Easy Tutorial
For Competitive Exams

GS National Movement Indian National Movement Tamil - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test 1

56082.யாருடைய வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு பாளையங்களாக மாற்றப்பட்டன?
அரியநாதர்
நாகம நாயக்கர்
விஜய ரங்க சொக்கநாதர்
திருமலை நாயக்கர்
Explanation:

தளவாய் அரியநாயக முதலியாரின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் முன்னாள் பாண்டியப் பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் வகைப்படுத்தப்பட்டு, 72 பாளையங்களாக மாற்றப்பட்டன.
56083.மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பிய நாயக்கர்?
அரியநாதர்
நாகம நாயக்கர்
விஸ்வ நாத நாயக்கர்
திருமலை நாயக்கர்
Explanation:

விஸ்வநாத நாயக்கர் மதுரையைச் சுற்றி வலிமை மிகுந்த ஒரு கோட்டையை எழுப்பினார். அதில் 72 அரண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைமையின் கீழ் இருந்தன.
56084.சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் யாருடைய துணையுடன் இராணியாக முடிசூடினார்?
மருது சகோதரர்
வேங்கண் பெரிய உடைய தேவர்
கோபால நாயக்கர்
முத்து ரங்கர்
Explanation:

ஆற்காடு நவாப் வேலு நாச்சியாருடைய படை முன்னேறி வருவதைத் தடுக்கப் பல தடைகளை ஏற்படுத்தினார். எனினும் நாச்சியார் அனைத்துத் தடைகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிவகங்கைக்குள் நுழைந்தார். ஆற்காடு நவாப் தோற்கடிக்கப்பட்டு, சிறைவைக்கப்பட்டார். சிவகங்கையை மீண்டும் கைப்பற்றிய நாச்சியார் மருது சகோதரர்களின் துணையுடன் இராணியாக முடிசூடினார்.
56085.எந்தப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களால் பாளையக்காரர் முறை பின்பற்றப்பட்டு வந்தது?
e.
கல்யாணி
துவார சமுத்திரம்
வாரங்கல்
வாதாபி
Explanation:

பாளையக்காரர் முறை 1530களில் தோன்றியது. வாராங்கலை ஆண்டுவந்த காகதிய அரசில் இந்த முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது. அரசருக்குத் தேவையானபோது போரில் வீரர்களுடன் பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு பாசறையையும் பெரும் நிலப்பரப்பையும் வைத்திருப்பவரையே பாளையக்காரர் என்ற சொல் குறிக்கிறது.
56086.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. பாளையக்காரர் முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர்.
ii. பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

பாளையக்காரர் முறை தோன்றுவதற்கு முன்னால், சேர்வைக்காரர்களும் தலையாரிகளும் காவல் பணிகளுக்காக வரி வசூலித்து வந்தனர். பாளைய முறை அறிமுகமான பிறகு, பாளையக்காரர்கள் சேர்வைக்காரர்கள், தலையாரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள்.
56087.கூற்று (கூ): பாளையக்காரர் அரசருக்கு தேவையானபோது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர்.
காரணம் (கா): இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

பாளையக்காரர் அரசருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகச் செலுத்துவதற்கும் தேவையானபோது படைவீரர்களை அனுப்புவதற்கும் பாளையத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும் கடமைப்பட்டவர். இந்தக் கடமைகளையும் பிற பணிகளையும் செய்வதற்குத் தேவையான நிதியாதாரத்தைப் பெற சில கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. அக்கிராமங்களில் அவர் வரிவிதித்து நிதி திரட்டினார்.
56088.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
ii. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளில் மட்டும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கூடுதலாகப் பல பட்டங்களும் சிறப்புரிமைகளும் பாளையக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிமையியல் பிரச்னைகளிலும் குற்றவியல் பிரச்னைகளிலும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு.
56089.பாளையங்கள் பூகோளரீதியாகப் பரவியிருந்ததன் அடிப்படையில் எத்தனையாக பிரிக்கலாம்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Explanation:

பாளையங்கள் பூகோளரீதியாகப் பரவியிருந்ததன் அடிப்படையில் மேற்குப் பாளையங்கள், கிழக்குப் பாளையங்கள் எனப் பிரிக்கலாம். மறவர் குறுநில மன்னர்களிடமிருந்த பாளையங்கள் பெரும்பாலும் திருநெல்வேலியின் மேற்குப்பகுதியில் அமைந்திருந்தன. கிழக்குப் பகுதியில் உள்ள கரிசல் நிலப்பரப்புகளில் தெலுங்கு பேசுவோர் குடியேறியிருந்தார்கள். அவை நாயக்கர் பாளையக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
56090.யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
1764
1763
1765
1762
Explanation:

கம்பெனி நிர்வாகத்துக்குத் தெரிவிக்காமல் பாளையக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த யூசுப் கான் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
56091.சின்னமலையின் இறுதிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1805
1806
1803
1804
Explanation:

சின்னமலையின் இறுதிப் போர் 1805இல் நடைபெற்றதாகும். இப்போரில் சின்னமலை அவருடைய சமையல்காரரால் துரோகம் இழைக்கப்பட்டார். தீரன் சின்னமலை சிவகிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
Share with Friends