Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2021 January  2021 1st Jan 2021


ஃபைஸா் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

  • ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அவசரக்காலங்களில் செலுத்த ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
  • இதன் மூலம், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஏற்கெனவே பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் அந்த தடுப்பூசி, மற்ற பின்தங்கிய நாடுகளுக்கும் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

30 ஆண்டு நடைமுறை அணு உலைகள் பட்டியல் இந்தியா - பாக் பரிமாற்றம்

  • அணு மின் நிலையங்களை தாக்குவதில்லை என இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கையெழுத்தாகி, 1991ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமலுக்கு வந்தது.
  • அதிலிருந்து தொடர்ந்து 30 ஆண்டுகளாக இந்த பட்டியல் ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதற்கான நிகழ்ச்சி இஸ்லாமாபாத், டெல்லியில் உள்ள தூதரகங்களில் நடந்ததாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் சமயத்திலும் இந்த பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.
  • கடந்த 2008, மே 21ம் தேதி இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனது நாட்டு சிறையில் இருக்கும் இந்திய கைதிகளின் பட்டியலை பாகிஸ்தான் ஆண்டுதோறும் அளித்து வருகிறது.
  • அதன்படி, இந்தியாவிடம் நேற்று அது அளித்த பட்டியலில், தனது நாட்டு சிறையில் 270 இந்திய மீனவர்கள் உட்பட மொத்தம் 319 இந்தியர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

நீரிலும், கரையிலும் இயக்கக் கூடிய8வது எல்சியு கப்பல் கடற்படையில் சேர்ப்பு

  • நீரிலும், கரையிலும் இயக்கக் கூடிய 8வது எல்சியு கப்பலை கடற்படையிடம், ஜிஎஸ்ஆர்இ நிறுவனம் வழங்கியது. கொல்கத்தாவை சேர்ந்த ஜிஎஸ்ஆர்இ எனும் கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனம், நீரிலும் கரையிலும் இயங்கக் கூடிய கப்பல்களை கடற்படைக்கு கட்டித் தர ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி 7 எல்சியு கப்பல்கள் வழங்கப்பட்ட நிலையில், 8வது மற்றும் கடைசி கப்பல் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சேர்மன் வி.கே.சக்சேனா தகவல் தெரிவித்துள்ளார்.
  • இந்த கப்பல் அந்தமன் நிகோபர் தீவுகளில் நிலைநிறுத்தப்படும். எல்சியு கப்பல்கள் கரையின் இறுதி பகுதி வரை பயணம் செய்யக் கூடியது. இதன் மூலம் தரைப்பகுதியில் இருந்து பீரங்கி உள்ளிட்ட கனரக பாதுகாப்பு வாகனங்களை இக்கப்பலில் எளிதாக ஏற்றி பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.
  • மேலும், கப்பலில் சிஆர்என்-91 ரக துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நீரிலும், கரையை ஒட்டிய நிலப்பகுதியிலும் தாக்குதல் நடத்த முடியும். முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பட்பத்தில், உள்நாட்டு உபகரணங்கள் மூலம் இக்கப்பல் கட்டப்பட்டுள்ளது.

காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த நபார்டு வங்கி மூலம் ரூ.3384 கோடி தர ஒப்புதல்

  • காவிரி ஆற்றில் உள்ள 18 உபவடிநிலங்களில் உள்ள கட்டமைப்புகள் பழமையானதாக உள்ளது. இதனால் வெள்ள காலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
  • இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், காவிரி உபவடிநிலம், வெண்ணாறு உபவடிநிலம், கீழ் பவானி திட்டம், கீழ் கொள்ளிட உபவடிநிலம், கல்லணை கால்வாய் உபவடிநிலம் மற்றும் பிற திட்டங்களான கட்டளை உயர் மட்ட கால்வாய் திட்டம், நொய்யல் உபவடிநிலம் உள்ளிட்டவற்றின் பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்தது.
  • இதை தொடர்ந்து 90 சதவீதம் நபார்டு கடனுதவி மற்றும் 10 சதவீதம் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டத்துக்காக ₹3384 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி தற்போது ராஜவாய்க்கால் திட்டத்துக்கு ₹184 கோடி, நொய்யல் ஆறு திட்டம், ₹230 கோடி, கட்டமை உயர்மட்ட கால்வாய் திட்டத்துக்கு ₹335.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு வேகமாக நடந்து வருகிறது
  • இந்த நிலையில், காவிரி ஆற்றின் உபவடிநி நிலத்தை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளுக்கு ₹3384 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ₹224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
  • அதில், காவிரி ஆற்றின் பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 33 பேக்கேஜ் பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது. மேல் காவிரி ஆற்று பகுதிகளில் வெள்ள நீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் எளிதாக தண்ணீரை திருப்பி விட்டு டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் செல்லும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
  • இப்பணிகளை மேட்டூரில் இருந்து ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் 16ம் தேதி கல்லணைக்கு வருகிறது. அதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படுகிறது.
  • ₹122 கோடி செலவில் காவிரி உபவடிநிலத்தில் தஞ்சாவூர் பூதலூர் தாலுகாவில் காவிரி ஆற்றில் 17/2 முதல் 22/6 வரையும், ₹102.20 கோடி செலவில் பூதலூர் முதல் திருவையாறு வரை 26/6 முதல் 37/1 வரை காவிரி ஆற்றில் பாசன உட்கட்டமைப்புகளை புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தப்படுகிறது.

ஜிஎஸ்டி டிசம்பர் வசூல் ரூ.1.15 லட்சம் கோடி

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு தொழில்துறைகள் முடங்கியதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய் அடியோடு சரிந்தது. இதனால் ஜிஎஸ்டி வரி வசூலும் மிக குறைவாகவே வந்தது.
  • மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ₹1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அமல்படுத்தியதில் இருந்த சில மாதங்கள் மட்டுமே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ₹1,15,174 கோடி வசூல் ஆகியுள்ளது.
  • இது முந்தைய ஆண்டு டிசம்பரில் வசூலான ₹1.03 லட்சம் கோடியை விட 12 சதவீதம் அதிகம். கடந்த நவம்பர் மாதத்துக்கு 87 லட்சம் ஜிஎஸ்டிஆர் - 3பி படிவங்கள் கடந்த மாத இறுதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  • இதுவரை வசூலான மாதாந்திர ஜிஎஸ்டி வசூலில் இதுவே அதிகபட்ச அளவாகும். ஜிஎஸ்டி வரி ஏய்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் மட்டுமின்றி, பொருளாதாரம் மீட்சி அடைவதன் அறிகுறியாக இந்த வசூல் சாத்தியம் ஆகியுள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கடந்த மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டியில் மத்திய ஜிஎஸ்டி ₹21,365 கோடி, மாநில ஜிஎஸ்டி ₹27,804 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ₹57,426 கோடி அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி மூலம் ₹27,050 கோடி வசூல் ஆகியுள்ளது. செஸ் வரியாக ₹8,579 கோடி வசூலாகியுள்ளது. இதில் இறக்குமதி மூலம் ₹971 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

தாதாசாகேப் தென்னிந்திய சினிமா விருதுகள் 2020

  • தமிழ் சினிமாவில் 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • சிறந்த நடிகர் விருது: தனுஷ் ( திரைப்படம்:அசுரன்)
  • சிறந்த படம்: டூ லெட்
  • சிறந்த நடிகை: ஜோதிகா ( திரைப்படம்: ராட்சசி)
  • சிறந்த இயக்குநர்: ஆர்.பார்த்திபன் ( திரைப்படம்: ஒத்தசெருப்பு சைஸ் 7)
  • சிறந்த இசையமைப்பாளர்: அனிருத்
  • பன்முகத்திறமை வாய்ந்த நடிகர்: அஜித்குமார்
  • ரயில்வே வாரியத்தின் தலைவராக சுனீத் சர்மா பதவியேற்பு

    • இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மா பதவியேற்றார். ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மாவை நியமனம் செய்வதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தனர்.
    • இதற்கு முன், சுனீத் சர்மா கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ரயில்வேவின் பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.
    • மும்பையில் பரேல் பட்டறை தலைமை பணிமனை மேலாளராக இருந்தபோது, மலை ரயில்களுக்கு குறுகிய பாதை என்ஜின்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய தொழில் நுட்பத்தில் வீடு கட்டும் திட்டம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

    • அனைவருக்கும் வீடு என்ற உலக வங்கி திட்டத்தின் அடிப்படையில் வரும் 2023-க்குல் இந்தியா முழவதும் உள்ள அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் 13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
    • அதில் முதற்கட்டமாக 6 லட்சத்து 72 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான ஆலோசனையை தமிழக அரசு வழங்கியுள்ளது. அந்த திட்டத்தின் அடிப்படையில், சென்னையில் கண்ணகி நகர், பெரும்பாக்கம்,செம்மஞ்சேரி மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
    • இந்த திட்டத்தில், பிரதமர் வீட்டு வசதி திட்டம், முதலமைச்சர் பசுமை வீடு திட்டம் , என மத்திய மாநில அரசுகளின் மானியம் மற்றும் பயனாளிகள் பங்கு என இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
    • தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் மோடி, காணொலி மூலம் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக, பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் மூலம் ஏராளமான பொது மக்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share with Friends