Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்

இந்திய பொருளாதார இயல்புகள்

உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் எல்லார்க்கும் வேண்டும். நாம் உண்ணும் அரிசி, கோதுமை போன்றதானியங்கள் நிலத்தில் பயிரிடப்படுகின்றன. உழவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதனைவேளாண்மைத் தொழில் என்று அழைக்கிறோம். மனிதன் கண்ட முதல் தொழில் பயிர்த்தொழில் ஆகும்.

மழை, குளிர், வெயில் இவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகக் குகையில் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் வீடுகட்டி வாழத் தொடங்கினான் ; நகரங்களும் உருவாயின. மனிதனின் தேவைகளும் பெருகின.

தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஆடைகள், காலணிகள், மிதிவண்டிகள், மகிழ்வுந்துகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல பொருள்களைத் தொழிற்சாலைகளில் மனிதன் உற்பத்தி செய்கிறான்.

அன்றாட வாழ்வில், நாம் பல பொருள்களைப் பயன்படுத்துகிறோம். இப்பொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பதற்கும், வாங்குவதற்கும், பொருள்களைச் சேமிப்பதற்கும் பணம் நமக்குப் பயன்படுகிறது. பணத்தைக்கூட நாம் சேமித்து வைத்தால் வீட்டிற்கும், நாட்டிற்கும் நல்லது.

உடல் வளர்ச்சிக்கு உணவு தேவைப்படுகிறது. அறிவு வளர்ச்சிக்குக் கல்வி தேவைப்படுகிறது. நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மருத்துவம் தேவைப்படுகிறது. கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்களும், நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவர்களும் பணியாற்றுகிறார்கள். பல்வேறு மக்கள் பணிகளை அரசு ஊழியர்கள் ஆற்றுகிறார்கள்.

உழவர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பங்காற்றி நாட்டின் வருமானத்தைப் பெருக்கு கிறார்கள். எனவேதான், இதை நாட்டு வருவாய் என்கிறோம். தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானத்தைத் தனிநபர் வருமானம் என்று சொல்கிறோம்.

சிலர், வருமானம் ஈட்ட இயலாத நிலையில் உள்ளனர் அல்லவா? அவர்களுக்கும் உணவு, உடை, வீடு போன்றவற்றை வழங்க வேண்டும். அரசு இவர்களுக்கும் தேவைகளை வழங்குகிறது. இதனால், அனைவரும் அவரவர்க்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைப் பெறுகிறார்கள். இதை நாம் பகிர்வு என்கிறோம்.

1. உற்பத்தி
2. நுகர்ச்சி
3. பகிர்வு
ஆகிய மூன்றும் பொருளாதாரத்தின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. உற்பத்தி என்றால் என்ன என்று பார்த்தோம். உணவு உற்பத்தி பற்றியும், உடை உற்பத்தி மற்றும் வீடு கட்டத் தேவையான கட்டுமானப் பொருள்கள் யாவை என்பன பற்றியும் அறியலாம். உழவர்களின் உழைப்பால் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து நாட்டிற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள்.

சரி, இப்போது உற்பத்தி செய்துவிட்டோம். உற்பத்தி செய்த பொருள்கள் உடனே மக்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடுமா? அவற்றை யாராவது வாங்கி, வண்டியில் ஏற்றிக் கடைகளுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். அப்போதுதானே நம்மால் கடைக்குச் சென்று நமக்குத் தேவையானவற்றை வாங்கமுடியும். வாங்குவதும், விற்பதும் நடை பெறும் இடம் சந்தை என அழைக்கப்படுகிறது. மக்கள் சந்தையில் பொருள்களை வாங்கித் தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வதையே நாம் நுகர்ச்சி என்று குறிப்பிடுகிறோம்.

தேவைகள் பெருகப்பெருக உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு நடவடிக்கைகளும் பெருகிக்கொண்டே செல்கின்றன. இதையே பொருளாதார பொருள்களை வாங்கி விற்பதற்கு வணிகம் வளர்ச்சி என்று அழைக்கிறோம். என்று பெயர். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Share with Friends