Easy Tutorial
For Competitive Exams

Current Affairs - தமிழ் 2021 January  2021 22nd jan 2021


காடிசன்- சிங்கர் சிக்கலை தீர்த்த இந்திய கணக்கு புலி ஸ்ரீவத்சாவுக்கு விருது

  • குவாண்டம் மெக்கானிக்சுடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடுகளுக்கு கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகியோர் கடந்த 1959ம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளியிட்டனர். இந்த கோட்பாட்டிற்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமலேயே இருந்தது.
  • சிக்கலான இந்த கணிதத்திற்கு இந்தியாவை சேர்ந்த நிகில் ஸ்ரீவத்சவா தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இவரோடு அமெரிக்காவின் ஆடம் மார்க்கஸ், யேல் பல்கலைக் கழகத்தின் டேனியல் ஸ்பீல்மன் ஆகியோரும் காடிசன்-சிங்கர் மற்றும் ராமானுஜன் வரைபடத்திற்கு தீர்வு கண்டுள்ளனர்.
  • இதற்காக இவர்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு கணித விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது 2021ம் ஆண்டுக்கான, 'மைக்கேல் அண்ட் ஷீலியா ஹெல்டு' விருதுக்கு மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • இம்மூவரின் கண்டுபிடிப்பும் அடுத்த தலைமுறை கணினி அறிவியலாளர்களை ஊக்கப்படுத்தும் என விருது வழங்கும் குழுவினர் கூறி உள்ளனர். விருது பெறும் மூவருக்கும் ரூ.74 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

அமலுக்கு வந்தது அணு ஆயுத தடை ஐநா முடிவுக்கு இந்தியா எதிர்ப்பு

  • இரண்டாம் உலகப் போரின் முடிவில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதலால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் பேரழிவை எதிர்கொண்டன.
  • இதனால், சமூக செயற்பாட்டாளர்கள் அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான முயற்சிகளையும் ஐநா தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.
  • பல நாடுகளின் ஒருமித்த கருத்தால் கடந்த 2017ம் ஆண்டு இதற்காக சிறப்பு தீர்மானம் கொண் வரப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு 120 நாடுகள் ஆதரவளித்தன. எனினும், அணு ஆயுதங்களை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா மற்றும் வல்லரசு நாடுகள் 9 மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
  • எனினும், வல்லரசு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் ஜனவரி 22ம் தேதி முதல் முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • சர்வதேச அணு ஆயுத தடையானது ஜனவரி 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, இனி அணு ஆயுதங்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம்.
  • இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அணு ஆயுதங்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான ஜப்பானும் ஐநா.வின் முடிவை ஒப்புக் கொள்ளவில்லை.

Share with Friends