Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2021 January  2021 18th jan 2021


3 கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல்

  • பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் உட்பட 3 மருந்துகளுக்கு அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது.
  • இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது ஸ்புட்னிக், ஃபைசர், அஸ்டிராஜெனிகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலினமான திருநங்கையர் கேரள அரசு முடிவு

  • கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில அரசு துறைகளுக்கான அனைத்து படிவங்களிலும் பாலினம் என்ற இடத்தில் ஆண் பெண் ஆகியவற்றுக்கு அடுத்ததாக திருநங்கையர் பிரிவினை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
  • கடந்த 2014ல் திருநங்கையருக்கு அரசு தரப்பில் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து அந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை கேரளா பெற்றுள்ளது.

சோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக மோடி தேர்வு

  • குஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் படேல் அறக்கட்டளை தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவி காலியாக இருந்தது.
  • இதில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த பிரதமர் மோடியை தலைவராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறக்கட்டளையில், பாஜ மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தை சேர்ந்த சமூக சேவகர் பர்மர், தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோதியா ஆகியோர் உள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் 'அஸ்மி'

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மிமீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. காலாட்படை பள்ளி மற்றும் டிஆர்டிஓவின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் (ARDE, புனே ஆகியவை இணைந்து இந்த ஆயுதத்தை உருவாகியுள்ளது.
  • நான்கே மாதத்தில் இந்த ஆயுதம் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிஸ்டல் இன்-சர்வீஸ் 9மிமீ வெடிமருந்துகளை இதில் பயன்படுத்த முடியும்.
  • விமான தர அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மேல் ரிசீவர் மற்றும் கார்பன் ஃபைபரை பயன்படுத்தி உலோக 3D அச்சிடுதல் என்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இது தயாராகியுள்ளது.
  • ஆயுதப்படை வீரர்கள், தளபதிகள், விமானக் குழுக்கள், ஓட்டுநர்கள், போர் வீரர்கள், சமூக எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பயன்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் தயாரிப்பு செலவு ரூ. 50,000 ரூபாய் என்பதால் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது. உள்நாட்டு தொழில் நுட்பத்தில் 100 சதவீதம் இது உருவாகப்பட்டுள்ளது என்பது சிறப்பு அம்சமாகும்.

    குஜராத்தில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்கி வைத்தார் மோடி

    • நாட்டில் 27 நகரங்களில் சுமார் 1000 கி.மீ. தூர மெட்ரோ பணிகள் நடந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் சூரத் மெட்ரோ ரயில் திட்டம், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
    • பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விழாவில் கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் கரோலினா மரின் சாம்பியன்

    • பாங்காக்கில் நடைபெற்று வந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) ஜூ யிங்கை (சீனதைபே) மோதிய இந்த போட்டியில், 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற கரோலின் மரின் வெற்றி பெற்று மகுடம் சூடினார்.
    • ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.

    கேரளாவில் உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய யானைகள் பராமரிப்பு சிகிச்சை மையம்

    • திருவனந்தபுரம் அருகிலுள்ள கோட்டூரில் யானை மறுவாழ்வு மையம் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் உலகின் மிகப்பெரிய யானைகள் பராமரிப்பு மற்றும் குணப்படுத்தும் மையமாக அமையவுள்ளது.
    • இந்த புனர்வாழ்வு மையத்திற்கு வரும் யானைகளுக்கு காட்டில் உள்ளதைப் போலவே இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. யானை மறுவாழ்வு மையத்தின் முதல் கட்டம் 2021 பிப்ரவரியில் தொடங்கப்படும்.
    • கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB) நிதியுதவியுடன் ரூ .108 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 16 யானைகள் உட்பட 50 யானைகளை தங்க வைக்கும் வசதி இந்த மையத்தில் உள்ளது.
    • இந்த திட்டம் மூலமாக நெய்யர் அணையில் பல்வேறு நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பு அணைகள் அமைக்கப்படுவதோடு, 176 ஹெக்டேர் வனப்பகுதிகளில் பரந்து கிடக்கும் மையத்தில் யானைக் கன்றுகளை பராமரிப்பதற்கான சிறப்பு வசதிகளும் இருக்கும்.
    • மேலும் யானை சாணத்திலிருந்து காகிதத்தை தயாரிப்பதற்கான ஒரு அலகு மற்றும் கழிவுகளிலிருந்து உயிர்வாயு தயாரிக்கும் அமைப்பு அமைக்கப்படும்.
    • மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளை சேகரித்து அகற்ற சிறப்பு வசதிகள் வழங்கப்படும். திட்டம் முடிந்ததும் ஒவ்வொரு நாளும் 250-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவர். இந்த திட்டம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அருகிலுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு மையத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share with Friends