியாவுக்கு சென்ற மக்கள், நீர் ஆதாரத்தை தேடி, செளதி அரேபியாவுக்கு வந்திருக்கலாம் என ஆராயச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
83 தேஜாஸ் போர் விமானங்கள் - இந்திய விமானப்படை
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பாதுகாப்பு துறைக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் ஒரு மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது.
- அந்த முடிவு, இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தவதற்கு, உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 83 லகுரக தேஜாஸ் போர் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடியில் வாங்குவது ஆகும்.
- இந்த தகவலை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டார்.