Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2012 Page: 2
57865.வேளாண்மை வேதம் எனப்படுவது
இனியவை நாற்பது
முதுமொழி
ஏலாதி
நாலடியார்.
57866.வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது ?
அகநானூறு
சங்க இலக்கியம்
குறுந்தொகை
திருக்குறள்.
57867.செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கு அரிய செய்கலா தார் - தவறான கூற்றைச் சுட்டுக
அடி இயைபு மட்டும் வந்துள்ளது
அடி எதுகை சீர் எதுகை வந்துள்ளது
அடி மோனை சீர்மோனை வந்துள்ளது
அடி இயைபு சீர்இயைபு வந்துள்ளன.
57868.பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. உ.ழைப்பின் வாரா அ. உணவு முறை அமைய வேண்டும்

2. உழைப்பிற்குத் தகுந்த ஆ. உடம்பை வளர்ப்போம்

3. உடற்பயிற்சி செய்தால் இ. உறுதிகள் உளவோ ?

4. உடற்கல்வி பெற்று ஈ. உடல்நலம் பெறும்.

குறியீடுகள் :
ஈ இ ஆ அ
இ அ ஆ ஈ
இ அ ஈ ஆ
அ ஈ இ ஆ
57869.தவறான சொற்றொடரை நீக்குக
யாதும் ஊரே யாவரும் கேளீர்
பக்கம் பார்த்து அக்கம் பேசு
பதறிய காரியம் சிதறிப் போகும்
கழுதை அறியுமா ? கற்பூர வாசனை.
57870.வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
வானாகி மண்ணாகி
வளியாகி - ஒளியாகி
வானாகி-ஊனாகி
ஊனாகி-உயிராகி.
57871.இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு

இடும்பைப் படாஅ தவர் - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு :
முற்று மோனை அமைந்துள்ளது
முற்று எதுகை அமைந்துள்ளது
முற்று இயைபு அமைந்துள்ளது
இவை அனைத்தும்.
57872.கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும்

எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம் - இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக :
அடி எதுகை வந்துள்ளது
சீர்எதுகை வந்துள்ளது
அடிஇயைபு அமைந்துள்ளது
இவை அனைத்தும்
57873.அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?
ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
வினாப்பொருள் தரும் வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம்.
57874.தவறான சொற்றொடரை நீக்குக :
நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
யானைவரும் பின்னே மணியோசை வரும் பின்னே
காலையில் கதிரொளி கேணியில் கொட்டியது.
57875.எது நேர்க்கூற்று ?
நான் பரிசு வாங்கி வருவேன் என்று சீதா லதாவிடம் கூறினாள்
மறுநாள் தான் மதுரை செல்வதாக பாரதி கூறினான்
ஐயோ ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
வனஜா, கிரிஜாவிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்.
57876.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்

உழுவா னுலகுக் குயிர்
ஏவல் வழுவான் யார் ?
ஏவல் வழுவினால் என்ன ஆகும் ?
உலகினுக்கு உயிர் யார் ?
உழுபவன் என்ன செய்கிறான் ?
57877.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) - ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !

காரணம் (R) : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு

அமைவது உணர்ச்சி வாக்கியம்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) தவறு ஆனால் (R) சரி
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி. ஆனால் (R) தவறு.
57878.கெடா அ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும்

பொதுவானது
கெடாஅ-விடா அர்
விடார்-வழிவந்த
விடாஅர்-விழையும்
கேண்மையார்- கேண்மை
57879.அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
அறத்தான் வருவதே
புறத்த புகழும்
அறத்தான் புறத்த
அறத்தான்-மற்றெல்லாம்.
57880.பட்டியல் 1ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் I- பட்டியல் II

1.ஆ -அ. அம்பு

2. ஏ- இரக்கம்

3.ஐ - இ. பசு

4. ஒ - ஈ. அழகு
இ அ ஈ ஆ
அ இ ஆ ஈ
இ ஆ அ ஈ
ஈ அ இ ஆ
57881.செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக :
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
மூவேந்தர்கள் ஔவையாரால் புகழ்ந்து பாடப்பட்டனர்
மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார் ஔவையார்
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினாரா ?
57882.பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் அ. எதிர்மறைத் தொடர்

2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது ஆ. பிறவினை

3. தாய் உணவு உண்டாள் இ.செயப்பாட்டு வினை

4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை ஈ. தன்வினை.

குறியீடுகள் :
அ ஆ இ ஈ
ஆ இ ஈ அ
ஈ அ ஆ இ
இ ஈ அ ஆ.
57883.பிறவினைச் சொற்றொடரை கண்டறிக:
எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
எழிலரசி சிலப்பதிகாரம் கல்லார்.
57884.பட்டியல் பல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I- பட்டியல் II

நூல் - நூலாசிரியர்

1. நளவெண்பா அ. முனைப்பாடியார்

2. நைடதம் ஆ. புகழேந்தி

3. அறநெறிச்சாரம் இ. குமரகுருபரர்

4. சகலகலாவல்லி மாலை ஈ.அதிவீரராம பாண்டியர் .

குறியீடுகள்:
ஆ ஈ அ இ
ஆ இ ஈ அ
அ ஆ இ ஈ
ஈ அ ஆ இ
Share with Friends