Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2019 Page: 2
52513.மிசை- எதிர்ச்சொல் காண்க :
இசை
விசை
கீழ்
நாள்
52514.கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
52515.பொருத்துக
வேற்றுமை - உருபு
(a) நான்காம் வேற்றுமை - இன்
(b) ஐந்தாம் வேற்றுமை - அது
(c) ஆறாம் வேற்றுமை - கண்
(d) ஏழாம் வேற்றுமை - கு
4 1 2 3
3 2 1 4
2 3 4 1
1 4 3 2
52516.கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க
1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
1, 4 சரி
2, 3 சரி
2, 4 சரி
1, 3 சரி
52517.தாயுமானவர் ஆற்றிய பணி எது?
அரசுக்கணக்கர்
தட்டச்சுப்பணியாளர்
பத்திரிக்கையாளர்
இசைப்பணியாளர்
52518.தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள்
குறிப்பிட்டுள்ளார்?
திலகவதி
தில்லையாடி வள்ளியம்மை
ஜான்சிராணி
நாகம்மை
52519.உலகம் உருண்டையானது என்பதைத் தம் தொலைநோக்கியால் கண்டறிந்து சொன்னவர் யார்?
கலீலியோ
நிகோலஸ்கிராப்ஸ்
சி.வி. இராமன்
தாமஸ் ஆல்வா எடிசன்
52520.தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
ஆறுமுக நாவலர்
ஜோசப் கொன்ஸ்டான்
ஜேம்ஸ் பிராங்கா
ஜி.யு. போப்
52521."இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?
கால்டுவெல்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
ஷெல்லி
52522.“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” என்று
தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெருங்குன்று கிழார்
பெருநாவலர்
பாவேந்தர் பாரதிதாசன்
52523.துரை மாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர்
கவிஞர் சுரதா
கவிஞர் மீரான்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
52524.திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
சி.வை. தாமோதரம்
வ. சுப. மாணிக்கம்
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
சீனி. வேங்கடசாமி
52525.பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
பா மு.சி. பூர்ணலிங்கம்
தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
கே. வி. சுப்பையா
எல்.வி. இராமசுவாமி
52526."கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?
கந்தர்வன்
நாஞ்சில் நாடன்
புதுமைப்பித்தன்
வண்ணதாசன்
52527.தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
மரபியல்
பொருளியல்
மெய்ப்பாட்டியல்
களவியல்
52528.பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?
நாடகக்கலை
நாட்டியக்கலை
இசைக்கலை
ஓவியக்கலை
52529.சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர்
அண்ணா
காந்தி
அம்பேத்கர்
மு. வரதராசனார்
52530.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?
துறைமுகம்
சுவரும் சுண்ணாம்பும்
தேன்மழை
சுரதாவின் கவிதைகள்
52531."இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்?
சுரதா
மு. மேத்தா
தாரா பாரதி
அப்துல் ரகுமான்
52532.பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
கண்ணகி புரட்சிக் காப்பியம்
பிசிராந்தையார்
சுவரும் சுண்ணாம்பும்
பாண்டியன் பரிசு
Share with Friends