Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2018 Page: 3
57085.சொல்லைப் பொருளோடு பொருத்துக:
சொல் பொருள்
(a) வனப்பு 1.காடு
(b) அடவி 2.பக்கம்
(c) மருங்கு 3.இனிமை
(d) மதுரம் 4.அழகு
2 1 4 3
3 2 1 4
4 1 2 3
1 2 3 4
57086.பிழையற்ற வாக்கியம் எது?
ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
57087.எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு
செயப்பாட்டு வினைத் தொடர்
கட்டளைத் தொடர்
அயற்கூற்றுத் தொடர்
செய்வினைத் தொடர்
57088.பொருத்துக :
(a) என்றல் 1.முற்றும்மை
(b) நுந்தை 2.குறிப்பு வினைமுற்று
(c) யாவையும் 3. மரூஉ
(d) நன்று 4. தொழிற்பெயர்
4 3 1 2
3 4 2 1
2 4 1 3
4 3 2 1
57089.உம்மைத்தொகையில் உம் என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.
முதலில் வரும்
இடையில் வரும்
இடையிலும் இறுதியிலும் வரும்
இறுதியில் வரும்.
57090.ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
மூன்றாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
57091.பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
மொழியமுது
அடிமலர்
தமிழ்த்தேன்
கயற்கண்
57092.தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு
கீழ்க்கதுவாய் மோனை
கூழை மோனை
ஒருஉ மோனை
மேற்கதுவாய் மோனை
57093."உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?
கற்றா
கன்றா
கறா
கன்று
57094.“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி”
இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?
மேற்கதுவாய் மோனை
கீழ்க்கதுவாய் மோனை
கூழை மோனை
ஒரூஉ மோனை
57095.கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
வினைத்தொகையில் வல்லினம் மிகாது
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
57096.தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு
பண்புத்தொகை
அன்மொழித்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
57097.பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்
மு.சி. பூர்ணலிங்கம்
சி.வை. தாமோதரனார்
மறைமலையடிகள்
திரு.வி. கலியாண சுந்தரனார்
57098.எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும்
இவ்வடி இடம் பெற்ற நூல்
குற்றாலக் குறவஞ்சி
முல்லைப் பாட்டு
மதுரைக் காஞ்சி
திருமுருகாற்றுப்படை
57099.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் - என அழைக்கப்படும் நகரம்
திருநெல்வேலி
தஞ்சை
திருச்சி
மதுரை
57100."உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
ஜி.யு. போப்
கால்டுவெல்
பாரதிதாசன்
பாரதியார்
57101.நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாட்கத் தொண்டாற்றியவர் யார்?
தவத்திரு சங்கரதாஸ்
பரிதிமாற் கலைஞர்
பம்மல் சம்பந்தனார்
திண்டிவனம் ராமசாமிராஜா
57102.கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
கரைவெட்டி
கோவன்புத்தூர்
வெள்ளோடு
சித்திரங்குடி
57103.ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
மேற்கு வங்காளம்
குஜராத்
உத்தராஞ்சல்
உத்தர பிரதேசம்
57104.கண்ணதாசன் படைத்த நாடகம்
மாங்கனி
ஆட்டனத்தி ஆதிமந்தி
கல்லக்குடி மகா காவியம்
இராசதண்டனை
Share with Friends