பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சிறப்பாக வீடு கட்டியதற்கான விருது
- பிரச்னை பொருளாதார நிலையில் பின்தங்கிய ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்காக, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சொந்த வீடு கட்டிக்கொள்ள நிதி வழங்கும் திட்டம், 2015ல் துவங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ், நிதி பெற்று கட்டி முடிக்கப்படும் வீடுகளில், சிறப்பாக கட்டப் பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து, அதன் உரிமையாளர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகின்றது.
- பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், நாடு முழுதும் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில், 88 வீடுகள் விருதுக்காக தேர்வாகின. அதில், மூன்று வீடுகள், ஜம்மு -- காஷ்மீரின், சம்பா, ராம்கர் மற்றும் பாதர்வா ஆகிய இடங்களில் உள்ளன.
- பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சிறப்பாக வீடு கட்டியதற்கான விருது, முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட முதியவரான, அப்துல் லத்தீப் கனாய், 65, என்பவருக்கு, பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சிறந்த கட்டுமானத்துக்கான விருதினை, பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதியாக தமிழகத்தை சேர்ந்த அருண் நியமனம்
- தமிழநாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களின் ராணுவ தலைமையகம் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தலைமை தளபதியாக பணியாற்றி வந்த பி.என்.ராவ் கடந்த 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இதனை தொடர்ந்து தென்பிராந்திய தலைமை தளபதியாக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பொறுப்பேற்று கொண்டார்.
- இதன் பிறகு தீவுத் திடல் எதிரே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1964ம் ஆண்டு பிறந்த இவர், 1982ம் ஆண்டில் தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தார்.
'கோவிஷீல்டு, கோவாக்சின்' தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி
- கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ' கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
- ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.
- தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி தயாரித்துள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.