தொழில் வளர்ச்சி
பின்வரும் முக்கிய நோக்கங்களுக்காக தொழில் வளர்ச்சி இன்றியமையாததாகும்.
1. வருவாயை உயர்த்துதல்
2. தேவையை நிறைவேற்றுதல்
3. ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள பாகுபாடு
4. உபரியான தொழிலாளர்களைப் பயன்படுத்துவது
5. பொருளாதாரத்தை வலுவுடையதாக்கல்
6. பாதுகாப்பு நோக்கம்.
7. அடிப்படைத் தொழில்கள்.
1948- ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை:
இந்திய அரசு தொழில் வளர்ச்சியில் நேரடியாகப் பங்கு பெற முன்வந்தது. ஆனால் அதே நேரத்தில் அரசின் பொருள் வளம் தொழில் வளர்ச்சியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமளவிற்கு இல்லையென்பதையும் உணர்ந்தது. ஆதலால் தொழில் வளர்ச்சியில் தனியாருக்கும் பங்குள்ள ஒரு கூட்டுப் பொருளாதாரத்தை உருவாக்க முடிவு செய்தது. இந்த அடிப்படையில் அரசு தனது தொழிற்கொள்கையை விரிவாக அறிவித்தது.
கூட்டுப் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி தொழில்களைக் கீழ்க்கண்ட நான்கு வகைகளாகப் பிரித்தது.
1. இராணுவத் தளவாடங்கள், குண்டுகள் உற்பத்தி செய்தல், அணுசக்தியை உருவாக்குதல்.
2. நிலக்கரி, இரும்பு, தந்தி, விமானம் கட்டுதல், கப்பல் கட்டுதல், தொலைபேசி, வானொலி தொடர்பான பொருட்களைத் தயாரித்தல், சுரங்க எண்ணெய் எடுத்தல் ஆகியவை இரண்டாம் வகைத் தொழில்களாகும்.
3. மூன்றாவது எந்திரங்கள் உற்பத்தி, உர உற்பத்தி போன்ற அடிப்படைத் தொழில்களின் வளர்ச்சிக்காக அரசு திட்டமிட்டு அவற்றைச் செயல்படுத்தலாம்.
4. பிற தொழில்களை எல்லாம் தனியாரும் கூட்டுறவுத் துறையினரும் ஏற்று நடத்தலாம். இவற்றிற்கு அரசின் உதவிகள் கிடைக்கும். 1948-வது ஆண்டு கொள்கை கலப்புப் பொருளாதார அடிப்படையைக் கொண்டது.
1948- ஆம் ஆண்டின் தொழிற்கொள்கை எட்டு ஆண்டுகள் நடைமுறையில் இருந்தன. இந்தக் காலத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.
- இந்தத் தொழிற்கொள்கை தொழில்களை மூன்று வகைகளாகப் பிரித்தது. ராணுவத்தளவாடங்களையும், குண்டுகளையும் உற்பத்தி செய்தல், இரும்பு எஃகுத் தொழில், நிலக்கரி, சுரங்க எண்ணெய், விமானம் கட்டுதல், விமானப் போக்குவரத்து, இரயில் போக்குவரத்து போன்ற 17 தொழில்கள் முதல் வகையைச் சேரும்.
- இந்தத் தொழிற்கொள்கை பாகுபாடு கட்டுப்பாட்டுடன் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. அரசின் விருப்பப்படி பகுப்பு முறையை மாற்றிக் கொள்ள வழியுண்டு.
- சிறு தொழில்களை வளர்க்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இதற்காகப் பயிற்சியளித்தல், தேவையான வசதிகள் செய்து தரல், தொழிலாளர்களுக்குத் தூண்டுதல் அளித்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமென்றும் அறிவித்தனர்.
- நாட்டின் பல பகுதிகளிலும் ஒன்று போல் தொழில் வளர்ச்சியடையச் செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்கும்.
- திறமை மிக்கத் தொழிலாளர்களின் பற்றாக்குறையைப் போக்க அரசு தக்க பயிற்சியளிக்க வழி செய்யும்.
- ஜனதா அரசு இத்தொழிற்கொள்கையை அறிவித்தது. இந்தக் கொள்கையானது கிராமத் தொழில்கள், சிறு மற்றும் குடிசைத் தொழில்களை , மறுவரையறை செய்தது. சிறு தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 180-ல் இருந்து 500 ஆக விரிவடையச் செய்தது.
- முதல் முறையாக சிறிய அலகு (Tiny Unit) விவரிக்கப்பட்டது. 50,000 (1971 சென்செஸ்)க்கும் குறைவான மக்கள் தொகை உள்ள கிராமம் மற்றும் நகரங்களில் ரூ1 லட்சத்துக்கும் குறைவான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்யப்பட்டது.
- இக்கொள்கையானது(Industrial Policy Statement)வேளாண்மைத் துறை மற்றும் தொழில் துறைக்கு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
திரு. சுபிமால் தத் தலைமையில் தொழிற்சாலைகளின் உரிமக் கொள்கையின் மீது மற்றுமொரு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தத் குழு என்று அழைக்கப்பட்டது.
தத் குழுவின் பரிந்துரைகள்:- பெரும் தொழிற்குழுமங்களுக்கு மட்டும், முதன்மை மற்றும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் அமைப்பதற்கு உரிமம் வழங்க வேண்டும்.
- தொழில் தொடங்குவதற்கான உரிமம் தொடர்பான கொள்கையை மறு ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.
- பெரும் நிறுவனம் மற்றும் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஏகபோக உரிமையை கையாள, ஏகபோக உரிமை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
- தொழிற்சாலைகளை முதன்மைத் துறைகள், பிற முதன்மைத் துறைகள், ஒதுக்கீடு துறைகள் என்று வகைப்படுத்த வேண்டும்.
- வர்த்த கத்தில் ஏகபோக உரிமையை தடுக்கும் சட்டம் (Monopolistic & Restrictive trade Practices Act 1969)
- பொருளாதார அமைப்பில் ஒரு சிலரிடம் மட்டும் பொருளாதார வலிமை குழுமி இருப்பதை உறுதி செய்யவும்.
- வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை தடுக்கும் சட்டமானது பொருளாதார சக்திகள், வர்த்தகம், நுகர்வோரின் விருப்பம் ஆகியவற்றில் ஏகபோக உரிமைக் கொள்வதை தடை செய்கிறது.
முன்னர் இயற்றப்பட்ட சட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவும், தடைகளை நீக்கவும் இச்சட்டம் இயற்றப்பட்டது. FERA பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காக்கவும் ஒழுங்குபடுத்தவும் இயற்றப்பட்டது. இதில் மிகவும் கடுமையான விதிகள் உள்ளன. இதை மீறும் போது (அ) குற்றம் விளைவிக்கும் போது FERA மூலம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
1988 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை (இராஜீவ் காந்தி அரசின் கொள்கை):- பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிக்குத் தேவையான கட்டுமானங்களை அளிக்க வேண்டும். ( தொலைத் தொடர்பு, மின்சாரம், தண்ணீர்) .
- உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்து.
- உரிமம் பெறும் முறை 8 துறைகளை தவிர பிற துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
- தனியார் முதலீடுகள் அதிகளவு அனுமதிக்கப்பட்டது.
- அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
- உற்பத்தியில் நிலையான வளர்ச்சி.
- இலாபகரமான வேலைவாய்ப்பு.
- மனித வளத்தை முழுமையாக பயன்படுத்துதல்.
- தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1955- ம் ஆண்டு திட்டக்குழு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டை கண்டறிய கார்வே தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- 2வது 5-ஆண்டு திட்ட காலத்தில் சிறு தொழில்களைப் பற்றி ஆராய்ந்த ஜப்பான் வல்லுநர் குழு, தொழிற்பேட்டைகள் அமைக்க பரிந்துரை செய்தது.
- எஸ்.பி. குப்தா என்ற திட்ட குழு உறுப்பினர் 10-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் சிறு தொழில்களுக்கு வரிச்சலுகை அளிக்க பரிந்துரை செய்தார்.
நடைமுறைக்கு வந்த நாள் 02.10.2006 முதலீட்டு உச்ச வரம்பு அடிப்படையில் தொழில்கள் பிரிக்கப்பட்டன.
இந்திய தொழில் முன்னேற்ற வங்கி IDBI (Industrial Development Bank of India):- 1964-ல் தொடங்கப்பட்டது.
- 1976-ல் தன்னாட்சி அமைப்பாக மாறியது.
- 1976-ல் இருந்து அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
- 1976-க்கு முன் RBI - ன் கட்டுப்பாட்டில் இருந்தது.
- வளர்ச்சி வங்கிகளில் தலைமை வங்கியாக செயல்பட்டது.
- இந்த கழகம் தனியார் தொழில், சிறு தொழில், நடுத்தர தொழில்களுக்கு நடுத்தர நீண்டகாலக் கடன்களை வழங்குகிறது.
- கூட்டுறவுத் துறை தொழில்களுக்கும் கடன் வழங்குகிறது.
- பன்னாட்டு மூலதன சந்தையிலிருந்து அந்நிய செலவாணியை கடனாக வழங்குகிறது.
- 1994 முதல் நிறுவனமாக மாற்றப்பட்டு தனியார் வங்கியாக செயல்படுகிறது.
- இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்
- ஐந்து ஆண்டு திட்டம்-மாதிரிகள் - ஒரு மதிப்பீடு
- நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
- வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு
- தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி
- கிராம நலன் சார்ந்த திட்டங்கள்
- சமூகம் சார்ந்த பிரச்சினைகள்
- தமிழகத்தின் பொருளாதார போக்கு
- இந்திய பொருளாதாரம் - General Prepare Q&A