Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கணம் Question and Answers Page: 5
7110.`தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது` எவ்வகை வாக்கியம்?
தன்வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
7111.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - `குன்றிலிட்ட விளக்கு போல`
இகழ்ச்சி
புகழ்
விளக்கம்
மலை
7112.எள்ளுக்குள் எண்ணெய் போல-உவமையால் குறிக்கும் பொருள்?
ஒற்றுமை
இல்லாத ஒன்று
மறொபொருள்
பதியவைத்தல்
7113.`துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு` - இவ்வடியில் எவ்வகை எதுகை வந்தள்ளது?
ஒருஉ எதுகை
கூழை எதுகை
அடி எதுகை
முற்று எதுகை
7114.இணை எதுகையைக் கண்டறிக -
ஊழையும் உப்பக்கம்
நாறா மலரனையர்
சீரைத் தந்த தமிழே வாழ்க
செல்வத்துள் செல்வம்
7171.தனிநிலை என கூறப்படுவது?
உயிர் எழுத்து
மெய் எழுத்து
அன்மொழித்தொகை
ஆய்த எழுத்து
7172.கீழ்கண்டவற்றுள்ள அஃகேனத்தின் வேறு பெயர் அல்லாதது எது?
ஆய்தம்
முப்பாற் புள்ளி
முப்புள்ளி
தொடர்நிலை
39695.திக்குதல் : பேச்சு :: செவிடு :?
கேட்டல்
காது
ஊமை
அமைதி
39749."உள்ளங்கை நெல்லிக்கனி போல" - இவ்வுவமை விளக்கும் பொருள்
தெளிவு
பாதுகாப்பு
பெரிது
பயனற்றது
39750."மடை திறந்த வெள்ளம் போல" - இவ்வுவமை விளக்கும் பொருள்
ஆரவாரம்
விரைவு
இரைச்சல்
நிதானம்
39752.அகராதி எனும் சொல் எனப் பிரியும்.
அகரம் + ஆதி
அகம் + ஆதி
அகர் + ஆதி
அக + ஆதி
39755.பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.
சால, உறு, தவ, கூர், குறை, நனி
சால
தவ
குறை
உறு
39756.பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக.
சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, லட்சுமி சிவபார்வதி, அன்னை தெரசா
சோனியா காந்தி
ஜெயலலிதா
மம்தா பானர்ஜி
அன்னை தெரசா
39757.பின்வரும் விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க. "வ.உ.சி. சுதேசிக் கப்பலை ஒட்டினார்"
கப்பலை ஒட்டியவர் யார்?
வ.உ.சி. எப்படிக் கப்பலை ஒட்டினார்? .
வ.உ.சி. என்ன செய்தார்?
வ.உ.சி. எந்த கப்பலை ஒட்டினார்?
39758.வீரமாமுனிவர் பிறந்த நாடு எது?
இத்தாலி
பிரான்சு
ஜெர்மனி
இங்கிலாந்து
39759.பிரித்து எழுதுக : "குறுந்தொகை"
குறுமை + தொகை
குறு + மை + தொகை
குறுகிய + தொகை
குறு + தொகை
39761.எதிர்ச்சொல் தருக : "உழைப்பு"
உறக்கம்
களைப்பு
ஓய்வு
சோர்வு
39762."புகழ்ச்சி" எனும் சொல்லின் எதிர்ச்சொல்
நிந்தை
பிறழ்ச்சி
இகழ்ச்சி
மகிழ்ச்சி
39763.எதிர்ச்சொல் தருக : "இம்மை"
செம்மை
வெம்மை
வறுமை
மறுமை
39765.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக.
இரத்தல்      இறத்தல்
 சாதல்     யாசித்தல் 
யாசித்தல்    சாதல் 
இரக்கப்படுதல்    சாதல் 
 சாதல்     இரக்கப்படுதல்
39766."எதுகையமைந்த" தொடரைக் கண்டு வட்டமிடுக.
மிகுதியால் வென்று
மிகுதியால் தகுதியால்
மிகுதியால் மிக்கவை
மிக்கவை செய்தாரை
39767.மோனை, எதுகை, இயைபு - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்,
"கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ?
காய்கறி நெல்கூலம் விளைத்தவர் யாரோ?"
கடுமழை - காய்கறி
உழைத்தவர் - விளைத்தவர்
யாரோ - யாரோ
உழைத்தவர் - காய்கறி
39768.பொருத்துக:
A) என்றுமுள தென்தமிழ்                1) சாத்தனார் 

B) அடிகள் நீரே அருளுக                2) திருவள்ளுவர் 

C) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் 3) கம்பர் 

D) பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்  4) இளங்கோவடிகள்
2 4 1 3
2 3 1 4
3 1 4 2
1 4 3 2
39771.கோடிட்ட இடத்தை நிரப்புக :
பகல் வெல்லும் கூகையை -------------
குருவி
காக்கை
பறவைகள்
சிட்டுக்குருவி
39772.கோடிட்ட இடத்தை நிரப்புக :
செவிக்கு உணவாவது -----------------
புகழ்
கேள்வி
மகிழ்ச்சி
புகழ்ச்சொல்
39773.வாக்கிய வகை கண்டறிதல்.
"விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது"
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
39775.தன்வினை, பிறவினை, செயப்பாட்டுவினை, செய்வினை களைத் தேர்வு செய்க.
"நான் இப்பசுவை வாங்கினேன்"
செயப்பாட்டுவினை
செய்வினை
பிறவினை
தன்வினை
39777.ஒருமை, பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக.
தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது
தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன
தோட்டத்தில் மாடுகள் மேய்ந்தது
தோட்டத்தில் மாடுகள் மேயும்
39778.இயைபு உடைய சொற்றொடர் எது?
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கா
பழமணல் மாற்றுமின், புதுமணல் பரப்புமின்
யாதும் ஊரே ; யாவரும் கேளிர்
39779.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க.
அன்னம், இன்னல், உண்ணல், ஏற்றல்
இன்னல், அன்னம், ஏற்றல், உண்ணல்
ஏற்றல், உண்ணல், அன்னம், இன்னல்
உண்ணல், ஏற்றம், அன்னம், இன்னல்
39780.அகர வரிசைப்படி எழுதுக. , −−−−−
கோபுரம், கோது, கோமான், கோட்டை
கோட்டை, கோமான், கோபுரம், கோது
கோட்டை, கோது, கோபுரம், கோமான்
கோது, கோட்டை, கோமான், கோபுரம்
39781.தொடரும் தொடர்பும் அறிதல்
"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்று பாடல் வரியைப் பாடியவர்
ஒளவையார்
கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி
ஆதிமந்தையார்
பொன்முடியார்
39782.“பாடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயரைக் காண்க.
பாடிய
பாடி
பாடியது
பாடியவர்
39785.சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு
தோகை விரித்து ஆடியது தோட்டத்தில் மயில்
தோட்டத்தில் தோகை விரித்து மயில் ஆடியது
ஆடியது தோட்டத்தில் மயில் தோகை விரித்து
மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது
39786.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
ஒக்கும் ஏழை வாளை அழுத கூரிய கண்ணி
ஏழை வாளை கூரிய கண்கள் அழுத ஒக்கும்
கூரிய கண்கள் வாளை ஏழை அழுத ஒக்கும்
ஏழை அழுத கண்ணி கூரிய வாளை ஒக்கும்
39787.உவமையைப் பொருளுடன் பொருத்துக.
"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டதைப் போல"
பேராசை
இயலாமை
ஒழுக்கமின்மை
பயனின்மை
39788."கூறு” என்பதன் வினையாலணையும் பெயர் யாது?
கூறியவர்
கூற
கூற்று
கூறுதல்
39789."தேடு" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?
தேடல்
தேடிய
தேடி
தேடியவன்
39790.எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"
உணர்ச்சி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்
தன்வினை வாக்கியம்
39791.எவ்வகை வாக்கியம் என தேர்வு செய்க.
"ஆ! கடல் காற்று எவ்வளவு இதமாக வீசுகிறது"
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
39793.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"நாய் பெற்ற தெங்கம் பழம்"
அனுபவிக்கத் தெரியாதவன்
பிறருக்கு கொடுப்பவன்
உருட்டி விளையாடுபவன்
தானே அனுபவிப்பவன்
39794.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"குன்றின் மேல் இட்ட விளக்கென"
உயரமாகத் தெரிகிறது
பாதுகாப்பாக இருக்கிறது
தெளிவாகத் தெரிகிறது
வெளிச்சமாக இருக்கிறது
39795.பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?
பஜாரில் சில வஸ்து வாங்கச் சென்றோம்
பஜாரில் சில பொருள் வாங்கச் சென்றோம்
கடைத் தெருவில் சில திங்ஸ் வாங்கச் சென்றோம்
கடைத் தெருவில் சில பொருள்கள் வாங்கச் சென்றோம்
39799."பளபள" என்ற சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைத் தேர்க :
உம்மைத் தொகை
வினைத் தொகை
இரட்டைக் கிளவி
அடுக்குத் தொடர்
39800."மாநாடு" என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
இடப்பெயர்
வினைத்தொகை
உரிச்சொற்றொடர்
வினைமுற்று
39803."இன்று பார்லி மென்ட் கூடுகின்றது" என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடர் எது?
இன்று லோக்சபை கூடுகின்றது
இன்று இராச்சிய சபை கூடுகின்றது
இனறு சட்டசபை கூடுகின்றது
இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது
39804.எதிர்ச்சொல் தருக. "அரிது"
பெரிது
சிறிது
எளிது
இனிது
39805.எதிர்ச்சொல் தருக. “வன்மை"
நன்மை
மென்மை
உண்மை
தன்மை
39806.ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிதல்.
"ஆ" என்பது
யானை
பசு
ஆடு
குதிரை
39807.ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண்.
"நொ"
பூமி
சாமி
வம்பு
துன்பம்
Share with Friends