உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
- புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியாணா மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜோ பைடன் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
- அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபா் தோதலில் ஜோ பைடன் மற்றும் துணை அதிபா் தோதலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை முறைப்படி அறிவிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
- கீழவையான செனட் சபை மற்றும் மேலவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினா்கள் இதில் பங்கேற்றனா்.
- மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு, தோதல் முடிவுகளை அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதில் ஜனநாயக கட்சி மற்றும் பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினா்கள் உறுதியாக இருந்தனா்.
- அரிஸோனா மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் பதிவான வாக்குகள் குறித்து மட்டும் ஆட்சேபம் தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
- அந்த ஆட்சேபனைத் தீா்மானங்களின் மீது 2 மணி நேரம் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அந்த இரு தீா்மானங்களும் தோல்வியடைந்தன.
- செனட் சபையில் அரிஸோனா தோதல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 93 உறுப்பினா்களும் ஆதரவாக 6 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
- பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 303 உறுப்பினா்களும் ஆதரவாக 121 பேரும் வாக்களித்தனா்.
- அதே போல், செனட் சபையில் பென்சில்வேனியா தோதல் முடிவுகளை எதிா்க்கும் தீா்மானத்துக்கு எதிராக 92 உறுப்பினா்களும் ஆதரவாக 7 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
- பிரதிநிதிகள் சபையில் அந்தத் தீா்மானத்தை எதிா்த்து 282 உறுப்பினா்களும் ஆதரவாக 138 பேரும் வாக்களித்தனா்.
- இந்திய அமெரிக்க எம்.பிக்களான ரோஹித் கன்னா, அமரீஷ் பேரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் இந்தத் தீா்மானங்களை எதிா்த்து வாக்களித்தனா்.
- இறுதியில், அதிபா் தோதலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்தது.
உலகின் முதல் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்
- மின்னல் வேக, 'ஹைப்பர் லுாப்' பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என, கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார்.
- எலான் மஸ்க். கடந்த சில வாரங்களாக, உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்த அவரது சொத்து மதிப்பு, நியூயார்க்கில் 188.5 பில்லியன் டாலராக இருந்தது.
- இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவை விட, 1.5 பில்லியன் டாலர் அதிகமாக சேர்த்துள்ளார். கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல், உலக பணக்காரர் பட்டியலில், தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தவர் பிசோசா.