மொழி, கலாசாரத்தை பரப்ப டெல்லியில் தமிழ் அகாடமி
- தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் விதமாக டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கவும், இதன் மூலம் தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் டெல்லி துணை முதல்வரும், கலை கலாச்சார மொழித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா அறிக்கை வெளியிட்டார்.
- இதை தொடர்ந்து டெல்லியில் தமிழ் அகாடமி அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், அகாடமிக்கு துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிசோடியா தலைவராக உள்ளார்.
- துணைத்தலைவராக என்.ராஜூ உள்ளார். இவர்கள் இருவருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். முதன்மை செயலாளர் (நிதித்துறை), செயலாளர் (கலை, கலாச்சாரம், மொழி) ஆகியோர் அரசு துறையின் சார்பில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
12,638 வைரங்கள் பதித்த மோதிரம் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்
- கின்னஸ் உலக சாதனையில், ஒரு வைர மோதிரம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதிரத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உண்மையான வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது.
- மீரட்டைச் (Meerut) சேர்ந்த ஜூவல்லரி டிசைனர் தான் இந்த மோதிரத்தை உருவாக்கியுள்ளார். உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த இளம் நகை வடிவமைப்பாளரான ஹர்ஷித் பன்சால் இந்த மோதிரத்தை வடிவமைத்துள்ளார்.