Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2014 Page: 3
9160.`முத்தொள்ளாயிரம்`- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்
சேர, சோழ, பாண்டியர்
பல்லவர், நாயக்கர், பாளையக்காரர்
முகமதியர், ஆங்கிலேயர், மராட்டியர்
குப்தர், மெளரியர், டச்சுக்காரர்
9161.பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)
4 3 2 1
2 4 3 1
3 2 4 1
1 2 3 4
9162.`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க.
கவிமணி
9163.1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான
`பர்மா வழி நடைப்பயணம்` நூலின் ஆசிரியர்
வைத்தியநாத சர்மா
வெ. சாமிநாத சர்மா
தேவன்
அநுத்தமா
9164.`ஆனந்தத்தேன்` நூலின் ஆசிரியர்
வைரமுத்து
தமிழன்பன்
புதுமைப்பித்தன்
க.சச்சிதானந்தன்
9165.அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(а) (b) (c) (d)
2 4 1 3
1 3 4 2
3 4 2 1
4 3 2 1
9166.பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)
2 1 4 3
1 2 3 4
3 4 1 2
4 3 2 1
9167.வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர்---------
திருமங்கையாழ்வார்
திருமழிசையாழ்வார்
குலசேகராழ்வார்
நம்மாழ்வார்
9168.`பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள` என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
பெரியபுராணம்
9169.திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
சிவப்பிரகாசம்
மணிவாசகர்
9170.வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
நிலம்
மலை
காடு
நாடு
9171.`நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே`
- இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
இரட்டுறமொழிதல்
வட்டப் பலகை
கட்டுச்சோறு
காட்டுக் கோழி
9172.`முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை` - இதில் மகடூஉ என்பது-------
மகள்
மகன்
பெண்
ஆண்
9173.தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
40
35
25
45
9174.கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?
தொகா, தொகை நிலைத் தொடர் 7
தொகை, தொகா நிலைத் தொடர் 9
தொகை நிலைத் தொடர் 6, தொகாநிலைத் தொடர் 9
தொகை நிலைத் தொடர் 9; தொகாநிலைத் தொடர் 6
9175.ஐ,ஒளஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
அளபெடை
எழுத்துப்பேறு
இதழ்குவி எழுத்து
சந்தியக்கரம்
9176.முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
மாடு
மூக்கு
கதவு
மார்பு
9177.கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் `ஒரு பொருட் பன்மொழிச் ` சொல்லைத் தேர்க.
மீமிசை ஞாயிறு
உயர்ந்த கட்டடம்
மேல் பகுதி
மையப் பகுதி
9178.`பெறு` என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
பெற்றான்
பெறுவான்
பெறுகிறான்
பெறுபவன்
9179.பொருத்துக:
(a) இலக்கணமுடையது 1.புறநகர்
(b) மங்கலம் 2.கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி 3.இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல் 4. நிலம்
(a) (b) (c) (d)
2 3 1 4
4 3 1 2
1 2 3 4
3 4 1 2
Share with Friends